Featured Posts

  • Prev
  • Next

வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

Posted on : 17-08-2010 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை:

என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக”

யாஸ்மின் மேற்கண்டவண்ணம் பிரார்த்திக்க காரணம் இல்லாமலில்லை:

இரண்டாண்டுகளுக்கு முன் அவள் ‘பெரிய மனுஷி’ ஆனதிலிருந்து அவளுடைய படிப்பு தடைப்பட்டது. சவூதியில் வேலை செய்யும் அத்தாவிடமிருந்து வந்த கடிதத்தில் அந்தத் தடங்கல் எழுத்து வடிவத்தில் இருந்தன… “யாஸ்மின் படித்தவரைக்கும் போதும், நிறுத்தி விடவும்”. குடும்பத்தின் செயல் தலைவியான அம்மாவுக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தன. “நாளையிருந்து நீ பள்ளிக்கூடம் போ வேணாம்” என்று ஒரே வார்த்தையில் யாஸ்மினின் படிப்புக்கு தாழ் போட்டாள்.

அல்லாஹ் போதுமானவன்!

Posted on : 22-06-2010 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

டாக்டர் ஹிமானா செய்யத்

விடிந்தால் நோன்பு இருபத்தேழு.

ஆமினாவுககுத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். இந்தப் பெருநாளைக்கு எப்படியும் ஒரு பவுனில் ஒரு சங்கிலிக்கொத்து போடுவதாக அத்தா வாக்குக் கொடுத்திருந்தார். இந்த வருஷம் 27ஆம் கிழமையில் கிடைக்கும மொத்தத் தொகையையும் அதற்காகவே செலவழிக்க வேண்டும் என்பது அவரது முடிவு.

வயதுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் இன்னும் வரன் வரவில்லை. எவ்வளவு பரம ஏழையாக இருந்தாலும் ஐந்து பவுனும் ஐயாயிரமும் எதிர்பார்க்கும் இந்தக் காலத்தில் மகளை மணமுடித்துக் கொடுக்கும் அவர் முயற்சி தோற்றுக் கொண்டே போகிறது.

பேட்டை மஸ்தான் தான் சொன்னார். ‘வருஷத்துக்கு ஒரு பவுன், இரண்டு பவுனாச்சும் சேர்துக்க ஜக்கரியா’ என்று – ஆமினாவும் அப்போது உடனிருந்தாள். அவர் சென்றதும் ஆமினாவிடம் ஆலோசித்தார் அத்தா. இந்த வருஷத்தில் மொத்தமாக சில ஆயிரங்களை பார்க்க வேண்டுமென்றால் ரமளானைவிட்டால் வேறு வழியில்லை.

பள்ளியில் படிக்கும் ஆமினாவின் தம்பி ஹமீத் காலையில் அத்தாவிடம் ஏதோ கேட்டான்.

அத்தா சொல்லிவிட்டார் ” அக்காவுக்கு சங்கிலி வாங்கிட்டு பாக்கியிருந்தாத்தான் நமக்கு துணிமணி வாங்கனும் ஹமீது. அக்காவை சீக்கிரமே கட்டிக் கொடுத்துடனும் பாரு” என்றார் அவர்.

தம்பி ஒப்புக் கொண்டான். விவரம் தெரிந்தவன். ஆமினாவுக்கு அவன் நடந்து கொண்ட விதம் பிடித்து இருந்தது. அத்தாவிடம் சொல்லி எப்படியாவது அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிடச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பக்கீர்சா தப்ஸ் அடித்துக் கொண்டு ஊருக்குள் நுழையும் சப்தம் கேட்டது. ஒரு மணியாகி விட்டது. ஸஹருக்கு சோறு பொங்கி சுடச்சுட அத்தாவுக்குக் கொடுக்க எண்ணியிருந்தாள் படுக்கையிலிருந்து எழுந்து மளமளவென்று காரியமாற்றினாள். ரசம், துவையலோடு சாப்பாடு ரெடி.

மெல்ல ஹாலுககுள் நுழையம் போதே விழித்துக் கொள்ளும் அத்தா, அருகில் சென்று “அத்தா” என்று அழைத்தும்  அசையாமல் கிடப்பது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல உட்கார்ந்து முதுகைத் தொட்டாள்.

“அம்மாடி” என்று கத்தி விட்டாள். உடலில் அவ்வளவு வெப்பம். ஜக்கரியா ராவுத்தரால் பேசக்கூட முடியவில்லை.

“சும்மா சாதாரண காய்ச்சல்தாம்மா சத்தம் போடாதே” என்றார். “தொழுதுட்டு சும்மாதானே அத்தா படுத்தீங்க?” அதுக்குள்ளே என்னாச்சுத்தா?” – அவள் அரற்றினாள்.

‘வியாதி வர்ரதுக்கு நேரங்காலம் ஏதும்மா?’ என்றவர் எழுந்து உட்கார்ந்தார்.

தலையணைக்கடியில் வைத்திருந்த காய்ச்சல் மாத்திரையை எடுத்து, தண்ணீர் வாங்கி போட்டார். ஏற்கனவே உடல் வலி காய்ச்சல் இருந்திருக்க வேண்டும்.

மாத்திரை போட்டுப் பத்து நிமிடம் ஆகியிருக்காது: திடீரென வாந்தி எடுத்தார்.

பரபரப்பில் ஹமீதும் எழுந்து கொண்டான்.

“அத்தா, டாக்டர்கிட்ட போவமா?” என்றான். “என்னால எழுந்திருக்க முடியலை ஹமீது. போயி தையூப்கான் டாக்டரை கூட்டிக்கிட்டு வா” என்றார்.

ஹமீது ஓடினான்.

அரைமணி நேரத்தில் டாக்டர் வந்து விட்டார். அதற்குள் இரண்டு முறை வாந்தி – மூன்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்ததுமே அந்த அனுபவ டாக்டர் சொல்லி விட்டார். “சீக்கிரம் டவுனுக்கு போயி குளுக்கோஸ் ஏத்துங்கப்பா. உடம்புல தண்ணிச் சத்தே இல்லாமப் போச்சு. எந்த ஊசி மருந்துக்கும் இது கேக்காது”

ஆமினா அழுதாள். ஹமீது குழம்பிப் போய் நின்றான். ஜக்கரியா உடைய ஆரம்பித்தார்.

“யா அல்லாஹ் இது என்ன சோதனை? இன்னக்கிப் பார்த்து இப்படியாச்சே. புள்ளக்கி எப்படியாச்சும் இந்த வருஷ ஜக்காத்துக் காசுல நகை பண்ணிடனும்னு நெனச்சிட்டிருந்தேனே. இந்த நெலமையில் நான் எங்கே போயி காசு கேக்கறது? அவர் உள்ளளுக்குள் மருகினார்.

டாக்டர் திரும்பவும சொன்னார். ” என்ன அத்தாவும் பிள்ளைகளும் மலைச்சுப் போயி நிக்கிறீங்க? சொன்னது காதுல விழுகலயா?”

ஜக்கரியா ஒரு நிலைக்கு வந்தார். ” இப்படிச் சொன்னா எப்படி டாக்டர்? டவுனுக்கு இந்த நேரத்துல டாக்ஸி பிடிச்சு போறதுக்கு வசதியில்லாதவங்க நாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றார் பலகீனமான குரலில்.

அதுக்கில்லேப்பா – நாளைக்கு எம்மேல கொற வரப்படாதுல்ல? அதுக்குத்தான் முன்கூட்டியே சொல்லிக்கறேன்” என்றார்.

ஊசி  போட்டு மருந்து கொடுத்தார்.

கவலையும் கண்ணீருமாய் பொழுது ஓடியது.

விடியற்காலையிலேயே தெருக்களில் பரபரப்புத் தெரிய ஆரம்பித்து விட்டது. கூட்டங்கூட்டமாக ஜக்காத்து வாங்கும் வெளியயூர்காரர்கள் படையெடுப்பு.

ஏதோ வாந்தி, வயிற்றுப்போக்கு டாக்டர் செய்த வைத்தியத்தில் நின்றிருந்தது. ஆனால், நாவறட்சி – சோர்வு இருந்தது.  காய்ச்சலும் குறையவில்லை.

“ஆமினா.. ஆமினாம்மா” என்றழைத்தார் ஜக்கரியா.

என்னத்தா?  இங்கேதானே இருக்கேன்” என்றாள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த ஆமினா.

“சீக்கிரமா கொஞ்சம் வெந்நீர் போடும்மா. குளிச்சிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துடறேன்” என்றார்.

ஆமினா பதறினாள். “இந்த நெலமயில நீங்க வெளியில போக முடியாது அத்தா! சும்மா படுத்துக்கெடங்க..”

“ஸஹருக்கு ஆக்குன சோறு அப்படியே இருக்கு மறு உலைப்பாச்சி கஞ்சியாக்கித் தாரேன்” என்றாள்.

ஜக்கரியா மறுத்து விட்டு எழ முயன்றார். மடாரென்று சரிந்தார்.

“அத்தா!” என்ற பிள்ளைகளின் கதறலில் தெருவே கூடி விட்டது.

வேறு வழியில்லை! இந்த 27ஆம் கிழமை வருமானம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது! தன்னுடைய ஆசையில் – திட்டத்தில் விழுந்த பேரிடியின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தினறினார் ஜக்கரியா.

பிள்ளைகள் அருகிலிருந்து மெளனமாய் அழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது வீட்டின் வெளியே கார் நிற்கும் சத்தம்.

ஹமீது அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான்.

காரிலிருந்து இறங்கிய அவ்வூரின் பெருந்தனக்காரர் மஹ்மூது ஹாஜியார்” ஏம்பா தம்பி! ஜக்கரிய்யா ராவுத்தர் வீடு இது தானே?” என்றார்.

“ஆமாங்க” என்றான் – இவ்வளவு பெரிய பணக்காரர் தங்கள் வீடுதேடி வந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

இலேசான பயமும் கூட! “உள்ளே வாங்க” என்று பவ்யமாக அழைத்தான்.

உள்ளே வந்த ஹாஜியார், “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்” என்றார்.

ஆயாசத்துடன் படுத்திருந்த ராவுத்தர் அவசரமாக பதில் சொல்லி எழுந்து உட்கார முயன்றார்.

பரவாயில்லே. படுத்துக்கோங்க. இப்பத்தான் டாக்டர் தையூப்கான் நம்ம வீட்டுக்கு ஊசி போட வந்தாரு. ராத்திரி நடந்ததை சொன்னாரு. ஒவ்வொரு வருஷமும் உங்களுக்குத் தந்துட்டுத்தான் மத்தப்பேருக்கு ஜக்காத்து கொடுக்குறது வழக்கமாச்சே.

அதான் நேர்ல வந்து தந்துடலாம்னு வந்தேன். என்றவர் சற்றும் முற்றும் பார்த்தார்.

வறுமையின் கோலமாய் நின்ற அந்த வீடு. வாடி வதங்கிய பிள்ளைகள். ஓரமாய் நின்ற ஆமினா.

“ஏன் பாய். பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடு ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா?” என்று கேட்டார் திடீரென்று.

ஜக்கரியாவுக்கு அழுகையே வந்து விட்டது.

மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

எழுந்து கொண்ட ஹாஜியார் “ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க பாய்! இன்ஷா அல்லாஹ் பெருநாள் கழிச்சி என்ன வந்து பாருங்க. கலியாணத்தை முடிச்சுப் போடுவோம். என்ன?” என்றவாறு சலாம் சொல்லி விடை பெற்றார்.

அவர் ராவுத்திரின் கையில் திணித்து விட்டுச் சொன்ற புதிய பணக்கட்டு அந்த வீட்டை பிரகாசமாக்கியது,

“அல்ஹம்துலில்லாஹ்” என்ற ராவுத்தரின் குரல் வீடெல்லாம் நிறைந்து பரவியது.

Jazakkallahu Hairan

நன்றிhttp://www.chittarkottai.com/himana/sirukathaikal/allah_pothumaanavan.htm

தூயவன் கதை — 01

Posted on : 28-01-2010 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

Tags: , , , , , , ,

0

முன்னுரை

தூயவன் மாமாவின் கதைகளில் எனக்கு முதலில் கிடைத்த கதை இதுதான். அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு 2007-ன் சார்பாக வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சிறுகதைகள் என்ற நூலில் இது இருந்தது.  பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு குறும்படமாக ஆக்க முடிகிற அருமையான சிறுகதை.இதை எழுதியது எந்த ஆண்டு, எதில் முதலில் வெளிவந்தது,  இது ஒரு முத்திரைக்கதையா என்றும் தெரியவில்லை.

ஆனால் இந்தக் கதையிலிருந்து எனக்கு பல செய்திகள் கிடைக்கின்றன.

1. படிக்காதவர்களுக்குத்தான் தமிழ் நன்றாக எழுத வருகிறது (இலக்கணப் பிழை மலிந்து எழுதும் தமிழ்ப்பேராசிரியர்களை எனக்குத்தெரியும்).

2. இது கதை என்பதைவிட இது ஒரு situation என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் வரும் க்ளைமாக்ஸ் மாதிரியான ஒரு முடிவு. அந்த முடிவை நோக்கி நம்மைச் செலுத்திக் கொண்டே இருக்கும் வார்த்தைகள்.

3. தாய்,  குழந்தை என்று வருகிறபோது அது ஜாதி மதங்களைக் கடந்தது என்ற உட்குறிப்பான செய்தி.

4. ஆஸ்பத்திரியில் என்னதான் சொன்னார்கள் என்பதை விளக்கமாகச் சொல்லாமல் நம்மை யூகிக்க வைக்கும் திறன். எல்லாமே ஒரு சில பக்கங்களில்.  இனி கதை

மடி நனைந்தது

baby n mumஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜாகி, ஓரடி எடுத்து வைப்பதற்குள் நெஞ்சுக்குள் பொங்கிய குமுறலை ஆபிதாவால் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அன்வரின் மார்பில் முகம் புதைத்து ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழளானாள்.

அன்வருக்கு மாத்திரமென்ன இழப்பின் ஆற்றாமை இல்லையா? அவன் இதயம் ஊமைப்புலம்பலாய் அழுது கொண்டிருந்தது ஆபிதாவுக்குத் தெரியுமா? ஆயினும், அவன் ஓர் ஆண் பிள்ளையாயிற்றே! பெண்மயின் பலவீனம் அணையுடைத்துப் பாயும்போது ஆறுதல் சொல்லியாக வேண்டிய ஒரு பொறுப்பு மிக்க கணவனல்லவா?

சே, சே, என்ன ஆபிதா இது, குழந்தை மாதிரி? அதோ பார், நாலு பேர் நம்மையே பார்க்கிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொள்.. “ என்று அவன் வாய் ஆறுதல் சொற்களை உதிர்த்த போதிலும், அந்த அழுகையும்ம் தேம்பலும் ஒரு தாய்மை நெஞ்சிலிருந்து வெளிப்படுகிற இயல்பான குமைச்சல் என்பதையும் அவனால் உணர முடிந்தது.

இங்கே,..இங்கே வருகிறபோது எவ்வளவு சந்தோஷமாக…எத்தனை மகிழ்ச்சியோடு வந்தேன்..இப்போது எல்லாமே… எல்லாமே” நிகழ்ந்து முடிந்துவிட்ட அந்த மோசமான சம்பவத்துக்கு ஆபிதாவால் வார்த்தை வடிவம் தர முடியவில்லை.

உண்மைதான். ஏழு நாட்களுக்கு முன்பு இதே ஆஸ்பத்திரி வாயிலில் அவர்கள் வந்த குதிரை வண்டி நுழைந்தபோது ஆபிதாவின் நெஞ்சம் எத்தனை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிக் கிடந்தது. எவ்வளவு எழில் கனவுகள் கண்டுகொண்டிருந்தது. எல்லாமே இப்போது நாசம்தான். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே என்கிற புளித்துப்போன சித்தாந்தத்தை எண்ணி மனம் தேறுகிற நிலையில் அவளில்லை. ‘ஏன் நினைக்க வைத்தாய் இறைவா?’ என்று அரூபமாகி நிற்கிற அந்த ஏகனுக்கு கேள்வி எழுப்பிக்கொண்டு நின்றது அது.

அன்வரின் விழிகளைக்கூட வெண்பனி திரையிட்டது. ஆபிதாவின் பச்சை உடம்பைக் கைத்தாங்கலாகப் பற்றியபடி ஆஸ்பத்திரி கேட்டைக் கடந்துகொண்டிருந்தான் அவன். காலை நேரமாதலால் பிணி கொண்ட மனிதர்களின் ஜீவனற்ற கலகலப்பில் தோய்ந்து நின்றது அந்த ஆஸ்பத்திரியின் வெளிப்புறம். வண்டியில் சாத்துக்குடிப் பழங்களில் வியாபாரம் செய்கிற நடைபாதை வியாபாரிகளின் கூவலும் மருந்து பாட்டில்களைப் பேரம் பேசும் நோயாளிகளின் முனகலுமாய் ஓர் உயிர்ப்பற்ற சந்தடி.

ஆபிதாவால் அடிபெயர்க்கவே இயலவில்லை. ஏழு நாட்களுக்கு முன்பு வரை பூரிப்பிலும் பொலிவிலும் பொங்கி நின்ற அந்தத் தேகம், இப்போது கொத்தாக இளைத்திருந்தது. தாய்மையின் பூரணத்துவம் நிறைவாகக் குடிகொண்டு நின்ற வதனம், இப்போது மஞ்சள் பூத்து வெளிறிக் கிடந்தது. ஆர்வமும் ஆவலும் மின்னிய அந்த விழிகள் இப்போது வேதனையில் ஆழ்ந்து கிடந்தன. நெஞ்சின் வேதனையே நடையைத் தளர்த்தித் தள்ளாட வைத்திருக்கும்போது, தெம்பாக நடந்துவர எப்படி இயலும்/

ஆஸ்பத்திரியின் எதிர்வாடையில்தான் பஸ் நிலையம். எப்படியாவது ஆபிதாவை அதுவரை நடத்திச் சென்றுவிட்டால் போதும். பொறையார் போகிற பஸ் அடிக்கடி உண்டு. பகல் சாப்பாட்டுக்கெல்லாம் வீடு போய்விடலாம். அங்கே வந்து நெஞ்சின் துயரங்களை அவள் எப்படித்தான் கொட்டினாலும் நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகிற ஒலியலைகள்தானே? பரவாயில்லை.

சிமிண்டித் தரையில் அவளை அமர்த்தி வைத்துவிட்டு, “ஏதாவது சாப்பிடேன், ஆபிதா, இப்படி வெறும் வயிற்றோடு இருந்தால் எப்படி?” என அன்வர் பரிவை இழைத்து வினவியபோது, “வரும்போது வெறும் வயிற்றோடு வரவில்லையே. போகும்போதுதான் வெறும் கை” என்று விரக்தியாக ஆபிதா பேசியபோது, அந்த அர்த்தம் செறிந்த சொற்றொடருக்குப் பதில் கூற மொழி தெரியாமல் வாயடைத்துப் போனான் அன்வர்.

நிழற்படங்கள்—- எம்.ரிஷான் ஷெரீப்,

Posted on : 16-12-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.

சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.

அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. ‘ஏதாவது சாப்பிடுறீங்களா?’ எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.

கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.

பெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா…?

Posted on : 16-12-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

3

by கீழை ராஸா

இஸ்லாமிய சமுதாயத்தில் “பெண் வயசுக்கு வருதல்” எனும் இயற்கை நிகழ்வை காரணம் காட்டி சமூகத்தில் நசுக்கப்படும், பெண்கல்வி, பெண் முன்னேற்றம், போன்ற செயல்களைச் சாடும் சிறுகதை இது.

கதை எங்கள் ஊர் வட்டார மொழியில் கதை பின்னப்பட்டுள்ளதால் அதற்கான அருஞ்சொற்பொருளை கதையின் அடியில் கொடுத்துள்ளேன்.

(சிறுகதை எழுத்தாளர் நண்பர் திருச்சி சையதுவால் தொகுக்கப் படவிருக்கும் இஸ்லாமிய சிறுகதை தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட சிறுகதை இது. )
பெரிய மனுசி
“ஆயிஷா இனி ஸ்கூலுக்கு வராதாம்” சக நண்பனின் வார்த்தைகள் என்னுள் சாட்டையடியாகப் பதிந்தன.
“ ஏண்டா” பதற்றம் என்னுள்
“அது பெரிய மனுசி ஆயிடுச்சாம்”
‘அது எப்படி நானும் அவளும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப்படிக்கிறோம், நான் பெரிய மனுசனாகலை அது மட்டும் எப்படி,,,?’ விடை தெரியாத கேள்விகள் என்னுள் முட்டி மோத அன்று இரவு என்றும் இல்லாத அளவு ஆயிசாவின் நினைவு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது..

ஆயிசா என் முதல் பள்ளித்தோழி…பள்ளி செல்லும் வழியில் என்னுடன் பயணப்படுபவள்…என்னை விட உயரம், தெத்துப்பல் சிரிப்பு, நல்ல அறிவாளி முதல் மதிப்பெண்ணைத் தட்டிச்செல்ல எங்களுக்குள் ஒவ்வொரு பரீட்சைக்கும் போட்டா போட்டி இருந்தாலும்,,,நட்பில் எங்கள் நெருக்கம் கண்டு பள்ளியே வியந்து நிற்கும்…
அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது…அவன் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று மனசு ஏங்கியது. நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என்பதாலும்,அன்று மாட்டு வண்டிப்பயணம் கூட வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாலும் என் பள்ளிப்பயணம் முழுவதும் நடை பயணமே…எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது முடுக்கை* கடக்கும் போது கடலில் கலக்கவரும் நதி போல் எனக்காக காத்திருப்பாள்.இன்று அந்த இடத்தில் வெறுமை…முடுக்கின் வழியே அவள் வீட்டை எட்டிபார்த்தேன்.ஆயிசாவின் லாத்தா* நின்றிருநதார்கள்.அவரிடமே கேட்டுவிடுவது என்று அருகில் சென்றேன்.

“ரியாஸ், என்ன ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா…”

“ஆமாம் லாத்தா அது தான் ஆயிசாவை கூட்டி போகலாம்னு வந்தேன்…என்றேன் தயங்கியபடி…
என் சத்தத்தைக் கேட்டு ஆயிசாவின் உம்மாவும் வெளியே வந்தார்…
நான் சலாத்தி* வழியே ஆயிசா தெரிகிறாளா என்று ஊடுருவி பார்க்க முயன்றேன்…அவள் தென்பட வில்லை…
“இனி ஆயிசா ஸ்கூலுக்கு வராது வாப்பா..” ஆயிசாவின் உம்மா.
“ஏன்” இனம் புரியாத ஏக்கத்துடன் நான்.
“அவ பெரிய மனுசி ஆயிட்டா..” ஆயிசா உம்மா முற்றுப்புள்ளி வைத்தார்கள்
ஏமாற்றத்துடன் பள்ளி நோக்கி நடந்தேன்..
‘அவ பெரிய மனுசி ஆயிட்டாளாம் ஸ்கூலுக்கு வரமாட்டாளாம் இது எப்படி பதிலாகும்…போன வாரம் வகுப்பில் லீலா டீச்சர் , பெரிய ஆளா வரனும்னா நல்லா படிக்கணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆயிசா நல்லா படிச்சதுனாலே பெரிய மனுசி ஆயிட்டாளா..?’ வகுப்பில் அவள் ஞாபகம் இருமடங்கானது.

விடியலை நோக்கி

Posted on : 13-12-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

1

நீடூர்,பி. எம். ஆர். ஹாஜிரா பானு

கிணற்று மேட்டில் சாய்ந்து வானம் பார்த்தாள் சகினா. “அதே வானம்; அதே மேகம் ; அதே நிலவு.”

ஆனால்… இதே மாலை.  ஆசர் வேளை; எவ்வளவு இன்பம் …. போன மாதம் எல்லாம் அத்தாவுக்கு அந்த ஜுரம் வரும் வரை.  மூன்றே நாள் தனலாய்க் காய்ச்சல்.  மழை கொட்டிய அந்த விடியலின் கன்னி இருட்டில் தான் அவர்கள் வாழ்விலும் இருள் விழத் தொடங்கியது.

அன்றைய நாள், ஃபஜ்ரு பாங்கு சொன்னவுடன் எழுந்த சகினா, மழைத் தூறலைப் பொருட்படுத்தாமல் கிணற்றில் நீரிறைத்து சில்லென ஒலு செய்து, ஈரப்பாதம் தூசுபடாமல் குதிகால் பெருவிரல் ஊன்றி நடந்தவள் தந்தையின் கட்டிலருகே நின்றாள்.

“அத்தா எந்திரிங்க…”

எவ்வளவு ஜுரம், தலைவலியானாலும் ஒரு வக்த் தொழுகையைக் கைவிட்டு அப்துல்காதருக்குப் பழக்கமில்லை.

“நேரமாயிடுச்சாம்மா…” கேட்டபடி எழுந்தவர் “சகினா…!” என்றார் பதறியபடி.

“என்னாத்தா…?”

“என் கால் ரெண்டையும் அசைக்க முடியலியே…!” என்றார் கலவரமடைந்தவராக.

“தூங்கியிருக்கும்…!” சிரித்தபடி அவர் காலைத் தொட்டவள் திடுக்கிட்டாள்.  ஐஸ் கட்டிகளாய், கிள்ளினாலும் உணர்வில்லா மரக்கட்டைகளாய்…!

டாக்டரிடம் ‘ஓட’, வாதம் அடித்துவிட்டது என்றார்.

யார் யாரிடமோ சொல்லி, தினம் ஒரு டாக்டரிடம் காரில் அழைத்துப் போனதில், மகள் கல்யாணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த பணம் கரைய, அம்மாவும் கரைந்தாள்; ; ஓய்ந்தாள்!

அந்த ஊர் ஒரு ரெண்டுங்கெட்டான்.  தஞ்சை ஜங்~னை ஒட்டிய அல்லது சேர்ந்த முஸ்லிம்கள் நிறைந்த கிராமம்.  அப்துல் காதர் அங்கு பிரபல டெய்லர்.

வசிக்கும் வீடு சின்னதானாலும் ஜங்~ன் அருகே அவர் தொழில் பார்க்கும் சொந்தகடை சற்றுப் பெரியது தான்.

இவருக்குக் கீழே 4 டெய்லர்கள் வேலை செய்தார்கள்.  கை சுத்தம் ; நேர்மை! ஜங்~ன் மட்டுமில்லமால் டவுனிலும் அவருக்கு கஸ்டமர்கள்.  பொழுதுபோக்காய் எம்ப்ராய்டிங்கும் செய்ய, வாழ்க்கை கூட்ஸ் ரயிலாக இல்லாவிட்டாலும் கட்டை வண்டியாக இல்லாமலிருந்தது.

மூத்த பெண் சகினா தவிர, இப்போது 11 தேறியிருக்கும் முஜிப், நாலாம் கிளாஸ் நசீரா ஆகியோர் ஈன்ற செல்வங்கள்.

யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் சகினாவை ஜங்~ன் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ படிக்க வைத்து, பின் அதே ஸ்கூலில் டைலரிங் கிளாஸ் சேர்த்து, அவளும் எல்லா நவீன டைலரிங்கிலும் தேர்ச்சி பெற…

அப்போது தான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.  சின்ன ஜவுளிக் கடைகளில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு முடிந்த துணி அவர்களிடமே எடுத்து, ஆர்டர்படி அதை ரெடிமேட் ஆடைகளாகத் தைத்துத் தருவது தான் அந்த ஐடியா.
பணச் செலவு இல்லை.  வருடத்திற்கு ஆறேழு முறை ஆர்டர் கிடைத்தாலும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை கணிசமான பணம் வருமே…

எப்படியோ, யார் சிபாரிசோ… டவுனில் 3 சிறு கடைகளில் ஆர்டர் பிடித்த ஆறே மாதத்;தில் அவளுள் பெருமூச்செழ,

உள்ளிருந்து கேட்ட ஆண் குரலில் சிந்தனை கலைந்து எழுந்தாள்.

“டவுன்லயா இருக்கு கடை? நம்மூர்தானே.  முடிவா பத்தாயிரம் தரலாம்…அப்புறம்…தையல் மெ~pனெல்லாம் இனிமே வீட்ல வச்சிக்கிட்டு என்ன செய்யப்போறீங்க… அதையும் நானே எடுத்துக்கிட்டா ….” கல்லு வீட்டு கப+ர் தான் அம்மாவிடம் கறாராய்.

“சரி…! ஏதோ கொஞ்சம் பார்த்து செய் தம்பி” அம்மா.

அதிர்ந்த சகினா கதவோரம் போனாள்.

“அம்மா கொஞ்சம் உள்ள வர்றியா…?

இருப்புக்கு மீள்தல்

Posted on : 10-11-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

ஒரு குழந்தையைத் தூக்குவது போல அறுபது கிலோகிராம் எடையை வைத்தியர் தூக்கிக் கட்டிலில் படுக்கவைத்தார். ‘முதல் முயற்சிதானே. போகப்போகச் சரியாகிவிடும்’ எனப் புன்னகையோடு சொன்னார். எனது பதற்றம் நீங்கும்வரை அருகிலேயே இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். எனது பொழுதுபோக்குகள் பற்றி விசாரித்தறிந்தார். காலித் ஹுசைனியின் எழுத்துக்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அவரது கதாபாத்திரங்களின் வைத்தியசாலை அனுபவங்களைப் பற்றிக் கதைத்தோம். மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் குறித்துச் சொன்னபடி அன்றைய இரவு உணவை அவரே ஊட்டிவிட்டார். மருந்துகளையும் அவரே தந்தார். கதைத்துக் கொண்டிருந்தபடியே தூங்கிப்போய்விட்டேன்.

அடுத்தநாட்களிலும் நடைப்பயிற்சி தொடர்ந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவிட்டேன். சோர்வும் உடல் பலவீனமும் தொடர்ந்தும் இருந்ததுதான். எனினும் அறையை விட்டும் வெளியே வந்து சுற்றிவர இருந்த புல்வெளிகளிலும் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். நீண்ட நாட்களின் பின்னர் வெளிக்காற்று உடலில் பட மிகவும் இதமாக இருந்தது. அதிகநேரம் வெளியில், அந்த மருத்துவமனை வளாகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். புல்வெளியிலமர்ந்து ஏதேதோ சிந்தனையிலாழ்ந்திருந்ததைப் பார்த்த வைத்தியர் வெள்ளைக் காகிதங்களும், பேனையும் கொண்டு வந்து தந்து கவிதைகள் எழுதச் சொல்லிக் கட்டளையிட்டார்.

படிக்கவேண்டிய பதுமை – (சிறுகதை)

Posted on : 25-10-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

அழைப்பு மணி அலறியது –
அடுக்கலையில் வேலையாயிருந்த லைலா அப்படியே போட்டு விட்டு கதவைத் திறந்தாள்.

கையில் கடிதத்துடன் ஜூனைதா நின்றுக் கொண்டிருந்தாள் .

வாடி ஜூனைதா நல்லாயிருக்கியா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு திடிர்னு வந்திருக்கே என்ன விசயம் ?

உன்னை பார்த்திட்டு போகலாம்னு தான் வந்தேன் பதிலுரைத்தாள் ஜூனைதா.

ஏய் பொய் சொல்லாதே ! அது என்ன கையில-லட்டரா? யாரிடமிருந்து வந்திருக்கு?-உட்காரு-என்றாள் லைலா.

சோபாவில் அமர்ந்தபடி ‘உம் மச்சான் போட்டிருகாரு-கொஞ்சம் படிச்சுக் காட்டேன்’-என்றாள் ஜூனைதா.

‘அதானேப் பார்த்தேன் அம்மா சும்மா வரமாட்டாங்களேன்னு…கொஞ்சமென்ன பூராவையும் படிச்சுக் காட்டுறேன் இருடி அடுப்புல ஆணமிருக்கு இறக்கி வச்சிட்டு வந்துடுறேன்.-ஒரு மெல்லிய புன் சிரிப்பை உதிர்த்து விட்டு அடுக்கலைக்குள் சென்றாள் லைலா.

சபலம்

Posted on : 22-10-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

மாலை நேரம்…

தங்களை அலங்கரித்துக் கொண்டு அருகே கணவன் வர மழலைச் செல்வங்களுடன் பெருமிதத்தோடு நடந்து சென்ற பெண்களைத் தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்த மாதவி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.  அவளை அறியாது அவளது கண்கள் பொல பொலவென கண்ணீரைச் சிந்தின.
“ஏம்மா! அழறே”
“ஒண்ணுமில்லேடா கண்ணு!

தான் அழுவதைக் குழந்தை பார்த்துவிட்டதைக் கண்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“அழாதேம்மா… எனக்கும் அழ வருது…” குழந்தையின் கண்கள் கலங்கின.
“இல்லேடா கண்ணு. நான் அழமாட்டேன்”.

குழந்தை தனது அரும்பு விரலை தாயின் கண்ணீரைத் துடைக்க நீட்டியது.

மாதவி குழந்தையை அள்ளி அணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

இன்று அவள் முழு உரிமையுடன் தன் குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.  ஆனால் அவள் கணவன் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி போட்டி தான்.

“நான் தான் என் கண்ணுக்கு முதலில் முத்தம் கொடுப்பேன்” அது அவள் கணவன்.

“முடியாது நான் தான்…” இது அவள்.

ஏமாற்றம்

Posted on : 22-10-2009 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

மாதவி, என் தூரத்து உறவுக்காரப் பெண்.  என் முறைப் பெண்ணுங்கூட.  கல்லூரியில் பயின்று வந்த எனக்கு என் திருமணத்தில் எனது பெற்றோர் காட்டிவந்த அளவு அவசரம் தெரியவில்லை.  ஆனால் பெற்றோர் மன நிறைவோடு நடைபெறும் திருமணம் வாழ்வில் நல்லது பயக்கும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட நான் ஒப்புதல் அளித்துவிட்டேன்.  மாதவி அழகி தான்.  கல்லூரியில் புதுமுக வகுப்புவரை படித்து நிறுத்திவிட்டவள்.  நான் பி.ஏ.வை இந்த ஆண்டோடு முடிக்க வேண்டும்.  மாதவியின் வீட்டில் எல்லோருக்கும் அவளை எனக்கு முடித்துவிட இஷ்டந்தான்.  ஆனால் அவள் என்னை நேசிக்கிறாளா? என்னை மணம் செய்து கொள்ள அவளது மனம் விரும்புகிறதா? இன்பமான வாழ்வு தேவை என்றால் இருவரும் விரும்பியேற்கும் மணத்தால் தான் இயலும் என்ற உண்மை, என்னை அவளது மனத்தை அறிந்து கொள்ள தூண்டியது.  தனித்து சந்திக்க சந்தர்ப்பம் கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தேன்.
என் கையிலே ‘லாஸ்கி’ எழுதிய அரசியல் பாடப்புத்தகம் விரித்தபடியே இருந்தது.  கண்கள் புத்தகத்தை நோக்கியவாறே இருந்தன.  எண்ணதட புத்தகத்தைவிட்டு மாதவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
மாதவி மட்டும் என்னை மணக்க ப+ரண சம்மதம் தந்துவிட்டால் நான் தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்.  அதோ மாதவி! ஏதோ பஸ்ஸை எதிர் பார்த்து நிற்கிறாள் போலும் நான் எதிரேயிருந்த ‘பஸ் ஸ்டாண்;டை’ நோக்கி குறுக்கே ஓடினேன்.
“கிரீச்…”
“அம்மா….”
நான் கண் விழித்த போது நான் இருந்த சூழ்நிலை எனக்கு எதுவுமே புரியவில்லை.  அருகிலே அழகே உருவமான அழகு மங்கை, அவளுக்குப் பக்கத்தில் ஒரு ஆள்! அவனதுபணிவும் அடக்கமும் காணும் போது அந்தப் பெண்ணுடைய பணியாள் போல காட்சியளித்தான்.  பக்கத்தில் பல படுக்கைகள் சிலருடைய கைகள் ‘பேண்டேஜ்’ போடப்பட்டு இருந்தன.  சிலரது கால்கள் தூக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் கட்டுகள் போடப்பட்டிருந்தன.