Featured Posts

  • Prev
  • Next

“விஞ்ஞான விபரீதங்கள்”-ரஹ்மத் ராஜகுமாரன்

Posted on : 01-09-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ரஹ்மத் ராஜகுமாரன்

“உனக்கு ஏதாவது தீங்கு வந்தால் அது உன்னால் தான் வந்தது.” குர்ஆன் (4:79)

விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராது. ஆனால் பொறுப்பில்லாத விஞ்ஞான வளர்ச்சி நிச்சயம் பேரழிவைத் தரும். மனிதன் இன்று தன் சமுதாயத்தையே அழித்துவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். அணுசக்தி விஞ்ஞானம் என்பது குடிசைத் தொழில் போல ஆகிவிட்டது. அணு ஆயுதங்களின் உள்ளே உள்ள ரேடியோ ஆக்டிவ் கதிர் வீச்சு சமாச்சாரங்களை உடனடியாகக் கொல்வது கஷ்டம்.

அவற்றை வெடிக்க விடாமல் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றின் கதிர் வீச்சை அணைக்க ஆணிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். அணுசக்தி உற்பத்தி செய்த பின் அந்த யுரேனியத்தின் சாம்பலை என்ன செய்தாலும் எங்கு புதைத்தாலும் அங்கு கதிர்வீச்சு நிச்சயம் கசியும் ஆபத்து உண்டு. நிறைய தேள்களை மடியில் கட்டிக் கொண்டு பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டும் நவீன உலகத்தில் பிரவேசிக்கிறோம்.

அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ததைப் போன்று பொறுப்பற்ற செயல் மனித சரித்திரத்தில் இல்லை.
“தீமை செய்தவர்களையே தீமை சூழ்ந்து கொள்ளும் குர்ஆன்” (35:43)

அல்லாஹ்வின் வேதத்தை – இந்த வரியை யார் அவர்களுக்கு ஓதிக்காட்டுவது? அடுத்த வசனத்தை கொஞ்சம் பாருங்கள் விஞ்ஞானத்தின் அகங்காரங்கள் தெரியவரும்.
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களின் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.” (குர்ஆன் 30:41).

கடலிலும், சமுத்திரங்களிலும் உள்ள உயிரினங்கள் இன்னும் 30 வருஷங்களில் செத்துப்போகும் என்று கடல்வாழ்வின் உயிரியலாளர்கள் சொல்கிறார்கள். சென்ற 60 வருஷங்களில் நாம் கடலில் கொட்டிய குப்பைகள் அளவில்லாதவை பிரிட்டன் மட்டுமே ஐரிஷ் கடலில் வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் டன் தொழிற்சாலைக் குப்பையையும், வீட்டுக் குப்பையையும் கொட்டுகிறது. இங்கிலீஷ் கால்வாயில் மட்டும் 80 ஆயிரம் டன் கொட்டுகிறது. மொத்தம் தன்னைச் சுற்றியுள்ள கடல்களில் பிரிட்டன் 2.5 கோடி டன் குப்பையை கொட்டியிருக்கிறது.
கடலில் கொட்டும் குப்பை மீன்களை உடனே கொல்லுவதில்லை. அதில் பொதிந்திருக்கும் ரசாயன விஷங்கள் மெல்ல மெல்லத்தான் கடலின் உயிரினங்களின் உயிரை குடிக்கும். இதனால் சில் மீன்களின் வம்சங்களே நசிந்து போய் எதிர்காலத்தில் மீன் சாப்பிடும் பழக்கத்தைவிட வேண்டியது வரும். இதனால் நம் (Food Cycle) உணவுச் சக்கரம் பாதிப்புக்குள்ளாகும்.அமெரிக்க தேசத்து அலங்கார பொருட்களில் ஒன்றான ‘ஏரோஸல்’ என்ற மருந்தும் செண்டுமாக ‘புஸ்’ அடித்துக் கொள்கிறார்களே அதிலுள்ள ஹலோ கார்பன்கள் அதிக நாள் நம்மைச்சுற்றி விலகாமல் இருந்துவிட்டு பின் நமக்கு ஹலோ சொல்லிவிட்டு பூமியின் மேற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் ‘ஓஸோன்’ வாயுவைத் தின்றுவிடுகிறது. நம் பிரிட்ஜில் பயன்படுத்தும் ‘பிரியான்’ என்கிற வாயும் ஒஸோனை ஓட்டையாக்கிவிடுகிறது.

அந்த ஓஸோன் வாயுபடலம் நம் பூமிக்கு வரும் சூரிய வெளிச்சத்திற்கு பில்டர் போய்விடுகிறது விளைவு? அல்ட்ரா வயலட் வெளிச்சம் நம் மேல் அதிகம் பட ஒரு வகையான தோல் கான்சர் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்ல சூரிய வெளிச்சத்தில் அல்ட்ராவயலட் அதிகரித் தால் பற்பல சின்னச் சின்ன நன்மை செய்யும் பாக்டீரியாக்களெல்லாம் செத்துப் போய் நம்முடைய உணவுச்சக்கரம் இங்கேயும் பாதிக்கப்பட்டு என்ன விளைவு ஏற்படும் என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட உதாரணங்களைத் தவிர இன்னும் எத்தனையோ விஞ்ஞானத்தின் விபரீதங்கள் கடலையும், தரையையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போது (30:41) வசனத்தை திரும்ப படியுங்கள்.
ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நோபல் தற்செயலாக ‘டைனமைட்’ கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிஸரினைத் திரவ ரூபத்தில் இடம் மாற்றும் போது அது வெடித்துவிடும் அசௌகரியம் இருப்பதால். ஒரு நாள் நைட்ரோ கிளிஸரினைப் பக்கத்தில் வைத்திருந்த எரிமலை மண்ணை ‘கிளல்கர்’ என்னும் மண்ணுடன் கலக்க அது சட்டென கட்டி, தட்டிப்போக அதை எடுத்துப் போவது சுலபமாயிற்று. அப்போது ஆரம்பித்த ரத்தகளறி இன்று வரையிலும் அனத்தம். ஜப்பான் நாஹஸாகி, ஹிரோ~pமாவின் வடுவும் மறையவில்லை புண்ணும் ஆற வில்லை.

மக்களின் நன்னைக்காக கண்டுபிடிக்கப்பட்ட அணுசக்தி மக்களை சாவுக்கு அழைத்துப் போனது.
“மனிதர்கள் தீமையைக் கொண்டும் சோதிக்கப்படுவார்கள்.” குர்ஆன் (7:168)”நன்மையுடன் தீமையைக் கலக்கிறார்கள்” (9:102).

வடமாநிலச் சுற்றுலா – 8

Posted on : 25-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by கிளியனூர் இஸ்மத்

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள் அது எங்களுக்கும் உண்டானது. களைப்பை தீர்க்க எங்களின் கைடு ஜெய்மஹாலை காட்டினார். பெரிய ஏரியின் நடுவில் ஜெய்மஹால் அமைந்திருந்தது. இது மன்னர் பீம்சிங்கின் உல்லாச மஹால் இதனுல் அரச பெண்கள் அதாவது பீம்சிங்கின் குடும்பப் பெண்கள் உள்ளே அனுமதி இல்லை இந்த மஹால் முழுக்க முழுக்க மன்னருக்கு மற்றும் ஆண்களுக்கு உல்லாசத்தை கொடுப்பதற்காக வடிவமைத்திருக்கிறார்.

ஜெய்பூர் இளம் சிவப்பு நகர மையத்தில் ஜெய்மஹால் அமைந்திருக்கிறது. மாலை நேரங்களில் ஜெய்பூர் வாசிகள் இங்கு குழுமி உரையாடுகிறார்கள் நடைபயில்கிறார்கள். இவர்களின் வாய்களுக்கு ருசிபார்க்க பலதரப்பட்ட பலகாரங்கள் தள்ளுவண்டியில் தள்ளி விற்கிறார்கள்.

டெம்போவில் அமர்ந்தபடியே கைடு வாயாலயே படம் காட்டினார். இளம் சிவப்பு நகரத்திற்குள் டெம்போ நுழைந்தது. அந்த நகரம் முழுக்க வணிகக் கடைகள். உணவு விடுதி வாசல்களில் வரிசையாக அமர்ந்திருந்த ஏழை பசிக்காரர்கள்;. தினமும் யாராவது ஏதாவது ஒரு நேர்த்திகடனை நிறைவேற்றினால் தான் இவர்களின் பசி தீரும் இல்லையெனில் ஐயோ பாவம் என யாராவது பணம் வைத்திருப்பவர் இரக்கப்பட்டால் அவர்களின் வயிற்றில் உணவு இறங்கும் அவர்களுக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்.


கால்நடைகளுக்கு இளம்சிவப்பு நகரத்தில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோடு அவைகளும் நடக்கின்றன கழிக்கின்றன. சுத்தத்தை பற்றி மனிதர்களே கவலைப்படாத போது கால்நடைகளுக்கு எதற்கு கவலை.

இளம் சிவப்பு நகரத்திற்குள் மியுசியம் இருக்கிறது அதில் மன்னர் அணிந்த உடைகள் உபயோகித்த பொருட்கள் என பலபொருட்களை சிறை வைத்திருந்தார்கள்.

திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை –

Posted on : 23-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

1

திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை – கவிஞர்
இரா.ரவி  editor www.kavimalar.com உலகப் பொதுமறையான திருக்குறளில் 1330
குறள்கள் இருந்தாலும், குடிமை பற்றிய 10 திருக்குறளைக் கடைபிடித்தால் வாழ்வில்
உயரலாம். மனிதர்களில் சிலர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என இருமாப்புடன்
இருக்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் யார் ? உயர்ந்த குடி என்பதற்கு பல்வேறு
விளக்கங்கள் தந்துள்ளார். திருவள்ளுவர் வழியில் வாழ்பவரே உயர்குடி.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 951

எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த
குடி உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி,
நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல
வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன்
உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம்.

ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம்மூன்றும்
இருக்குhர் குடிபிறந் தார். – குறள் 952

உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று உதடு சொல்வதை விட சிறந்தது. உன்னுடைய நல
;ஒழுக்கமான செயலால் உலகம் உன்னை உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று
போற்றும்படியாக வாழ வேண்டும். காஞ்சிபுரத்தில் காமுகன் அர்ச்சகர் தேவநாதன்
உயர்ந்த குடி என்று சொல்லப்படும் அந்தனர் சமுதாயத்தில் பிறந்தவன் தான். ஆனால்
அவனை உலகம் உயர்குடியாக ஏற்பதில்லை. காரணம் உயர்ந்த குடியில் பிறந்தாலும்
ஒழுக்கம் தவறியவன். இழிசெயல் செய்தவன், மனிதனாகக் கூட மதிக்கப்படுவதில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றைக்கும்
பொருந்துவதாக உள்ளது.

பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் – வெ. ஜீவகிரிதரன்

Posted on : 17-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள் கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர்.

இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் “காஸாவை விடுவிப்போம்” என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.
இவர்கள் இத்தாலி, அயர்லாந்து, கனடா, கிரேக்கம், துனிசியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், சைப்ரஸ், லெபனான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். பல்வேறு சமூக தளங்களிலிருந்து வந்தவர்கள். பல்வேறு பணிகளில் உள்ளவர்கள். 2008 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக 17 நாடுகளைச் சேர்ந்த 44 ஆர்வலர்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகில் ஏறி காஸாவுக்குள் நுழைந்தனர்.
இதுபோல ஏறத்தாழ 10 முறைக்கும் மேலாக இவர்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பலமுறை இஸ்ராயீல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாயினர். கடைசியாக கடந்த மே-மாதம் இவர்களின் படகுகள் மீது இஸ்ராயீல் ராணுவம் தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களெல்லாம் பலஸ்தீன பஃதா இயக்கத்தினரோ அல்லது காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினரோ அல்லது ஆயுதம் தரித்த வீரர்களோ அல்ல. மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தரித்திருந்தது “மனித நேயம்” என்ற ஆயுதம் மட்டுமே. இவர்களின் மீதான கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவிலே இஸ்ராயீலின் கோர முகம் வெளிப்பட்டு பல்வேறு நாடுகளும் தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இத்துணை கண்டனங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் மீறி இன்றளவும் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்தே வைத்துள்ளது. குறிப்பாக காஸாவின் கடல் பகுதி முழுக்க இஸ்ராயீல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கென்ன காரணம்? ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலா? அல்லது ஹாமாஸ் அமைப்பு காஸாவிலே மிகுந்த செல்வாக்கோடு இருப்பதாலா? ஹாமாஸ் 2006ம் வருடம்தான் காஸா தேர்தலில் பெரும்பான்மை பெற்றது.
ஆனால், காஸா முற்றுகைக்கான காரணம் 1999லேயே தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

காஸா மீனவர்கள்

நாம் காஸாவைப் பற்றிய தகவலில் சற்று பின்னோக்கி செல்வோம். காசா கடல் பகுதியில் காஸா மீனவர்கள் சுமார் 3000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய, நடுத்தர, பெரிய படகுகள் என சுமார் 700 படகுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஐ.நா.வின் கடல் சார் பொருளாதார சட்டம் பிரிவு எண் 5 இன் படி ஒரு நாட்டின் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதி கடல்சார் சிறப்பு பொருளாதார பகுதியாக கருதப்பட்டு அந்த நாடு அந்த பகுதியிலுள்ள கடல் செல்வங்களை அனுபவிக்கலாம் எனக் கூறுகிறது.
1993 ஆம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி பலஸ்தீனம் காசாவின் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 1978 க்கு முன்பு சினாய் கடற்கரை பகுதி வரையிலான சுமார் 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலஸ்தீன மீனவர்கள் இதன் மூலம் வெறும் 600 சதுர கி.மீட்டருக்குள் முடக்கப்பட்டனர். 1994ம் வருடம் பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாஸர் அரபாத்தும் அன்றைய இஸ்ராயீல் பிரதமர் இட்ஜக் ரபினும் கசாரூஜெரிக்கோ ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி காசா கடல் பகுதியில் 20 கடல் மைல்கள் தொலைவு வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் எகிப்து – இஸ்ராயீல் கடல் எல்லைப் பகுதிகளில் பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

காஸாவின் எண்ணெய் வளம்

இந்நிலையில் 1999ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஜி. குரூப் என்ற பெட்ரோலிய கம்பெனி ஒன்று காஸா கடல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 10 முதல் 15 கடல் மைல் தொலைவு வரை இந்த எண்ணெய்ப் படுகைகள் பரந்து விரிந்து கிடப்பதையும் இதிலிருந்து சுமார் 1.3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி டாலர்களாகும். இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் இதைவிட பல மடங்கு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், காஸா பகுதி இன்னொரு துபையாக மாற வாய்ப்புள்ளதையும் வெளிப்படுத்தியது.
இந்த எண்ணெய் வளம் பலஸ்தீனத்தின் 10 வருட மின்சார தேவையை நிறைவேற்றுவதோடு, ஏற்றுமதி செய்யும் வகையில் ஏராளமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதும், யாசர் அரபாத் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கடலுக்கடியில் குழாய்களை பதித்து எரிவாயு காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தியை துவக்குவது எனவும், உபரி எரிவாயுவை ஏற்றுமதி செய்வது எனவும் திட்டமிடப்பட்டது.

வலிமையும் வளவாழ்வும்

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

வலிமையும் வளவாழ்வும்

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும். இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
“A sound mind in a sound body is a short but full description of a happy state in the world.”
– John Locke (1632-1704)

“Bodily exercise, when compulsory, does no harm to the body. But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind.”
- Plato (427 BC-347 BC) in ‘The Republic’
மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும். இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், ‘The Republic’ எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும். இவர் அழகாகச் சொல்கிறார்: “கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது. ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது.”
இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், ‘ட்யூஷன்’ பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் ‘சுமை தூக்கிகளாக’ ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது. இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, ‘A sound mind in a sound body’ உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.
இவ்வகையில், நமதூரில் இயங்கும் கல்விக்கூடங்கள் எதிலும் இல்லாத ‘குங்ஃபூ’ என்ற ஒரு சிறப்பு உடற்பயிற்சியை இளஞ்சிறார்களுக்குக் கொடுக்க நமதூரின் ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கியுள்ளது. இப்பயிற்சியைச் சோதனை அடிப்படையில், முதலில் 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், தஞ்சையைச் சேர்ந்த சகோதரர் முபாரக் மாஸ்ட்டர்.
52 வயதாகும் இவருக்கு, இக்கலையில் 35 ஆண்டுகளின் பட்டறிவு உண்டு. இவர், ‘The Best Martial Arts Trainer in Tanjore District’ என்ற பாராட்டிற்குச் சொந்தக்காரர். இதுவரை நான்கு Black beltகளைப் பெற்றுள்ளார். இவரின் ஆண் மக்கள் மூன்று பேரும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு ‘பிலேக் பெல்ட்டு’களைப் பெற்றவர்களாவர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் முபாரக் மாஸ்ட்டருக்கு 1500 மாணவர்கள் உள்ளனர். சிறார்களுக்கு இந்த ‘Martial Arts’ கற்றுக் கொடுத்து, ஆண்டு முடிவில் இவரே அவர்களுக்குச் சான்றிதழும் பட்டை (பெல்ட்டு)களும் வழங்குவார்.
ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி இப்பயிற்சியை அறிமுகப்படுத்தியதன் முழுமுதல் நோக்கம், மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் உள்ள தேவையற்ற அச்சவுணர்வைப் போக்கி, அவர்களைத் துணிவுள்ளவர்களாக, அறிவாற்றல் பெற்றவர்களாக, தம் பொறுப்புகளை உணர்பவர்களாக ஆக்குவதேயாகும். வருங்காலத்தில் கிடைக்கும் பெற்றோர்களின் வரவேற்பைப் பொறுத்து, இப்பயிற்சியை மேலும் விரிவாக்கிச் சிறுமியர்க்கும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம். சிறுமியர்க்குச் சில வரைமுறைகளுடன் கொடுக்கப்படும் ‘Tai chi’ என்ற ஒரு வகைப் பயிற்சியாகும் அது. ( A Chinese system of exercises consisting sets of very slow and controlled movements. )
மாணவர்களின் பயிற்சி ஆர்வத்தையும், ஆசானின் பயிற்சியையும் கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்!

மாயவரம் மெது பகோடா

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , ,

0

புவனேஸ்வரி ராமநாதன்.

நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்து விட்டார்கள் என்றால் எங்கள் மாயவரம் பகுதியில் இந்த மெது பகோடாதான் செய்து தருவார்கள். குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்பார்கள். சரியாக 10 நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம். செய்வதும் மிகச் சுலபம். மாலை வேளையில் காபி, டீ, உடன் வைத்து சாப்பிடச் சுவையாக இருக்கும். எங்கள் ஊர் டீக்கடைகளில் இந்த மெது பகோடா ரொம்ப பிரபலம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 2
கடலை மாவு : 100 கிராம்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : வறுக்கத் தேவையான அளவு


செய்முறை:

பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும், பச்சை மிளகாயை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

சூடான எண்ணையில், கலந்து வைத்த மாவை உதிரி, உதிரியாகப் போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இந்த பகோடாவை செய்ய வேண்டும். பகோடா மொறுமொறுவென்று வரும் வரை காத்திராமல்,

முக்கால் பதம் வேகும்போதே எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு பொன் முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த பகோடா பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை கஷ்டமில்லாமலும், ருசித்தும் சாப்பிடுவர்.

Posted by புவனேஸ்வரி ராமநாதன்

Labels: ,

நன்றி : http://maragadham.blogspot.com/2010/08/blog-post_09.html

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

 இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

 ”சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.”

 

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

 இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

 ”பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது” என்று கூறினார்.

 ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

 கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

 மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.”

 இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

 

”இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்” இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

 இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..

 ’புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.”

 என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

 பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ”இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?” என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.

 

ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

 அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ‘பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

 வந்தவர்கள் பதில் சொல்லும் போது ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை” என்றார்கள்.

 வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது” என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

 அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் ‘சகோதரர், சகோதரிகளே..!” என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

 இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

 ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

 ”என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.”

 இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

 விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

 நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்

Source :http://www.ayangudi.net/articles%201.html

அறிஞர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!

Posted on : 07-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

அறிஞர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!

[ ஒரு அறிஞரின் கருத்து நமது கருத்துக்கு மாற்றமானதாக இருக்கின்றது என்பதற்காக அந்த அறிஞரை கேவலப்படுத்தும் வகையில் அவரைப்பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வது நாம் போதிக்கும் குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமானது என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை!

அதுபோல ஒரு அறிஞரின் சில கொள்கைகளில், செயல்களில் நமக்கு உடன்பாடில்லை என்பதற்காக அவரின் அனைத்து செயல்களையும், கொள்கைகளையும் அவை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு உட்பட்ட நிலையில் இருப்பினும் அவற்றை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் சரியான செயல் அல்ல!

பதிலுக்குப் பதில் மாற்றுக்கருத்துடைய அறிஞரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரிலே அந்த அறிஞர்களின் தனிப்பட்டக் குறைகளை சுட்டிக்காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு அதன்மூலம் அவ்வறிஞர்களைப் பற்றிப் புறம்பேசுதல் என்ற பாவத்திற்கு அல்லவா நாம் தள்ளப்படுகின்றோம்!

ஒரு அறிஞரைப் பற்றி தவறான கருத்துக்கள் மக்கள் மன்றத்தில் பரப்பப்படும் போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் புறக்கணிக்கக் கூடிய நிலை ஏற்படுமல்லவா? அதற்கு நாம் காரணமாக வேண்டுமா? இதை நாம் சிந்திக்க வேண்டாமா?]

கிண்டியில் கண்டது!

Posted on : 06-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

எழுதியவர் யுவகிருஷ்ணா

காலில் செருப்பில்லை. கனவுகள் மிதக்கும் கண்கள். மகனையோ, மகளையோ கையில் பிடித்துக்கொண்டு தயக்கத்தோடு நுழையும் பெற்றோர். முகங்களில் எதிர்ப்பார்ப்பும், கவலையும் சரிவிகிதத்தில். அண்ணா பலகலைக்கழக கேம்பஸ் இன்ஜினியரிங் கவுன்சிலிங் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் முகங்கள் மட்டுமே மாறுகிறது. காட்சிகளும், உணர்வுகளும் அதேதான்.

இம்முறை நுழையும்போதே கல்விக் கண்காட்சி கண்ணுக்குப் படுகிறது. கல்லூரிகள் வரிசையாக ‘ஸ்டால்’ அமைத்து மாணவர்களை அசத்துகிறார்கள். ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் மாணவ மணிகளே வருக வருக’வென ப்ளக்ஸ் பேனர்கள். ‘முன்பின் தெரியாதவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டாம்’ என்று ஆங்காங்கே பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கைப் பலகை.

மரத்தடிகளில் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனாயசமாக விரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். நம்மூரில் பணம் புழங்கும் சீசன் இரண்டே இரண்டுதான். ஒன்று தீபாவளி. மற்றொன்று பள்ளி, கல்லூரி திறக்கும் ஜூன், ஜூலை. பணம் புழங்கும் இடமென்பதால் யாராவது சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்து யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் போலிஸார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ‘ரவுண்ட்ஸ்’ வருகிறார்கள்.

கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஒரு விவசாயி. 1161 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மகள் ஆனந்தியோடு வந்திருக்கிறார். “வங்கிக்கடன் வாங்கும் எண்ணம் எதுவுமில்லீங்க. வாங்கினாலும் நாமதான் திருப்பிக் கட்டியாவணும். பொண்ணு மேற்படிப்புக்குன்னு ஏற்கனவே திட்டமிட்டு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். அதை வெச்சு சமாளிச்சுப்பேன்” என்று வங்கிக்கடன் பெற தயக்கம் காட்டுகிறார்.

இந்த தயக்கமே அவசியமற்றது. நான்கு லட்ச ரூபாய் வரை கடன்பெற பிணை (செக்யூரிட்டி) எதுவும் வங்கிகள் இப்போது கேட்பதில்லை. கடன்பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கி இருக்கிறார்கள். வளாகத்திலேயே ஸ்டால்கள் அமைத்திருக்கும் வங்கிகள் விவரங்களை கேட்பவர்களுக்கு விலாவரியாக முகம் சுளிக்காமல் திரும்ப திரும்ப விவரிக்கிறார்கள். இங்கே விவரங்களை கேட்பவர்கள், ஊருக்குத் திரும்பி வங்கியின் அந்த ஊர்கிளை நிர்வாகியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம். அரசு, கல்விக்கடன் விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாராளமயக்கொள்கை காட்டிவருகிறது.

வாழ்வை சீரழிக்கும் வரதச்சனை

Posted on : 04-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by ஷமீமா  அன்சாரி

by Shameema Ansary
Tamil Article

http://www.sadaqathullah.com/nodowry.html

உயிர்காக்கும் ஓசோன் (OZONE)

Posted on : 04-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

உயிர்காக்கும் ஓசோன் (OZONE)

அழைக்கும் விஞ்ஞானம்.

மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..
மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் என கி.மு. 434ல் கூறிய அனக்ஸாகரஸ் (Anaxagoras 500-428 B.C.)எனும் அறிவியல் சிந்தனையாளர் மூட நம்பிக்கையாளர்களால் சித்திரவதைக்குள்ளாகிய வரலாறுகள் இந்த பூமியில் நிகழ்ந்த பின்னும் சத்தியத் திருமறையாம் தூய குர்ஆன் மூட நம்பிக்கையாளர்களின் கடவுளைப்(?) பற்றித் தெள்ளத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கிறது.

சூரியனையும் சந்திரனையும் அவனே படைத்தான. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 ஸூரத்துல் அன்பியாவின் 33வது வசனத்தின் ஒரு பகுதி)

அவைகளில் சூரியனை விளக்காகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கியிருக்கிறான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 71 ஸூரத்துந் நூஹ் – ன் 16வது வசனம்)

மேலும் சூரியனையும், சந்திரனையும் அவை (தவறாமல்) தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் (மானிடர்களாகிய) உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 14 ஸூரத்துல் இப்ராஹிம் 33வது வசனம்)

மேற்கண்ட வசனங்கள் சூரியனைப் படைக்கப்பட்ட பொருள் எனக் கூறுவதால் சூரியன் படைப்பாளன் (கடவுள்) இல்லை: அது ஒரு படைப்பினமே எனக் கூறுகிறது. மேலும் சூரியனை விளக்கு என்று கூறுவதால் அது ஓர் எரியும் பொருள் எனக் கூறுகிறது. அத்துடன் சூரியன் தன்னுடைய இயற்பியல் விதியிலிருந்து இம்மியும் பிசகாமல் இயக்கப்படுவதால் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி வளமும் வலிமையும் பெற்றுவரும் மனித சமுதாயத்திற்குத் தான் சூரியன் வசப்படுத்தப் பட்டுள்ளதேயன்றிச் சூரியனுக்கு வசப்பட்டவர்களாக மனிதர்கள் இல்லை எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகின்ற சூரியன் சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் தகவல்கள் யாவும் உண்மையென்றால் இதற்குப் பிறகும் கடவுளுக்குரிய இடத்தில் சூரியனை வைத்துப் பார்ப்பது கடவுளை நிந்திக்கும் செயலாகும். அத்துடன் தமக்கு வசப்பட்டிருப்பதற்கு மட்டுமே சக்தி பெற்ற ஒன்றைத் தாமே வழிபடுவது என்பது தம்மைத்தாமே நிந்தனை செய்யும் செயலாகவும் அமைந்து விடுகிறது.

தம்மைத் தாமே நிந்தனையில் தள்ளும் ஒருவர் மதிக்கப்படல் சாத்தியமா?

நவீன வானியல் விஞ்ஞானம் சூரியன் என்பது அதற்குரிய இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஓர் எரியும் கோளம் எனக் கூறுவதை அறியாதோர் யாரும் இந்த நூற்றாண்டில் இருக்க மாட்டார்கள். பதின்மூன்று இலட்சத்துத் தொள்ளாயிரம் கி.மீ.விட்டமும், பூமியைப் போன்று முப்பது இலட்சத்து முப்பதாயிரம் மடங்கு எடையும் (பூமியின் எடை 5,974,000,000,000,000,000,000 டன்கள்) கொண்ட இப்பொருளின் உள்ளே நமது கடல் மட்டத்தில் காணப்படும் அழுத்தத்தைக் காட்டிலும் நூறு கோடி மடங்கு அழுத்தமும் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட படுபயங்கரமான அழுத்தத்தின் கீழ் சூரியனுடைய உடலின் பெரும்பகுதியாகிய ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக (Heleum) மாறி வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் மையத்தில் 1.5 -, 2 ஆயிரம் கோடி சென்டிகிரேட் வெப்பமும் புறப்பரப்பின் மீது ஆறாயிரம் டிகிரி வெப்பமும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளாக இரசாயண மாற்றம் அடைந்து வெப்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சூரியனில் நடைபெற்று வருவதால் இயற்பியல் அடிப்படையில் சூரியன் ஓர் எரியும் பொருள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அணு உலையாம் சூரியனிலிருந்து விண்ணெங்கும் பாய்ந்தோடி வரும் அதன் ஒளிக்கதிர்களில் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பதும் ஒன்று. இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்குமே பெரும்கேடு விளைவிக்கக் கூடியவையாகும். இக்கதிர்கள் நேராக பூமியை அடையுமானால் இப்பூலகின் மீது மனிதர்கள் மட்டுமின்றிப் புற்பூண்டுகள் முதற்கொண்டு அழிக்கப்பட்டு உயிரின் சுவடே இல்லாத ஒரு கோளாக இந்த பூமி ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பூமியன் மீது பலகோடி வருடங்களாக அழிவைத் தரும் இக்கதிர்களால் எவ்விதப் பாதிப்புமின்றி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன! இது எப்படி சாத்தியமாயிற்று!?.

ஒருகால்..’அந்தோ பரிதாபம்! நமது புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே அக்கதிர்களில் எதையும் நாம் பூமிக்கு அனுப்பக் கூடாது’. எனக் கருதி, சூரியன் தானே தன் அழிவுக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் விலகிக் கொண்டதா? அதனால்தான் மானிடர்களில் பலர் இன்னமும் இதனை கடவுளாய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்களா?.

அப்படியெல்லாம் எதுவுமில்லை! ஒரு மைக்ரோ செகண்ட் (ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கூட ஓய்வின்றித் தன் அழிவுக் கதிர்களை நமது பூமியின் மீது வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்த நெருப்புக் கோளம் எனக் கூறுகிறார்கள் நவீன அறிவியல் வல்லுனர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இந்த இடத்தில் நாம் ஒரு கணமாவது சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம். கணமும் தப்பாமல் சூரியனுடைய அழிவுக் கதிர்கள் மடையுடைத்த வெள்ளமாய் நம்மீது கொட்டப்படுகின்றன. ஆனால் நாமோ பல்லாயிரம் வருடங்களாக அதன்கீழ் அழிவின்றி வாழ்ந்து வருகிறோம். உண்மைநிலை இதுவென்றால் சிந்தனைத் திறனை உலகப் பேரரங்கில் அடகு வைக்காத அறிவியல் அன்பர்களே! நீங்கள் கூறுங்கள்! நம்மீது படாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும் அதியற்புதத் தடுப்பொன்று நமக்கு மேல் இருக்க வேண்டுமா வேண்டாமா?

சிந்தனைத் திறம் பெற்றவர்களே! அறிவுசார், அறிவியல் சார் அன்பர்களே! நம்மீது பாய்ந்து வரும் இந்த அழிவுக்கதிர்கள் நம்மீது விழா வண்ணம் தடுக்கும் கூரையொன்று நமக்கு மேல் இல்லாவிடில் நம்மால் இங்கு வாழ முடியுமா? இதற்கு மேலும் சத்தியத் திருமறையின் கூற்றாம்:

‘வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைத்தோம். எனினும் அவர்கள் (நிராகரிப்போர்) அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணிக்கின்றார்கள்.’ (அல்-குர்ஆன் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியா – 32வது வசனம்) எனும் ஜீவ வசனத்தை ஒருவர் மறுத்து, பூமிக்குக் கூரை கிடையாது எனக் கூறத் துணிவார்?. அப்படிக் கூறினால் குர்ஆனை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் காரியத்தால் ‘அவர் பத்தும் சொல்வார்;. போகட்டும்’ என அவரைக் கண்டு கொள்ளாமல் அறிவியல் உலகம் விட்டுவிடும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இப்படிப்பட்ட காரியத்தை எந்த அறிவியல் வாதியும் செய்யத் துணிய மாட்டார்.

சூரியப் பேருலையிலிருந்து ஓயாது பாய்ந்து வரும் இப்புற ஊதாக் கதிர்களை எங்கள் மீது விழா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் கூரையே! நீ எங்கிருக்கிறாய்? மெய்யான உன் படைப்பாளனின் வார்த்தைகள்தாம் குர்ஆன் என்பதற்கு நீ வழங்கிக் கொண்டிருக்கும் சாட்சியமெங்கே!?.

மொழி!

Posted on : 04-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

எழுதியவர் யுவகிருஷ்ணா

விமான அறிவியலின் பிரபலமான கோட்பாடு ஒன்று உண்டு. ‘கனமான உடம்பும், மிக லேசான இறக்கைகளும் கொண்ட கருவண்டால் இயந்திரவியல் தர்க்கத்தின்படி பறக்கவே இயலாது’. இந்த கோட்பாடு அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால் கருவண்டுகளுக்கு தெரியாது. எனவே அவை எப்படியோ பறந்துகொண்டுதான் இருக்கிறது.

பாலவித்யாலயா குழந்தைகளும் அப்படித்தான். அறிவியல் கருத்துபடி பிறவியிலேயே செவிக்குறைபாடு கொண்ட குழந்தைகள் வாய்பேச இயலாது. இந்தக் கருத்து அக்குழந்தைகளுக்கு தெரிவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இக்கருத்தை பாடத்தில் பயிலும்போது “நிஜமாவா?” என்ற கேள்வியோடு சிரித்துக்கொண்டே ஆச்சரியப்படுகிறார்கள்.

குழந்தை இயற்கை தரும் வரம். என்ன கோபமோ தெரியவில்லை. சிலருக்கு மட்டும் முழுமையான வரத்தை இயற்கை நமக்கு வழங்கிவிடுவதில்லை. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது இவ்வகையில்தான். ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று நாம் வாளாவிருந்துவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் அதோகதிதான்.

’மொழி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகி ஜோதிகா வாய்பேச இயலாதவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அக்கதாபாத்திரத்தின்படி பார்த்தோமானால் அவர் வாய்பேச இயலாதவர் அல்ல. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர் என்பதால், ‘மொழி’யை பேசிப்பழக வாய்ப்பில்லாமல் ‘சாடை’ மொழி பேசுபவராக மாறிவிடுகிறார். இதுதான் எல்லோருக்குமே நடக்கிறது. வாய்பேச இயலக்கூடிய ஒருவர், செவித்திறன் குறைபாட்டால் வாழ்க்கை முழுக்க பேசாமலேயே வாழ்வது எவ்வளவு பெரிய அவலம்? பேச்சுமொழியற்றவர்கள் கல்வி கற்க இயலாமல் வாழ்வை தொலைப்பது சகிக்க இயலாத துயரம் இல்லையா?

அதிக நேரம உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெடும்- புதிய ஆய்வுத் தகவல்

Posted on : 31-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ஜுலை29:அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

உலகில் காலியாக கிடக்கும் அத்தனை நாற்காலிகளும் நமக்காகவே படைக்கப்பட்டது என்ற எண்ணம் பலருக்கு. பஸ் ஸ்டாப்பில் முக்கால் நிமிஷம் காத்திருக்க வேண்டியிருந்தால்கூட நாற்காலியை தேடுவார்கள். வங்கி, பள்ளி, அரசு அலுவலகங்களில் கேட்கவே வேண்டாம்.

சீட்டைவிட்டு நகராத ‘சீட்கள்’ மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக அமெரிக்காவின் கேன்சர் சொசைட்டி சமீபத்தில் ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: உட்கார்ந்தே இருக்கும் வேலை என்றாலும் ஒரு நாளுக்கு 3 மணி நேரத்துக்கு அதிகமாக உட்காரக் கூடாது.

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.

Posted on : 31-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது. பொழுது போக்குவதற்கா? ஆக்குவதற்கா? தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.நகைச்சுவை வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது.
மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும் போது பார்க்க லட்சணமாக இருக்கும்; ஆனால் சிரிக்கத்தான் மாட்டார்கள்!

சிலருக்கு நகைச்சுவையே பிடிக்காது. நகைச்சுவையாக பேசவும் வராது. அடுத்தவர் நகைச்சுவை சொன்னால், அதை ரசித்து சிரிக்கவும் தெரியாது. சிரிப்பவரைப் பார்த்து, “என்ன….? சும்மா பல்லை பல்லைக் காட்டிக் கொண்டு….?” என்று எரிச்சல்படவும் செய்வார்கள். பேசும்போதே நகைச்சுவையாக பேசுபவர்களுடனும் வாய்விட்டு சிரிப்பவர்களுடன் எவரும் மகிழ்ச்சியாக பழகுவார்கள்.

நகைச்சுவையில் ஓர் உளவியல் கருத்து உண்டு. எந்த நகைச்சுவைக்கு ஒருவர் சிரிக்கிறார் என்பதே. அவர் யார் என்பதைக் காட்டிவிடும்!
ஒவ்வொருவர் சிரிக்கும்போதும், சிரிப்புக்கான காரணத்தை அல்லது கருத்தை கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். எளிமையாக புரிவதற்கு ஒன்று சொல்லலாம்!

குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று கூடி, ஓடியாடி விளையாடும். அப்போது ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால், மற்றவை விழுந்து விழுந்து சிரிக்கும். குழந்தைப் பருவத்தின் இந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வயதான பருவத்தில் இருக்கும் ஒருவர் தவறிவிழுந்தால். உடன் இருக்கும் நண்பர்கள் பதறிவிடுவார்கள்.

குழந்தையாக இருந்தபோது நகைச்சுவையாக இருந்த நிகழ்வு பக்குவப்பட்ட நிலையில் வருத்தத்திற்குரியதாகி விடுகிறதல்லவா? அந்த நிலையிலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?
வாழ்வில் நகைச்சுவை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது. தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

எகிறும் தங்கம், பதறும் பெண்கள்

Posted on : 30-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சேவியர்

sruthதங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விண்ணைத் தொட்டிருப்பது கல்யாணம் கச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் இத்தனை பவுன் நகை என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் இத்தனை ரூபாய்க்கு நகை என்றே பேசிக்கொள்கின்றனர். காரணம் நாள் தோறும் எகிறிக் குதிக்கும் தங்கத்தின் விலை.

தங்கத்தின் விலையேற்றத்துக்கு அடுத்த தெரு கடைகள் முதல் சர்வதேச கச்சா எண்ணையின் விலை வரை பல்வேறு காரணங்களை ஆர்வலர்கள் அலசி ஆராய்ந்து பல்வேறு தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

தங்கம் எதற்கு ? வேறு ஆபரணங்களே இல்லையா ? தங்கம் போட்டால் தான் ஆச்சா ?  என கேள்வி எழுப்பினால் என்ன பதில் கிடைக்கிறது ?

“விற்றால் விலை கிடக்கும், அடகு வைக்கலாம்” என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் தங்க நகைகள் தான் வேண்டும் என்பதில் ஆழமான காரணம் இல்லை.

நகர்ப்புற இளம் வயதினர் தங்கத்தை தூர எறிந்து விட்டு ஃபாஷன் நகைகளுக்கு மாறி வெகு நாட்களாகிறது. பாஷன் நகைகள் நகரின் எல்லா கடைகளிலும் எல்லா நிறங்களிலும், எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. பலர் இதை ஒரு குடிசைத் தொழிலாகவே செய்தும் வருகின்றனர். சில நூறு ரூபாய்களுக்கே காதணி, வளையல், கழுத்துச் சங்கிலி என எல்லாவற்றையும் ஒரே ஸ்டைலில் வாங்கவும் முடியும் என்பது இந்த வகை நகைகளின் சிறப்பம்சம்.

பட்டுப் புடவைகளை எடுத்துப் பாருங்களேன். முன்பெல்லாம் பட்டுப் புடவை உடுத்தாத பெண்களை திருமண வீட்டில் பார்ப்பது அரிது. அரிது என்பதை விட குதிரைக் கொம்பு என்று கூட சொல்லலாம். காரணம் பட்டு கட்டாம போனா கவுரக் குறைச்சல் என நினைத்தது தான். இப்போதெல்லாம் நிலமை மாறிவிட்டது ஃபாஷன் டிசைனர்ஸ் சேலைகள் தான் கண்களில் அதிகமாய் தென்படுகின்றன.

பட்டுப் புடவை செம வெயிட்டுப்பா… அதையெல்லாம் தூக்கிட்டு நடக்க முடியாது” என இளம் பெண்கள் வெளிப்படையாகவே மறுக்கத் துவங்கிவிட்டார்கள்.

எது வசதியாக இருக்கிறதோ, எது மலிவாகக் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தும் போக்கு நிச்சயம் வரவேற்கத் தக்கது. காரணம் ஆடை, நகை எல்லாமே நமக்கு ஆனந்தம் தருவனவாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை வருத்துபவையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.

பிளாட்டினம், இரிடியம், பல்லாடியம், ருத்தேனியம், ரோடியம் மற்றும் ஓஸ்மியம் என பல்வேறு நகைகள் இருந்தாலும் அவையெல்லாம் தங்கத்தை விட அதிக விலை என்பதால் அவற்றையும் ஒதுக்கியே வைக்க வேண்டியிருக்கிறது.

சரி தங்கம் இல்லையேல் அப்படி என்னதான் வாங்கலாம் ?

வடஇந்திய சுற்றுலா-3

Posted on : 29-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by கிளியனூர் இஸ்மத்

ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹாலுக்கு இரண்டரை கி.மீ தூரம்.அங்கிருந்து தாஜ்மஹாலுக்குச் செல்ல குதிரை வண்டி ஓட்டக வண்டி சைக்கிள் ரிக்ஷா ஆட்டோ இப்படி பலவிதமான வாகனங்கள் நிற்கின்றன.

யமுனை ஆற்றங் கரையோரம் தாஜ்மஹால் அமைந்திருக்கிறது.
தாஜ்மஹாலுக்குள் செல்ல இரு வழி அமைத்து சோதனைகள் செய்து போலிஸ்காரர்கள் ஒவ்வொரு பார்வையாளர்களையும் அனுப்புகிறார்கள் தினமும் காதல் சின்னத்தை காண்பதற்கு பலஆயிரம் காதலர்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.கூட்டம் அதிகமாகவே இருந்தது.சோதனைக்கூடத்திற்கு முன் பலவிதமான கடைகள் அமைத்து பலபொருட்களை விற்பனை செய்கிறார்கள் சொன்ன விலைக்கு அங்கு வாங்கக்கூடாது பொருட்கள் மட்டும் அல்ல தங்கும் விடுதிக்கும் தான்.
எல்லாமே பேரம் பேசப்படுமளவிற்கு தான் விலைகள் வைத்துள்ளார்கள்.பேச்சு திறமை உள்ளவர்களுக்கு ஆக்ரா சரியான சவாலாக இருக்கும்.

நவீன இயந்திரங்கள் வைத்து நம் உடம்பில் ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறோமா என்பதை கண்டறிய வைத்துள்ளார்கள் அது இருந்தாலும் அதையும் நம்பாமல் நம் உடம்பை தடவியும் பார்க்கிறார்கள்.

வெற்றிலைப் பாக்கு சுவிங்கம் பான் வாயில் போட்டு மென்று துப்பக்கூடிய பொருட்களை தடைசெய்துள்ளார்கள்.அதே போன்று பெண்களின் கை பேக்குகளை சோதனை செய்கிறார்கள். எனது நண்பர் ஹாஜாவிடம் ஆறு சுவிங்கம் பாக்ஸ் இருந்தது அதை அனுமதிக்கவில்லை நம் கையில் கொடுத்து நீங்களே எரிந்து விடுங்கள் என்று கொடுத்தபோது எரிவதற்கு மனமின்றி வெளியில் சென்று யாரிடமோ கொடுத்துவிட்டு வந்தார்.

இவைகளை யெல்லாம் எரிந்துவிட்டு காதல் சின்னத்தை காண்பதற்கு உள்ளே நுழைந்தால் பிரமாண்டமான நூழைவாயில் தாஜ்மஹாலை காண்பதற்கு தடையாக நிற்கிறது.இது ஷாஜகானின் பிரித்தியோக மூளை தனது காதல் சின்னத்தை வெறும் கட்டிடமாக அவர் நினைக்கவில்லை அந்த மஹாலில் மும்தாஜ் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பதைப்போன்ற உணர்வுக் கொண்டிருந்துள்ளார்.

மூன்று பிரமாண்ட நுழைவாயிழை பாதுக்காவலாக அமைத்து நடுவில் தனது காதல் சின்னத்தை உருவாக்கி இருக்கிறார்.கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக ஷாஜகான் திகழ்ந்துள்ளார்.அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முகலாய கலை நயமிக்கதாய் உச்சநிலை அடைந்துள்ளதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஷாஜகானின் கட்டிடக்கலை படைப்புகள் தாஜ்மஹால் மட்டுமல்ல ஏராளம்.
இன்னும் அவருடைய கலைகளில் மிச்சமிருப்பவை டெல்லியிலுள்ள செங்கோட்டை ஜூம்மா மஸ்ஜித் லாகூரின் ஷாலிமார் தோட்டங்கள் லாகூர் கோட்டையின் சில பிரிவுகள் (ஷீஸ் மஹால் மற்றும் நௌலாகா பெவிலியன் போன்றவை) அவருடைய தந்தையின் அடக்கஸ்தளம் இன்னும் ஆக்ராகோட்டையின் உட்புற வடிவங்களை தனது 16 வுத வயதிலேயே தனது இஸ்டத்திற்கு மாற்றங்களை செய்து தனது தந்தையிடம் நற்பெயரைப் பெற்றவர் என்பது வரலாறு.

ஆக்டோபஸ் ரூபத்தில் வந்த அறியாமை.

Posted on : 27-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

உலகில் மனிதர்களுக்கு அறியாமை எந்தெந்த வழிகளில்லெல்லாம் வந்து அவர்களை ஆட்சி செய்யும் என்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம்.
நடந்து முடிந்த உலக்கோப்பை கால்பந்துப்போட்டியின் பரபர‌ப்பான இறுதி ஆட்டத்தில் மோதிய இரண்டு அணிகளில் கடைசியாக வென்று உலகக்கோப்பையை தட்டிச்சென்ற ஸ்பைன் அணியை விட இன்று உலகில் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் ஜெர்மனிய மியூசியத்தில் உள்ள ஆக்டோபஸ் என்னும் கடல் பிராணி (அதாங்கெ நம்மூரு கடைத்தெருவுலெ விற்கும் கணவா மாதிரி இருக்குமே அதே தான்).
காரணம் அந்த ஆக்டோபஸ் கடல் பிராணியானது இன்று நடக்கும் உலக கால்பந்து ஆட்டத்தில் மோதும் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்று கண்ணாடிப்பெட்டிக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ள அவ்விரு நாட்டின் கொடிகளில் அது எதை தன் கால்களால் (கால் எது? கை எது? என்று நம்மால் துல்லியமாக சொல்ல முடியாத‌ கன்ஃபூஸ் ஆன ஒரு பிராணி) எந்த நாட்டுக்கொடியைப் பற்றிப்பிடிக்கின்றதோ அந்த நாடு அன்று வெற்றி பெரும் என்பதே. அது போல் அரையிறுதி ஆட்டங்களில் பார்க்கப்பட்டு அதன் முடியும் துல்லியமானதாக கருதப்பட்டது.

காவியம் படைத்த அரசியல் கவிஞன்!

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

கே. செல்வப்பெருமாள்

மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே!’என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை – இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.

உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் – பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’ எழுதுவதற்கு கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas),கோமாஸ் (Comus)..

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது – சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.

The broad circumference
Hung on his shoulders like the moon, whose orb
Trhough optic glass the Tuscan artist views
At evening, from the top of Fesole,… (Book 1, 286-290

‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” – (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)

கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும். இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன்1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.

சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் – புரோட்டஸ்டான்ட்கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி,தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ்மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)

அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும்
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

கிரையோஜெனிக் ராக்கெட்

Posted on : 21-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

கிரையோஜெனிக் ராக்கெட்

தண்ணீரை ஊற்றி ஒரு வாகனத்தை செலுத்த முடிமோ முடியாதோ – ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும்.    அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.                                            என்ன ஆரம்பமே குழப்பமாக உள்ளது என்று யோசனை பண்ணவேண்டாம் மேலும் படிங்கள்

நீரை ஆக்சிஜன் வாயுவாகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்து அந்த வாயுக்களைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை இயங்கச் செய்ய முடியும். அதுதான் கிரையோஜெனிக் ராக்கெட்.
இந்தியா முதல் தடவையாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டு தடம் (ரோடு எங்கே என்று கேட்ககூடாது )மாறியது வேறுவிசயம் .ஆக்சிஜன் 2 மடங்கு ஹைட்ரஜன் வாயுவும் 1 பங்கு ஆக்சிஜன் வாயுவும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரியக்கூடியது. அவ்விதம் எரிவதற்கு ஆக்சிஜன் வாயு உதவும் இரு வாயுக்களையும் ராக்கெட்டில் பயன்படுத்தினால் உந்து திறன் (வேகம்) அதிகரிக்கும் அதிக எடை கொண்ட ராக்கெட்களை எளிதாக மேலே தூக்கி செல்லும் ஆனால் இந்த வாயுக்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சின்களை உருவாக்குவதில் நமக்கு நிறையப் பிரச்னைகள் உள்ளது