Featured Posts

  • Prev
  • Next

A VILLAGE IN SRILANKA – இலங்கையின் கிராமமொன்று !

Posted on : 23-02-2010 | By : mohamedali | In : country

0

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

Labels: , , http://msmrishan.blogspot.com

இலங்கை,மாத்தளையில் அமைந்திருக்கும் அங்குனுமிட்டியாவத்த எனும் கிராமத்தின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு…!

படங்களின் பாதியே இங்கு தெரிகின்றன.படங்களின் மேல் இரு தடவைகள் அழுத்த படங்களை முழுதாகப் பார்க்கலாம்.
புகைப்படங்களை எடுத்தனுப்பிய நண்பருக்கு நன்றி !

Only in Vietnam

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), country

0

From : mujeeb rahman

ஃபிரான்ஸில் முஸ்லிம்களின் செல்வாக்கு ( 2 )

Posted on : 28-12-2009 | By : mohamedali | In : country, இஸ்லாம் (ISLAM)

0

(Nidur)M.A.முஹம்மது ஸலாஹுத்தீன் B.Com

[ ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நமது ஊருக்கு நேர்மாற்றம். யாரும் போட்டி இடலாம். ஒரு சின்ன நிபந்தனை; 500 நகர, மாநகர மேயர்கள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.

நிகோலா சர்கோஜியின் உள்துறை அமைச்சக செயலாளரிடமிருந்து நன்றி தெரிவித்து கடிதம் வந்தது. தொடர்ந்து கடிதங்கள் எழுதினேன். எமது ஆலோசனைகளில் பெரும்பகுதியை அவர் செயல்படுத்தினார். நேரடியாக எமது மடலில் இருந்து பெறாமல் இருக்கலாம். ஆனால் நான் 5 மடல் எழுதியதும், 4 நன்றிக்கடிதம் பெற்றதும் உண்மை. ஃபிரான்ஸ் அதிபரின் நடவடிக்கைகளினால் மற்ற கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டன. இருபெரும் கட்சிகளில் முஸ்லிம்கள் மேல்நிலைக்கு வந்துவிட்டனர். இது சர்வதேச ரீதியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது.

இக்கட்டுரையின் மற்றொரு முக்கிய நோக்கம் உலகில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இந்த முன்னுதாரணத்தை காட்டி தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முயல வேண்டும் என்பதே.]

ஒரு சில குறைகள் இருந்தாலும் முஸ்லிம் ஆதரவை சர்கோஜி கைவிடவில்லை. 2007ம் ஆண்டு தேர்தல் நெருங்கிய சமயம் எனக்கு ஒரு சிந்தனை. இஸ்திகாரா தொழுது உறுதிசெய்து கொண்டேன். மாற்ற முடியாத முடிவை எடுத்த பிறகு பரீட்சித்துப் பார்க்க இருவரிடம் ஆலோசனை கேட்டேன்.ஒருவர் பல்கலைக்கழக பேராசிரியர்- நவ் முஸ்லிம்; வெள்ளையர்; தவறாமல் ஜும்ஆவுக்கு வருபவர். அவர் ஏன் இமாம் என்ற ரீதியில் நீங்கள் அவருக்கு கடிதம் போடுகிறீர்கள்? தேவையில்லை!” என்றார்.

தேவைதான்! காரணம் அவர் முஸ்லிம் நலனில் அக்கறை காட்டுகிறார் என்றேன். அதெல்லாம் அரசியல் ஆதாயம் கொண்டது என்று தொடர்ந்தார்.

ப்படி இருப்பினும், முஸ்லிம் என்ற வார்த்தையை சொல்வதற்குக் கூட நான் கடிதம் எழுதலாம் அல்லாவா? அது சரி. அவருக்கு போட்டியாக எதிரணியில் நிற்கும் இடதுசாரி பெண்மணி அப்படி இஸ்லாத்தைப் பற்றி சொல்ல வாய்ப்பு உண்டா? விடாமல் கேட்டேன்.

”அவரா? அதையெல்லாம் அப்பெண்மயியிடம் எதிர்பார்க்க முடியாது என்றார். இவ்வளவுக்கும் அம்மணி ஸெனகல் (Senegal) என்ற ஆப்ரிக்கா நாட்டில் பிறந்தவர். அங்கு 94 முஸ்லிம்கள். 2003-ம் ஆண்டில் பிரான்ஸில் டிசனகல் நாட்டவரின் எண்ணிக்கை சுமார் 50,000. மற்றொருவர் ஃபிரெஞ்சு அரசியல்வாதி கறுப்பர். நவ் முஸ்லிம். அவர் நான் இடதுசாரி என்றார்.

அதனால் என்ன? நீங்கள் ஒரு முஸ்லிம். உண்மையை சொல்லுங்கள். என் முடிவு தவறா?”இல்லை. சர்கோஜி சுத்தமானவர் அப்புறம் என்ன, இரண்டே பக்கத்தில் ஆதரவும், வாழ்த்தும், ஆலோசனையும் தெரிவித்ததோடு, ஒரு கணிப்பையும் கூறி இருந்தேன். அதாவது அன்று பிரதமராக இருக்கும் டொமினிக் விரைவில் மக்கள் ஆதரவை இழப்பார் என்று. ஃபிரான்ஸ் அதிபராய் நியமிக்கப்படுபவரே பிரதமர். 5 ஆண்டு பதவி காலம். ஆனால், அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தூக்கிவிடலாம். ஒரு பிரதமர் கூட முழுமையாக ஐந்தாண்டை முடித்தது இல்லை. அதுவரை எந்த அதிபரும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருந்ததே இல்லை. பெரும்பாலும் மறைமுகமாக நிறைவேற்றப்படும். அது எப்படி?

தமிழ் கனடா – 013 குளிர் குளிர் குளிர்

Posted on : 27-12-2009 | By : mohamedali | In : country

0

அன்புடன் புகாரி

தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள். கனடாவுக்கு மிக அதிகமாக வந்து குடியேறியிருக்கும் தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த நிலையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களைச் சொல்லலாம். அதன் பின்னர்தான் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சொல்லவேண்டும்.

இலங்கையில் பெரும்பாலும் வெப்பம் 37 பாகை செல்சியசைத் தாண்டுவதில்லை, குளிர் 22 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை தமிழ் நாட்டில் அது 40 வரை உயரும் 20 வரை தாழும். ஆக இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் தட்பவெட்பத்தில் அதிக வித்தியாசம் இல்லை.

ஆகவே தமிழர்கள் அரைக்கை சட்டையும் வேட்டியுமாகவே பெரும்பாலும் நகர்வலம் வருவார்கள். பெண்கள் இடைப்பகுதியைத் திறந்து வைத்து சேலை உடுத்துவார்கள்.

சட்டை இல்லாமல் வயல்வெளிகளில் வேலை செய்வதும் ஒரு கோவணத்தோடு மட்டுமே உலாவருவதும் கிராமங்களில் மிகச் சாதாரணமாக நடக்கும் விவசாய விசயங்கள். ஆனால் கனடா அப்படியா?

கனடா உலகில் மிக அதிக குளிர் கொண்ட முதல் மூன்று நாடுகளுள் ஒன்று. கனடாவின் குளிரைப் பற்றி எழுதினால், நீங்கள் கம்பளியைப் போத்திக்கொண்டு வாசித்தாலும் உயிர் உறைந்துபோகும். அத்தனைக் குளிர்.

கனடாவில் யூகான் பிரதேசத்தில் உள்ள ஸ்னாக் (Snag) விமான நிலையத்தில் மிக அதிகமான குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுகின்ற மூச்சுக் காற்றே கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தை உருவாக்கும் குளிர். தண்ணீரை அள்ளி வீசினால் அது தரையைத் தொடும்முன்னர் அப்படியே உறைந்து பனிப்பூக்களாய் மாறும். தொலை தூரத்தில் பறக்கும் விமானம் நம் காதுக்குள் பறப்பதைப் போல சத்தம் கேட்கும்.

ரஸ்யா, கிரீன்லாண்ட், கனடா இந்த மூன்று நாடுகளும்தான் உலகில் மிக அதிக குளிர் கொண்ட நாடுகள். இந்த மூன்று நாடுகளின் குளிரைவிட மிக மிக அதிக குளிர் உள்ள ஓர் இடம் உலகில் உண்டு. அதுதான் அண்டார்டிகா. பூமியின் தென் துருவம் இதுதான். ரஸ்யா, கிரீன்லாண்ட், கனடா ஆகிய மூன்று நாடுகளும் பூமியின் வட துருவத்தில் உள்ளன.

வடதுருவத்தைவிட தென்துருவமே மிக அதிக குளிர் கொண்ட பகுதி. அண்டார்டிகாவில் ஓஸ்டாக் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்ட குளிர் -89.2 செல்சியஸ். இது மேலும் -91 செல்சியஸ் செல்வதாக வாய்வழி தகவல்களும் உண்டு. அண்டார்டிகா ஒரு கண்டம் மட்டுமே. இங்கே நாடுகளோ மக்களோ கிடையாது என்பதால் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வக்கூடாது.

ரஸ்யாவின் வெர்கொயன்ஸ் என்னும் இடத்தில் -68 செல்சியஸ், கிரீன்லாண்டின் நார்த் ஐஸ் என்னும் இடத்தில் -66 செல்சியஸ், கனடாவின் ஸ்னாக் என்னும் இடத்தில் -63 செல்சியசும் மிக அதிக குளிர் அளவுகள் பதிவுசெய்யப்பட்டுளன. இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் அலாஸ்காவில் -62 செல்சியஸ் பதிவாகி இருக்கிறது.

தமிழ் நாட்டின் மலையரசியான ஊட்டியில்கூட குளிர் 4 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை.

கனடாவில் ஸ்னாக் என்னும் இடத்தில் -63 செல்சியஸ் குளிர் இருந்தாலும் கனடா முழுவதும் அப்படியல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் டொராண்டோவில் குளிர் -32 செல்சியஸ்வரை செல்லக்கூடும் என்றாலும் அதெல்லாம் அபூர்வம்.

தமிழ் கனடா – 012 நீர்வளம்

Posted on : 18-12-2009 | By : mohamedali | In : country

0

அன்புடன் புகாரி

ஹட்சன் விரிகுடா, செயிண்ட் லாரன்ஸ் நதி ஆகிய இரண்டும் கனடாவின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்துகளாகும். இவற்றின் வழியே உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கப்பல்கள் நாட்டின் நடுக் கூடம் வரை வர இயலும்.

கனடாவின் சரித்திரத்தில் நீர்வழிப் போக்குவரத்துகள் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. தார்ச் சாலைகள், ரயில் பாதைகள், ஆகாய மார்க்கங்கள் எல்லாம் தலை காட்டுவதற்கு முன் மக்கள் பயணங்கள் மேற்கொள்வதற்கும் வணிகப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் நீர்வழிகளைத்தான் பயன்படுத்தினார்கள். செயிண்ட் லாரன்ஸ், மெக்கென்ஸி, பிராஸர், சஸ்காட்சேவன், ஒட்டாவா, செயிண்ட் ஜான் ஆகிய நதிகள் கனடாவின் மிக முக்கிய நீர்வழிகளாகச் செயல்பட்டன.

உலகின் ஏனைய சரித்திரங்களைப் போல நதிக்கரையில்தான் கனடாவிலும் மக்கள் வாழத் தொடங்கினர், நாகரிகம் கண்டனர். கனடாவின் நதிகள்தான் உலகின் நீர்வழி உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. கனடாவுக்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தருகின்றன.

தமிழ் கனடா – 011 ஆயிரம் தீவுகள்

Posted on : 16-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0

அன்புடன் புகாரி


பல விசயங்களில் கனடா ஒரு சொர்க்க பூமிதான். இங்கே நதிகளுக்கும் குறைவில்லை. நதிகள் என்றால் சாதாரண நதிகளா? மெக்கென்ஸி என்பது கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர்கள். வடஅமெரிக்கா மொத்தத்திற்கும் இதுதான் இரண்டாவது மிகப்பெரிய நதி. மிசிசிப்பி-மிசௌரி என்ற நதியே முதலிடம் வகிக்கிறது. அது அமெரிக்காவில் ஓடும் ஒரு பிரமாண்ட நதி.

இப்படி நன்னீர் ஏரிகளும் ஆறுகளும் சேர்ந்து உலகின் 30 சதவிகித குடிநீரை கனடாவுக்கே சொந்தமானதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. அதாவது விக்கல் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழலாம் இங்கே.

இந்தக் குடிநீரையெல்லாம் கனடாவின் நிலத்தில் பாய்ச்சினால் – சும்மா ஒரு கற்பனைக்குத்தான் – உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடா இரண்டு மீட்டர் ஆழத்தில் மூழ்கி மூச்சற்றுக் கிடக்கும்.

இந்த ஆறுகளிலும் ஏரிகளிலும் இடையிடையே ஆயிரக்கணக்கில் குட்டிக் குட்டியாய்த் தீவுகள் உண்டு. அவற்றைக் காண்பதைப் போல் ஒரு சுகம் வேறு எதிலும் இருக்கமுடியாது. ஒரு குலுக்கல் பரிசில் இங்கே ஒரு குட்டித் தீவு ஒருவருக்கு அவர் வாங்கிய 2 டாலர் சீட்டுக்கு விழுந்திருக்கிறது. இன்று அவர் ஒரு தீவின் சொந்தக்காரர்.

தீவுகளில் வாழ்பவர்கள், விசைப்படகுகள் வைத்திருப்பார்கள். சில தீவுகளில் பள்ளிக்கூடங்கள் கூட உண்டு. தீவுகளிலும் இங்கே அவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள். ஆயிரம் தீவுகள், முப்பதாயிரம் தீவுகள் என்று இரண்டு இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் தலங்கள் அவை.

முதன் முதலில் செயிண்ட் லாரண்ஸ் நதியில் இருக்கும் ஆயிரம் தீவுகளைக் காணச் சென்றது எனக்கு ஒரு கனவு போன்ற அனுபவம். இந்தத் தீவுகளில் பல கனடாவுக்கும் சில அமெரிக்காவுக்கும் சொந்தமானவை. ஏனெனில், செயிண்ட் லாரண்ஸ் நதி இந்த இரு நாடுகளுக்கும் இடையில்தான் ஓடுகிறது.

ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதியின் 200 கிலோமீட்டர் தூரம் அமெரிகாவுடன் இணைந்துள்ளது. செயிண்ட் லாரன்ஸ் நதியின் ஆயிரம் தீவுகளில் நான் மேற்கொண்ட குதூகலமான சுற்றுலாப் பயணத்தில், நான் கொண்ட அதிசயத்தை அன்று இரவே இப்படி நான் எழுதி வைத்தேன்…

தமிழ் கனடா – 010 அடமான வீடுகள்

Posted on : 16-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0

அன்புடன் புகாரி

ஒரு நடுத்தர வர்க்கத்தின் வசதியான வீடு சுமார் 5 லட்சம் கனடிய டாலர்கள் ஆகும். சராசரியாக ஒரு கனடிய டாலர் என்பது 40 இந்திய ரூபாய்கள். அதாவது இரண்டு கோடி ரூபாயில் ஒரு நல்ல வீடு வாங்கிவிடலாம் இங்கே.

அதற்காக அம்மாடியோவ் என்று வாய் பிளக்கவேண்டாம். முன்பணம் மட்டும் கட்டினால் போதும் அடமான பணத்தை வங்கி உடனே கட்டிவிட்டு மாதா மாதம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என்று ஒரு தவணைமுறையில் உங்கள் சம்பளத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்.

எப்படியும் இங்கே மாதம் சுமார் 1200 டாலர்கள் அடுக்கு மாடி கட்டிடத்தின் இரண்டு அல்லது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகளுக்கு (apartment) வாடகையாகக் கொடுக்க வேண்டிவரும். வீட்டு வாடகை என்பது இங்கே பல விசயங்களை உள்ளடக்கியது. அதனால்தான் வாடகை அதிகம் இங்கே.

கனடா குளிர் நாடு என்பதால், குளிர்காலத்தில் பயன்படுத்தும் வெப்பக்காற்றுக் கருவிகள் (Heating Systems), வெயில் காலத்தில் பயன்படுத்தும் குளிர்க்காற்றுக் கருவிகள் (Air Condition Systems), மின்சாரம், மின்சார அடுப்பு, தண்ணீர், துவைத்து உலரவைக்கும் கருவிகள், அடுக்குமாடிக் கட்டிடம், தோட்டம், அவற்றைச் சுற்றியுள்ள பாதைகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி அறை, பொழுதுபோக்கு அறை, நீச்சல் குளம், பாதுகாவலர்கள், தீயணைப்புக் கருவிகள் என்று இவற்றுக்கு மட்டுமே 400 லிருந்து 600 வரை ஆகிவிடும்.

இப்படி கட்டும் வாடகையை (சுமார் 1000 லிருந்து 1600 வரை) முறையாக வங்கிக்கு (mortgage) அடமானத் தொகையாக கட்டினால், இருபத்தி ஐந்து வருடங்களில் அழகான வசதியான தனி வீடு உங்களுடையதாகிவிடும். தனியாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால், வட்டி சேர்த்து நீங்கள் வங்கிக்கு வீட்டின் விலையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகவே கட்டுவீர்கள்.

தமிழ் கனடா – 009 மனிதனும் மரமும்

Posted on : 15-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0

அன்புடன் புகாரி

சிவப்பும் வெள்ளையும்தான் கனடாவின் தேசிய நிறங்கள். இங்கே மிகப் பெரிய அரசியல் மாற்றங்களைச் செய்த மக்கள் பிரான்சிலிருந்தும் பிரிட்டிசிலிருந்தும் வந்தவர்கள்தாம். ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? அவர்கள்தான் கனடாவே. இவர்களின் ஒருங்கிணைப்பில்தான் கனடா உருவானது. பிரான்சின் நிறம் சிவப்பு. பிரிட்டிசின் நிறம் வெள்ளை. இவை இரண்டும் சேர்ந்ததே கனடிய நிறங்கள்.

எனவே கனடாவின் கொடி சிவப்பும் வெள்ளையும் கொண்டதாக இருக்கும். அதன் நடுவே மிக அழகான சிவப்பு மேப்பிள் இலையும் இருக்கும். அதுமட்டுமல்ல, கனடியர்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக நீரினுள் எறியும் ஒற்றைக் காசில் (penny) மேப்பிள் இலை பிரகாசிக்கும். இவர்கள் இதுவரை நயாகராவில் விட்டெறிந்த சல்லிகளைச் சேகரித்தால் ‘இது போதுமே’ என்று புறப்பட்டு ஊருக்குச் சென்று ஒரு மாநிலம் வாங்கிக்கொண்டு வசதியாய் தங்கிவிடலாம்.

மனதின் ஆசைகள் நிறைவேற இவர்கள் நீரில் சில்லறைகளைச் சுண்டுவார்கள். பெரும்பாலும் ஒற்றைக் காசுதான். என்ன, கஞ்சம் கஞ்சம் என்று கூறத் தோன்றுகிறதா?

தமிழ் கனடா – 008 முதல் கனடா 1867

Posted on : 14-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0

அன்புடன் புகாரி


எல்லாம் சரிதான், கனடா எப்போதுதான் உருவானது?

1867 ஜூலை முதல் தேதிதான் இன்றைய ஒண்டாரியோ, கியூபக், நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோசியா ஆகிய மாகாணங்களை ஒன்றாய்ச் சேர்த்து முதன் முதலில் ஒரு நாடாக கனடாவை உருவாக்கினார்கள். இன்றைய கனடாவில் இது கால்வாசிக்கும் சற்றே அதிகம். அவ்வளவுதான்.

பிறகுதான் கனடாவின் கட்டுக்கோப்பான அரசியல் என்னும் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல மற்ற இடங்களும் வந்து சேர்ந்து கொண்டன. இதனால் கனடா, உலகின் இரண்டாம் மிகப்பெரிய நாடாகிவிட்டது.

இதில் சில வலுவான அரசியல் காரணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது, ஒன்று சேர்ந்த நாடாக கனடா உருவாகாவிட்டால், அதன் பலபகுதிகளும் அமெரிக்காவுக்கு பெப்பரோணி பீட்சாவாக ஆகிவிடக் கூடும் என்ற ஐயம். அமெரிக்கர்களுக்கு பீட்சா ரொம்பப் பிடிக்கும். துண்டுபோடாமலேயே தின்று முடிப்பார்கள். பக்கத்தில் ஒரு கோக் இருந்தால் போதும். அதான் ஏழு ஏரிகள் இருக்கின்றனவே. அவை சோக்கான கோக் ஆகாதா?

தமிழ் கனடா – 007 வட அமெரிக்கா

Posted on : 13-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0

அன்புடன் புகாரி


இதோ உங்களுக்காக இன்னொரு குட்டிக்கதை. கனடாவுக்குப் பெயர் வந்த காரணம்பற்றியதுதான்.

ஐரோப்பியர்கள், உலகின் ஒரு இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த விசயம்தான். நம்மைப்போல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன்

வாழ்வோம் என்ற சில்லறைத் தத்துவங்களெல்லாம் அவர்களுக்கு ஆந்தராக்ஸ் கொடுத்து அல்லாடவிட்டாலும் ஒத்துவராத விசயம்.

காடோ செடியோ என்று நாடுவிட்டு நாடு அலைவார்கள் பொருள்தேடி நம்மைப் போல் நாலரையணா சம்பளம் வாங்க அல்ல, நாட்டையே ஒரு போடு போட.

கேட்டால் நாங்கள் எல்லாம் ஆராச்சியாளர்கள் என்று பின்னல் போட்ட கெட்டி நூலை ஒரு பிசிறும் இல்லாமல் நம்முன் விடுவார்கள் மிக இயற்கையாக. ஆனாலும் இந்த உலகத்தை ஒன்றாக இணைத்தவர்கள் அவர்கள்தானே? பின் பிரித்தாளப் பிரித்தவர்களும் அவர்கள்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

‘வெள்ளையர் திருட்டு நன்மையில் முடியும்’ என்று ஒரு சந்தர்ப்ப மொழி, பழமொழி போல வந்து என் நெற்றிப் பொட்டை முட்டுகிறது. ஓரமாய் ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்கிறேன்.

வெள்ளையர்கள் இந்தியா வந்திருக்காவிட்டால், நான் ஒரத்தநாட்டின் எட்டாம் சரபோஜி மகராஜாவாகி படிக்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்(!) ராணியைச் சுற்றிச் சுற்றி புழுதி பறக்க குதிரை சவாரி செய்து கொண்டிருக்கலாமோ என்னவோ இந்நேரம் :)

அப்படி வெள்ளைக்காரர்கள் பொன்னும் மணியும் தேடி கனடா பக்கம் அலையும்போது ஒரு மண்ணும் கிடைக்கவில்லை அவர்களுக்கு. வெறுப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி ஒரு உலக வெறுப்பு மாநாடே போட்டது அவர்களின் உள்ளுக்குள். இன்னாடா ஊரு இது? டப்பா ஊரு? குளிர் உட்காரும் இடத்தையும் ஊசி குத்தி ஊசி குத்தி உண்டு இல்லை என்று ஆட்டி எடுக்குது. உருப்படியா ஒரு புளியங்கொட்டையும் இல்லையே இங்கே என்று aca Canada என்று வசைபாடினார்கள். அகா கனடா என்றால் அவர்கள் மொழியில் ‘ஒரு மண்ணும் கிடையாது’ என்று அர்த்தமாம். பிறகு அதுவே பெயராக ஆகிவிட்டதாம். நம்புவோமே? நம்பினால் நமக்கென்ன நட்டம்?

தமிழ் கனடா – 006 கானடா கனடா—அன்புடன் புகாரி

Posted on : 12-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0

1535ல் பிரெஞ்சுக்காரரான ஜாக் கார்டியர் (Jacques Cartier) என்பவர் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கு வடக்குப் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு பழங்குடிப் பொடியர்களிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி கேட்டார் கார்டியர்.

எப்படிக்கேட்பது? மொழிப்பிரச்சினை இருக்கிறதே? இவர் பிரெஞ்சு பேசினால் பொடியர்களுக்கு மூக்கில் பொடி வைத்தது போல் இருக்காதா? எனவே சர்வதேச மொழியில் பேசினார் – ம்கூம் – ஆடினார். ஊமை பாசை என்பது ஓர் அற்புத அபிநய நடனம்தானே?

பழங்குடியினரின் மொழியில் kanata என்றால் கிராமமாம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்களின் kanata என்று பீதியுடன் கூறிப் பின்வாங்கியதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரெஞ்சுக்காரர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் Kanata என்று பெயரிட்டு விட்டார். காசா பணமா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ற வள்ளுவன் குறள் அவருக்குத் தெரியாததால், தீர்மானமான ஒரு முடிவுக்கு அவரே வந்து kanata என்று திட்டவட்டமாக எழுதிவிட்டார் சரித்திரத்தில். நான் சரித்திரம் படிக்கும் போதெல்லாம் ஒரு சந்தேகத்துக்குள் அடைபடுவேன். யாரோ ஒருவரின் கூற்றை எப்படி மக்கள் சரித்திரம் இதுதான் என்று ஒப்புக் கொள்கிறார்கள் என்று. வேறு எவரும் எதையும் கூறாதபோது காக்கைக் குரலே பொற்குரல், அப்படித்தானே?

தமிழ் கனடா – 005 வந்தேறிகளின—அன்புடன் புகாரி

Posted on : 12-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0


கனடாவின் சரித்திரத்தைப் பாடமாக எடுத்தால் எல்லோரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துவிடலாம். அவ்வளவு எளிமையானது. கனடா என்பது நேற்றுதான் பூத்த முள்ளில்லா வெள்ளை ரோஜாதான். ஆனாலும், பழமை போற்றும் பண்பாடுகளில் சிறந்து விளங்கும் அற்புத நாடு.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பூர்வீகக் குடியினரான (அபாரிஜினல்) செவ்விந்திய மக்கள் வாழ்கிறார்கள். புதிய குடிவரவாளர்களால், இன்று அவர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம்தான்.

ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இங்கே வந்தார்கள். ஒரு அறுபது வருடங்களாக ஐரோப்பா, ஆசியா, தென்னமரிக்கா, கரிபியன் தீவுகளிலிருந்து மக்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள்.

இந்தியர்கள் அறுபதுகளிலேயே கனடா வரத் தொடங்கிவிட்டார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலும் சீக்கியர்களும் குஜராத்தியர்களுமே வந்தார்கள். இந்திய சாதனையாக ஒரு சீக்கியர் கனடாவின் ஒரு மாகாணத்திற்கு முதலமைச்சர் ஆகியிருக்கிறார். கனடாவில் முதலமைச்சரை Premier என்றழைப்பார்கள். பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் எண்பதிற்குப் பிறகே கனடா வந்தார்கள். இவர்களைப் பற்றித்தான் நாம் முழுமையாய் இந்தக் கட்டுரை முழுவதும் பேசப் போகிறோம்.

‘கனடான்னா இன்னாடா அர்த்தம் ?’ இப்போதய வாண்டுகள் எல்லாம் சும்மா இருப்பதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு கேள்விச் சுத்தியல் வைத்திருக்கிறார்கள். கனடா என்ற பெயர் எப்படி வந்தது? இதற்குச் சில குட்டிக்கதைகள் வைத்திருக்கிறார்கள் இங்கே.

தமிழ் கனடா – 004 ஏரிகள் ஏரிகள்—-அன்புடன் புகாரி

Posted on : 11-12-2009 | By : mohamedali | In : country, கட்டுரைகள் (ARTICLES)

0


கனடாவில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைக்குள் நாம் விரைந்து செல்ல வேண்டும்தான். ஆனாலும், கனடாவுக்குள் இலங்கைத் தமிழர்களை இறக்குமதி செய்யும் முன் நாம் ஒரு முறை அதனுள் இறங்கிப் பார்த்துப் பரிச்சயப் பட்டுக்கொள்ளவேண்டாமா? அப்போதுதானே, இலங்கையர் எங்கே இறங்கினார்கள் எங்கே வாழ்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் இனி என்ன அவர்களுக்குச் செய்ய முடியும் என்பதெல்லாம் நமக்குத் தெரியவரும்.

கனடாவை ஏரிகளின் பொன்நாடு என்று கூறினாலும் அது குறைத்துக் கூறுவதாகவே ஆகும். ஏன் தெரியுமா? சுமார் 3 லட்சம் ஏரிகள் (!!!) இங்கே இருக்கின்றன. (ஒரு லட்சத்திற்கு ஒரு ஆச்சரியம் என்ற விகிதத்தில் ஆச்சரியக் குறிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன)

அதாவது சுமார் 10 கனடியர்களுக்கு ஓர் ஏரி. உண்மையைச் சொல்வதென்றால் கனடாவில் ஏரிகள் எத்தனை என்பது எவருக்கும் தெரியாத ஒரு கணக்கு. உலகிலேயே ஏரிகள் மிக அதிகம் உள்ள நாடு கனடாதான்.

தமிழ் கனடா – 003 துருவக்கடல்—-அன்புடன் புகாரி

Posted on : 10-12-2009 | By : mohamedali | In : GENERAL KNOWLEDGE, country

0


கனடாவின் அட்லாண்டிக் கடற்கரைக்கும் பசுபிக் கடற்கரைக்கும் இடைத்தூரம் 5000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம்.

சீட்டியடித்துக்கொண்டே ஒரு சாதனை நடை நடப்பதாக இருந்தால் ஒரு காப்புறுதி (insurance) எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் தெற்கிலிருந்து வடக்கே நடக்கப் போகிறீர்கள் என்றால் காப்புறுதி பெறுவது கடினமாகலாம். அவ்வளவு குளிர் அங்கே.

தெற்கே அமெரிக்கா அன்புடன் உங்களை வரவேற்கும். வடக்கே துருவக்கடல் (ஆர்க்டிக்) உங்களை ஒரு வழியாக்கிவிடும். கறுப்புக் குளிருக்கு வெள்ளை முகம்! வித்தியாசமாக இல்லை?

கனடாவின் வடக்கு எல்லையிலும் மக்கள் வாழ்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே. இங்கே பல்லாயிரம் வருடங்களாய் வாழ்ந்து வந்த செவ்விந்தியர்களை அபாரிஜினல் (Aboriginal) மக்கள் என்றே அழைக்கவேண்டும் என்பது இங்கே சட்டம். எஸ்கிமோக்கள், செவ்விந்தியர்கள் என்றெல்லாம் கூறினால் அரசு கோபித்துக்கொள்ளும். ஏனெனில் அது அவர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது.

மொத்த கனடாவின் மூன்றில் ஒரு பகுதி, இந்த முப்பெரும் பனி நிலப்பரப்புகளைக் கொண்ட வடபகுதி. இங்கே என்ன இருக்கிறது வெறும் பனிதானே என்று யாராவது நினைத்துக்கொண்டால், அவர் நெற்றியில் ‘அச்சச்சோ ஆசாமி’ என்று ஒரு முத்திரையைக் குத்திவிடலாம். தங்கச் சுரங்கம், வைரச் சுரங்கம், ஈயச்(lead) சுரங்கம், துத்தநாகச்(zinc) சுரங்கம் எண்ணை வளங்கள் (oil and gas) எல்லாம் இங்கே ஏராளம் ஏராளம்.

‘நடு இரவுச் சூரியனின் நிலம்’ Land of Midnight Sun என்று செல்லமாக இதனை அழைப்பார்கள். ஏன்? வெயில் காலத்தில் சில நாட்கள் சூரியன் 24 மணிநேரமும் மேலதிக நேரம் (overtime) போட்டு வேலை பார்க்கும்.

ஆனால் குளிர்காலம்தான் இங்கே மிக அதிகம். -63 பாகை செல்சியஸ் (-81 பாகை பாரன்ஹீட்) குளிரைத் தாங்குவீர்களா? குளிர் பதனப் பெட்டிக்குள் சென்று இறுக மூடிக்கொண்டால் கொஞ்சம் சூடாக உணர்வீர்கள்தானே? 0 பாகை செல்சியசில் நீர் உறைந்துவிடும். நீங்கள் எப்போது உறைவீர்கள்? வாசிக்கும்போதே உறைவீர்கள் :)

கனடாவில் தமிழனின் புலம்பெயர் வாழ்வு—அன்புடன் புகாரி

Posted on : 10-12-2009 | By : mohamedali | In : GENERAL KNOWLEDGE, country

0


நம்மூர் வாழ்க்கை மாட்டுவண்டியைப் போன்றது. இரண்டு மாட்டை வாங்கிப் பூட்டிவிட்டால் வண்டி தானே ஓடிக்கொண்டிருக்கும். கனடிய வாழ்வென்பதோ மிதிவண்டியைப் போன்றது. ஒவ்வொரு முறையும் உயிரழுந்த உயிரழுந்த மிதிப்பதை நிறுத்தினால் அந்த நிமிடமே நாம் மரண மிதிபடுவோம்.

உண்மைதான், பலருக்கும் இங்கே உறங்கவும் பொழுதின்றி இருபணி முப்பணியென்று செக்குப்பிராணி வாழ்க்கைதான். கிரடிட் கார்ட் என்பதை எவரும் பிழையாக மொழி பெயர்க்காதீர்கள் கடனட்டை என்பது தவறு கடவுள் அட்டை என்பதே சரி. அது இல்லாமல் கோவில் உண்டியலில் விழுந்த செல்லாக்காசுதான் கனடிய வாழ்வு.

படிக்கத்தான் அனுப்பினோம் மகனை பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள் மகனே இல்லை என்றாகிவிட்டது மருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனான். பெண் பிள்ளைகள் மட்டுமென்ன ஆளுக்கு நாலு காதல் வீசி எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்கள். உண்மைதான், பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள் கட்டிவைப்பதென்பது நயாகராவை முந்தானையில் ஏந்துவதைப் போன்றதுதான். தமிழனின் அடுத்த சந்ததியை அழித்தெடுக்க மிகுந்த கவர்ச்சிகாட்டி நிற்கிறது மேற்குலகக் கலாச்சாரம்.

குளிரும் இங்கே கொடுமைதான். உடம்பைக் கனக்கவைத்து உயிரை உறையவே வைத்துவிடுகிறது.

ஆகவே இந்தப் புலம்பெயர் வாழ்வென்பது தேவைதானா என்ற கேள்வி எழுவது உண்மைதான். குளிர் குதறிக் கிழிக்க, வேலை விழிக்குள் விரலாட்ட, வருமானம் முகத்தில் கரிபூச, பிள்ளைகள் உயிரில் ஆணியடிக்க இந்தப் புலம்பெயர் குடும்ப வாழ்வு தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

ஆனால், ஒரே ஒரு கேள்வி உங்களிடம் உண்மையா இல்லையா சொல்லுங்கள். தமிழ் ஈழம் இலங்கையில் மலரப்போவது நாளை இன்றே மலர்ந்திருப்பது கனடாவில் உண்மையா இல்லையா சொல்லுங்கள்.

Rohingyas: Nowhere to go, no place to call home—by Zafar Khan

Posted on : 09-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), country

0

Indonesia has refused to grant political asylum to 193 migrants from Myanmar and Bangladesh who are being held at a navy base after they were found stranded off the country’s western coast. Most of the group identified themselves as the Rohingya – a Muslim ethnic group from Myanmar.

The migrants were found floating in an 11-metre wooden boat without food or water, officials said. Hassan Wirajuda, the foreign minister, said on Friday that the people are economic migrants and not political asylum seekers. But according to Human Rights Watch, more than 250,000 Rohingyas fled Myanmar to Bangladesh in 1992 amid a campaign of persecution and what many have labelled “ethnic cleansing” on the part of the government in Naypyidaw.

கலக்… கலக்… கானிஸ்பே —-அன்புடன் புகாரி

Posted on : 09-12-2009 | By : mohamedali | In : country, கவிதைகள் (POEM)

0

கனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கொயின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மாபெரும் தோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.

அதாவது அல்கான்கொயின் தோட்டத்தில் 5 லண்டன் மாகநகரங்களை அப்படியே வசதியாகப் படுக்க வைக்கலாம், அத்தனை பெரிய தோட்டம். நம்மூரில் இதைக் காடு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கனடாவிலோ இதைப் பெருந்தோட்டம் என்கிறார்கள். ஏனென்றால் இது முழுவதும் இவர்களின் 24 மணி நேர பராமறிப்பில் உள்ளது.

மிகப்பெரிய தோட்டம் இதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் வாழ்நாளில் பார்த்த மிகப்பெரிய தோட்டம் இதுதான். இங்கே ஈராயிரத்திற்கும் மேற்பட்ட கரடிகள் இயற்கையாய் வாழ்கின்றன. எண்ணற்ற ரக்கூன்களும் மூஸ்களும் ஓநாய்களும் பல்லாயிரம் பறவைகளும் இதில் வாழ்கின்றன. இத்தோட்டத்தில் பல ஏரிகள் உள்ளன.

இவ்வேளையில் கனடா ஏரிகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பொன்றைச் சொல்லியாக வேண்டும். கனடாவில் சுமார் ஒரு மில்லியன் நன்னீர் ஏரிகள் உள்ளன. அதில் அரை மில்லியன் ஏரிகள் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டும் உள்ளன. டொராண்டோ ஒண்டாரியோ மாகாணத்தில்தான் உள்ளது.

இந்த அல்கான்கொய்ன் தோட்டத்தில் சில இரவுகள் குடிசைபோட்டுத் தங்கி களிப்பதற்கு இணையான சுகம் வேறு ஒன்றுமில்லை என்று சொல்வேன். 2007 ஜூலை முதலாம் தேதி அங்கே சென்று வந்ததைப் பற்றிய அனுபவக் கவிதைதான் இது.

மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட
பொன்னழகு டெண்டுக்குள்ளே

ஆப்பிள் விதைச் சொகுசாக
அடுக்கு மல்லிச் சிரிப்பாக
தோப்புக் குயில் பாட்டாக
தொடர்ந்ததொரு கொண்டாட்டம்

Masajid and Madaris in Canada.

Posted on : 08-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), country, இஸ்லாம் (ISLAM)

0

the mashayikh (spiritual masters) and mureedeen (spiritual seekers) were the pioneers in establishing the Jami Mosque in Toronto. Since then, more than a dozen masajid and madaris have been established in Metro-Toronto but for the sake of brevity, I will only touch on those in the rich and vibrant Muslim Turkish and Eastern European tradition. In this historic tradition, there are two Turkish mosques as well as the Albanian Mosque, the Croatian Mosque, the Bosnian Mosque and Masjid al-Husain. Some mosques are identified for ease of reference as Turkish mosques because Muslims of Turkish descent have taken the initiative in establishing them but the gathering is truly international as in most masajid in Toronto.

Toronto is indeed a multicultural city where the majority are migrants from all over the world who have made Toronto their home and most of whose children have been born in Canada. You feel part of an international Muslim fraternity, those born in Canada, together with Muslim migrants from Turkey, the Arab countries, Pakistan, Albania, India, Bosnia, Somalia, Bangladesh, Kenya, Guyana, Mauritius, ….. all worshipping Allah as one ummah (community) in Toronto. The Imams at these masajid wear the traditional jubba (cloak) as well as the amamah (turban). The walls are decked with beautiful frames containing the names that are engraved on the hearts of all Muslims: Allah (The Glorified and The Exalted), Sayyidina Muhammad Mustafa (Allah’s blessings and peace be on him), Sayyidina Abubakr Siddiq, Sayyidina Umar Farooq, Sayyidina Uthman Dhun Nurain, Sayyidina Ali al-Murtadha, Sayyidatina Fatima, Sayyidina Imam Hasan and Sayyidina Imam Husain, Radhy Allahu ‘Anhum. The mimbar (pulpit) is richly engraved with Muslim calligraphy while over the mihrab (prayer niche for the Imam) is the inscription from the Qur’an:

Fa walli waj-haka shatral Masjidi’l Haram
So turn your face towards the sacred mosque [Qur'an 2:144].

Spain

Posted on : 05-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), country, கட்டுரைகள் (ARTICLES)

0

Written by Staff Writer

Spain’s interaction with the Muslim world extends back to the 9th century and Islamic expansion into Europe. Most Muslims were expelled in 1492, although there is strong evidence that some did remain behind and publicly proclaimed Catholicism but privately practiced Islam. This tendency faded over time, and the Muslim presence in Spain disappeared until the 1960s.

Initially, many Moroccans entered the tourist industry on the Mediterranean coast. They were primarily undocumented and transient, often attempting to get into France. The profile of these Moroccans began to shift, and they began to come from the Spanish protectorate area in northern Morocco, and settle in Catalonia.

As countries further north of Spain began controlling immigration more tightly, many immigrants began settling in Spain so that by the late 1970s it is estimated there were 100,000 Moroccans in Barcelona.

Since the 1980s most of the growth of the Muslim population has been due to family reunification. Current estimates put the Muslim population of Spain at 500,000, predominantly Moroccan.

Other points of origin include Syria, Lebanon, Jordan and Iraq whose citizens came as students and entrepreneurs. By 1977 these numbers expanded to include Palestinian refugees, and in 1979 Iranian refugees. While socially important, demographically their impact is minimal.

An important group of Muslims in the country is composed not of migrants, but of converts. In the 1970s there seems to have been a marked increase in the number of Spaniards accepting Islam. Various theories have been put forward as to why this might be the case, including the need to recover an authentic Spanish identity by look back at the period of Muslim rule. The result has been that in the mid-1990s converts had founded over half the Muslim groups. Current estimates place their numbers at 6,000 individuals.

Source : http://www.euro-islam.info/country-profiles/spain/

Brunei Darussalam, The Abode Of Peace | Brunei NEWS, Brunei HEADLINES from Brunei fm

Posted on : 05-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), country

0

Brunei Darussalam, The Abode Of Peace | Brunei NEWS, Brunei HEADLINES from Brunei fm.