Featured Posts

  • Prev
  • Next

வடமாநில சுற்றுலா – 4

Posted on : 04-08-2010 | By : mohamedali | In : வாழ்க்கை(Life and Works)

0

by கிளியனூர் இஸ்மத்


தாஜ்மஹால் உள்ளே நுழைந்ததும் மனம் பரவசத்துடன் மகிழ்ந்தது, அந்த அழகைக் கண்கள் கண்டு பருகி, இதயத்திற்கு இரசனையை இதமாக அனுப்பிக் கொண்டிருந்தது.

என்னிடம் உள்ள சோனி சைபர்சாட் கேமிரா தனக்குள் தாஜ்மஹாலை அடக்குவதற்கு, விழுங்குவதற்கு ஆர்வப்பட்டு விழுங்கியது.

தாஜ்மஹாலுக்குள் மூவி கேமரா அனுமதி இல்லை என நண்பர் ஹாஜாவின் மூவி கேமராவை பாதுக்காவலர்கள் வாங்கி வைத்துக்கொண்டனர்.(திரும்பி செல்லும்போது கொடுத்துவிடுகிறார்கள்)

என்னிடமுள்ள சோனி சைபர்சாட்டில் மூவியும் எடுக்கலாம் என்பது பாதுகாவலர்களுக்கு தெரியாது. புகைப்படத்துடன் மூவியையும் அதிகமாக எடுத்தோம்.

தாஜ்மஹாலுக்கு கோடைக் காலத்தில் செல்லக்கூடியவர்கள் காலில் அணிவதற்கு உறை (சாக்ஸ்) மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.காலணிகள் அனுமதி இல்லாததால் பலிங்கு தரையில் வெறுங்கால் சூடேறுகிறது குழந்தைகள் வெறுங்காலுடன் அவதிப்படுவார்கள்.

மாலை நேர வெய்யிலில் எங்களின் தாஜ்மஹால் சுற்றுலா சுறுசுறுப்புடன் இருந்தது.

தாஜ்மஹாலின் உள்ளே நுழையுமுன் அந்த வாயில் இருபக்க மதில் சுவருகளில் திருக் குர்ஆனின் வசனங்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததுமே இரு கல்லரைகள் இருந்தன.தாஜ்மஹாலின் நுழைவாயிலை கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஷாஜகான் மும்தாஜ் அடக்கஸ்தளம் என்றார்கள்.ஆனால் தாஜ்மஹாலின் கீழ்தளத்தில் தான் ஷாஜகான் மும்தாஜின் உண்மையான கல்லரைகள் இருக்கின்றன.மேல்தளத்தில் இருப்பது டம்மி என்பதுதான் உண்மை.

தாயின் சடலத்துடன் இரு நாட்கள் வீட்டில் …

Posted on : 01-08-2010 | By : mohamedali | In : வாழ்க்கை(Life and Works)

Tags: , , ,

0

திடீரென தனது தாயார் மரணத்தைத் தழுவியதால் 3 வயது மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகள் இரு நாட்களாக வீடொன்றில் சிறைப்பட்டி ருந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்து சிறுமிகள் இருவரதும் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக்  கொண்டிருந்ததால் சந்தேகம் கொண்ட அயலவர்கள், வீட்டின் அருகில் சென்று குரல் கொடுத்தபோது கதவைத் திறந்து விடும்படி சிறுமிகள் அழுதபடி கோரியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் பறந்தது.

தொடர்ந்து மேர்ஸிசைட் நகரில் விர்ரல் எனும் இ டத்திலுள்ள மேற்படி வீட்டுக் கதவு பொலிசாரால் உடைத்து திறக்கப்பட்டது. இதன்போது சிறுமிகளின் தாயாரான டெபி கால்ட்வெலின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துகளை அளவுக்கதிகமாக உபயோகித்தமையே அவரது மரணத்திற்குக் காரணமென நம்பப்படுகிறது.

சிறுமிகள் இருவரும் சமூக சேவை அமைப்பொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://networkedblogs.com/6pnty

இந்திய வடமாநில சுற்றுலா– 1

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : வாழ்க்கை(Life and Works)

0


இரவு 10 மணிக்கு சென்னை சென்டரலிருந்து டெல்லி செல்வதற்கு தினமும் தமிழ்நாடு விரைவு இரயில் தாயராக இருக்கிறது.முன்பதிவு செய்பவர்கள் ஒருமாதம் முன்பே செய்துக் கொள்வது நலம்.

எனது மற்றும் நண்பரின் குடும்பம் குழந்தைகளுடன் ஒன்பது நபர்கள் ஆக்ரா, டெல்லி, ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் சுற்றுவதற்கு புறப்பட்டோம்.குளிர்சாதன வசதி கொண்ட இரயில் பெட்டியில் முன்பதிவு இணையத்தின் மூலம் செய்திருந்ததால் கணினி அது இஸ்டத்துக்கு இருக்கையை தேர்வுச் செய்திருந்தது.இருக்கையை நம் விருப்பத்திற்கு தேர்வுசெய்யும் வாய்ப்பை இன்னும் இந்திய இரயிவே மக்களுக்கு வழங்கவில்லை என நினைக்கிறேன்.

இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்திருந்ததால் மேல் இருக்கை இரண்டும் ஜன்னலோர இருக்கைகள் மேலும் கீழும் எங்களுக்கு வழங்கி இருந்தார்கள்.

எங்களுடைய வசதிக்கு அமர்வதற்கு பயணிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் விட்டுக் கொடுத்து நாங்கள் தந்த இருக்கையில் அமர்ந்து எங்களை சந்தோசப்படுத்தினார்கள்.

விட்டுக்கொடுக்கும் மனோநிலை இந்தியர்களான நம்மிடம் நிறையவே இருக்கிறது. முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.

எங்கள் பயணம் இனிமையாக அமைவதற்கு இரயில் பயண இருக்கைள் எங்களின் விருப்பத்திற்கு மாற்றிக் கொண்டதால் குழந்தைகள் குதுகூலம் அடைந்தார்கள்.

முதலில் நாங்கள் சுற்றவேண்டிய இடம் ஆக்ரா என தீர்மானித்தோம். சென்னையிலிருந்து ஆக்ராவிற்கு சுமார் 1980 கி.மீ தூரம். இரு இரவுகள் ஒரு பகல் இரயில் பயணம். இரயிலில் தலையாணை போர்வை மற்றும் மெத்தை விரிப்பு இவைகளை முதல் இரண்டாம் மூன்றாம் வகுப்பு குளிர் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு தருகிறார்கள் சுகமாக தூங்கலாம்.

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

Posted on : 02-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES), வாழ்க்கை(Life and Works)

0

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.

ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் – துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.

ஈ.

ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று – துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1)

Posted on : 31-01-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES), வாழ்க்கை(Life and Works)

0

[ அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார்.

அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.]

[ காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்த ஆஸாத் அவரைப்பற்றி கூறும் சுவையான வரலாற்றுத்தொடர் ]

”1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன்.

என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.”

இதைச் சொன்னது, சினிமா நடிகர் ஆஸாத் - இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. நாடு துண்டாக்கப்படுவதற்கு முன்பு பம்பாய் திரைப்படத்துறையில் இருந்தான். அதற்குப் பிறகு லாகூரில் குடியிருக்க, அங்கு மற்ற சக நடிகர்கள் போல வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான். பாகிஸ்தானில் திரைப்படத்துறை அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவன் காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்தவன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்ததால், ஒரு நாள் அவனைத் தேடிச் சென்றேன். அவனுடைய கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு நான் பல சந்திப்புகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இனி ஆசாத்தே பேசட்டும்.

ஒரு சமயம் காலிப் இளமையாய் இருந்தது போல் தான் நானும் இருந்தேன். அந்த மாபெரும் கவிஞன் அரசியல் இயக்கத்தால் உள்ளிழுக்கப் பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நான் அகில இந்திய முஸ்லீம் லீக்கினுடைய உறுதியான தொண்டன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். மற்ற எத்தனையோ இளைஞர்கள் போலவே தான் நானும் காஸியாபாத் கிளையின் நேர்மையான உறுப்பினராக இருந்தேன். நேர்மையாக என்று சொல்வதற்குக் காரணம் என்னிடம் இருந்தது எல்லாம் அது ஒன்று தான்.

முஹம்மது அலி ஜின்னா டெல்லி வந்த போது, அதுவரை, அந்த அளவில் எவருமே பார்த்திராத ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டதை என்னால் தெளிவாக நினைவு கூர முடிகிறது. காஸியாபாத் வாலிபர்களான நாங்கள் அந்த நிகழ்வு பெரும் வெற்றியை அடைவதற்குச் சாதாரணமாக பங்காற்றவில்லை.

Biography of Kamal Uddin

Posted on : 31-01-2010 | By : mohamedali | In : English(ARTICLES), வாழ்க்கை(Life and Works)

0

Favourite Quotations:
“Invite all to the way of thy Lord with wisdom and beautiful preaching” Holy Qur’an 16:125

Biography of Kamal Uddin

Kamal Uddin was born on 28th June 1984. His family originates from Bangladesh, however among his family he was born in England. Kamal grew up in Hyde, a town in Greater Manchester.

In summer 1996 Kamal boarded an Islamic school in Bolton called Al Jamia-Al Islamiyya. He studied a course to memorise the whole Noble Qur’an. During the month of Ramadan in November 2000 halfway through his course, sadly his father Haji Malkas Ali passed away. By the grace of Allah at the end of 2001 Kamal finished his course and became a qualified Hafiz. Immediately after, The Hyde Jamia Mosque offered him to lead the next Ramadan prayers. At the time Kamal was only 17 years old. Having been successful he was offered to teach children at the Islamic Centre based in the Mosque and also to lead and call people to prayers. In September 2002 Kamal boarded Jamia Al-Karam in Retford to study Arabic grammar. After a year he returned back to Hyde Jamia Mosque to carry on his duties there.

Knowing at an early age his talent in reciting the Qur’an and singing Nasheeds, he opened a Nasheed class where young children can enjoy learning about Islam by singing Nasheeds and also a separate Hafiz class so he can teach others to memorise the Noble Qur’an like himself.

During January 2005, Kamal took his mother to Saudi Arabia, to perform the largest Islamic pilgrimage – Hajj. Having been inspired from his Hajj experience, Kamal started to compose his own lyrics for his first album. This was launched in August 2005 and became a huge success gaining Kamal his recognition as a Nasheed Artist after performing at the 1st Global Peace and Unity Event organised by the Islam Channel.

In May 2006, due to heavy demand from his listeners all over the world, Kamal released his second Album ‘Illallah’. This Album immediately became a bigger success selling in all leading Islamic stores. Shortly after in August, Kamal took a big step in his life and got married.

Kamal has taken part in many performances throughout the U.K and has impressed the internationally known propagator of Islam, Dr Zakir Naik, whilst performing during his talks. He has also had the honour to perform alongside other Nasheed artists such as Yahya Hawa, Ahmed Bukhatir, Zain Bhikha and many more. He is now working closely with IQRA Promotions, Sheffield on many new projects including his third Album along with a Nasheed Video.

An Imam, a Hafiz, a Haji and a Nasheed artist. A remarkable talented dear brother: Kamal Uddin.

By Monuwar Ali