Featured Posts

  • Prev
  • Next

தீன் கலை அறிவியல் கல்லூரி,நீடூர்- கடுவங்குடி -நாள் 18.07.2010. திறப்புவிழா

Posted on : 21-07-2010 | By : mohamedali | In : Nidur (நீடூர்)

0

தீன் கலை அறிவியல் கல்லூரி,

நீடூர்- கடுவங்குடி

-நாள் 18.07.2010. திறப்புவிழா

.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை”.

நூல்: திர்மிதீ 4977, பைஹகீ

———————————-

குறள் 399:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கலைஞர் உரை:

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்

நீடூர் சீசன்ஸ் .காம்

அன்புடன் வாழ்த்துகின்றேன்

சி .ஈ .அ .முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா – பட்டமளிப்பு விழா

Posted on : 21-07-2010 | By : mohamedali | In : Nidur (நீடூர்)

0

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.07.2010 ஞாயிற்றுகிழமை நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. காலை 9.30 முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும் (இறைவன் நாடினால்). தாங்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீடூர் – நெய்வாசல் நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளி 12 ஆம் வகுப்பு தேர்வில் 100 % தேர்ச்சி

Posted on : 27-05-2010 | By : mohamedali | In : Nidur (நீடூர்)

0

நீடூர் – நெய்வாசல் நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளியில் இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். இவ்வாண்டு சுமார் பத்து மாணவமணிகள் தேர்வு எழுதினர். முஹம்மது ரித்வான் என்ற மாணவர் 1053 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவதாக வந்துள்ளார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை மாணவிகள் கைப்பற்றினர். முறையே 995 மற்றும் 936 அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகும். தேர்ச்சிப் பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்கள். கல்வியில் அவர்கள் மேலும் சாதிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நீடூர் – நெய்வாசல் நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளி 97% தேர்ச்சி:

Posted on : 26-05-2010 | By : mohamedali | In : Nidur (நீடூர்)

0

நீடூர் – நெய்வாசல் நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளி 97% தேர்ச்சி:

நீடூர் – நெய்வாசல்நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இவ்வருட பத்தாம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது. முதலிடமாக 420 மதிப்பெண்களும், இரண்டாமிடமாக 419 பெற்றுள்ளனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted on : 01-01-2010 | By : mohamedali | In : Nidur (நீடூர்)

2

நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத் வழக்கறிஞர்.–ஒரு கடிதம்

Posted on : 29-12-2009 | By : mohamedali | In : Nidur (நீடூர்), கவிதைகள் (POEM)

0

நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு 10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார்.  அதில்…

“முதுமை வந்து கூன் விழுமோ

மூன்றுகால் நடை வாய்த்திடுமோ

புதுமை உலகம் கேலி செய்யுமொ

என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு

சென்று விடத்தான் நினைப்பு”

என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!

மாப்பிள்ளை வாழ்த்து

Posted on : 25-12-2009 | By : mohamedali | In : Nidur (நீடூர்), கவிதைகள் (POEM)

0

TO: Faizur Hadi

பூக்களின்
முகங்களில் பொன்னழகு
பொன்னழகோ
இந்தப் பெண்ணழகோ

கண்ணழகும்
இவள் கனிவழகும்
விண்ணளக்கும்
வனத் தேன்விளைக்கும்

மாமகனே
மணிக் கணித்தளமே
தேவனவன்
உன் கவர் முகத்தில்

ஆனவரை
சுடர் ஏற்றிவைத்தான்
தூயநதிக்
குணம் பூட்டிவைத்தான்

கைகோர்ப்பீர்
உணர் மெய்கோர்ப்பீர்
மனங்கோர்ப்பீர்
என்றும் சுகம்சேர்ப்பீர்

வாழ்வாங்கு
இந்த வான்நிறைத்து
வாழ்கவென்றே
நின்று வாழ்த்துகின்றேன்

Label: anbudenbuhariimgbuhariS.E.A.Mohamed+Alihttp://anbudanbuhari.blogspot.com

நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீது

Posted on : 12-12-2009 | By : mohamedali | In : Nidur (நீடூர்), கட்டுரைகள் (ARTICLES)

4

S.E.A.Mohamed Sayeedanbudanஅ.மா. சாமி-
முனைவர்  அ. ஆயயூப்.

வாழ்க்கை என்னும் செழயிலிருந்து மலர்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.  ஓவ்வொரு மணித்;துளியும் வாழ்நாள் குறைந்த கொண்டே போகிறது.  இத்தகைய வாழ்க்கையில் என் வணக்கங்கள், சமூக நலப்பணிகள், ஒழுக்க நெறிகள், இன்னோன்ன பல செயல்பாடுகள், இறைவனிடத்தில் அங்கீகாரம் பெற்றிருக்கின்றனவா என்பதை இந்தப்பாவியால் அறியமுழயவில்லை.  ஏனென்றால் ஒரு மனிதன் தன்னை அறிந்து கொள்வதே கடினமான செயலாக இருக்கிறது.
ஒரு அறிஞன் சொல்வது போல, வாழ்க்கை  என்பது இன்பமும் அல்லஈ துன்பமும் அல்ல  என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அது ஒரு பொறுப்புமிக்க பணி, சுயநலமில்லா உற்சாகத்துடனும், அச்சமின்றியும் அதை இயக்க வேண்டும்.
எதையோ எழுத எண்ணி, எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறேன்.  முதுமை, முதுமை தட்டுவதன் அறிகுறியாக இருக்குமா என்று தெரியவில்லை.
வாழும் போதே வரலாறு ஆனவர்
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
“இரு விசயங்களை உங்களுக்கு நான் விட்டுச் செல்லுகிறேன். ஓன்று, திருமறை, மற்றொன்று, என் வாழ்க்கை முறை.  இந்த இரண்டையும் பின்பற்றும் வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள்”  என்பது, நாயகம் (சல்) அவர்களின் நல்வாக்கு.
மனிதன் திருமறை காட்டிய வழியில் நடக்க வேண்டும்.  அதற்கு முன் மாதிரியாக இரசூல் (சல்) அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே வாழும் வழி.  இவ்வழியில் செல்லுகிறவர்கள் வழி தவற மாட்டார்கள்.  இவர்களின் வாழ்க்கைப் பயணளம் வழுக்கல் இல்லாமல் வளமாக இருக்கும்.
“சிந்தனைச் சித்தர்” என்று சிறப்பாகப் போற்றப்பட்ட நீடூர் சயீது தொகுத்த சிந்தனைத் துளிகள்” என்ற நூலில், இரசூல் (சல்) அவர்கள் கூறிய இந்தத் தேன் துளியும் இடம் பெற்றிருக்கிறது.
சொல்லுவது எவருக்கும் எளிது ; ஆனால், சொல்லுவது போல நடப்பது அரிது என்று கூறுவார்கள்.  ஆனால், நபிகள் திலகம் (சல்) அவர்களின் நன்மொழியைப் பொன்மொழியாக சயீது எடுத்துக் காட்டியது மட்டுமல்ல ; அதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து காட்டினார்.
திருக்குரான் தான் அவரது வாழ்க்கை வழி. திருநபி (சல்) அவர்கள் தான் அவருக்கு வழிகாட்டும் ஒளி. பெருமானார் (சல்) அவர்களைப் பற்றி அவர்களின் வாழ்க்தை; துணைவி ஆயிஷா (ரலி) கூறும் போது, “அவர்கள் திருக்குரானாகவே வாழ்ந்தார்கள்” என்று சொன்னார்கள்.  சயீதின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான்.

உதவி
“தேவையானவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று திருக்குரான் பல இடங்களில் அழுத்தமாகச் சொல்லுகிறது.
நூயகம் அவர்களும் யாருக்கும் உதவி செய்யத் தயங்குவதும் இல்லை ; தவறுவதும் இல்லை.  வீட்டுக்கு சாமான்கள் வாங்கக் கடைக்குப் போகும் போது கூட, “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களைக் கேட்டு, அவர்களுக்கு வேண்டியதையும் வாங்கி வந்து கொடுப்பார்கள்.
சயீதின் வாழ்க்கையில் பெரும் பகுதி உதவி செய்வதில் தான் கழிந்தது.  அவருக்கு தொழில் எதுவுமில்லை. என்றாலும், பகல் முழுவதும் மயிலாடுதுறையில் தனது அலுவலகத்தில் தங்கியிருப்பார்.  காலையில் வீட்டிலிருந்து வந்தால், மாலை வரை அலுவலகத்தில் இருப்பார்.  எதற்காக? அவரைத் தேடி, அவரது உதவியை நாடிப் பல பேர் வருவார்கள்.  அவர்களுக்கு உதவி செய்ய!
குடும்ப தகராறு, பாகப்பிரிவினை என்று எத்தனையோ பிரச்சினைகளுடன் வருவார்கள்.  அவர்களுக்கு நல்ல யோசனைகள் கூறுவார்.  அதற்கு சல்லிக்காசு கூடக் கூலி வாங்கமாட்டார்.
படிக்க உதவி கேட்டு வருவார்கள்.  உடல் நலம் இல்லை என்று வருவார்கள்.  தொழில் தொடங்க உதவி கேட்பார்கள்.  சயீதிடம் செல்வம் கிடையாது ; செல்வாக்கு உண்டு. ;இன்னாரைப் போய்ப் பாருங்கள்’ என்று நல்வழி காட்டுவார்.  தேவையானால், கடிதமும் எழுதித் தருவார்.  தொலைபேசியிலும் பேசுவார்.

அ.மா.சாமி அனுபவம்
அ.மா. சாமியே சயீதிடம் பலமுறை உதவி பெற்றிருக்கிறார்.
“தமிழ் இஸ்லாமிய இதழ்கள்” என்ற நூல் எழுதிய போது “அண்ணே உங்களிடம் உள்ள இதழ்களைப் பார்க்க வேண்டுமே” என்று அ.மா.சாமி நெருங்கினார்.  பல ஆண்டுகளாகத் தான் சேர்த்து வைத்திருந்த, காணக் கிடைக்காதப் பழைய இதழ்களை அள்ளிக் கொண்டு வந்து போட்டார்.
“உங்களுக்கு வேண்டியதை எடுத்துப் போங்கள்” என்றார்.  ஆம், 40-50 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த கருவ+லங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  யார் தருவார் இந்த சிம்மாசனம்!
இஸ்லாமிய இதழ்களைத் தேடி காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் என்று அ.மா.சாமி சென்றார்.  அப்போது சயீதும் உடன் வந்து, உதவினார்.  அது ஒரு முழுநாள் கார்ப் பயணம்.  சயீது உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.
இஸ்லாமியப் பெரியார் தாவ+த்ஷாவின் எழுத்துக்களைத் தேடிய போதும், அ.மா.சாமி சயீதை சந்தித்தார்.  அவரிடம் “நாயகத்தின் நற்குணங்கள்” என்ற அரிய நூல் இருந்தது.  1946இல் வெளிவந்தது.  அறுபது ஆண்டு காலமாக அவர் பாதுகாத்து வைத்திருந்த நூல், அது.  “நீங்கள் கொண்டு போங்கள், சகோதரரே!” என்று கொடுத்து விட்டார்.  தமிழ்நாட்டில் வேறு யாரிடமும் இல்லாதநூல், அது!
அவ்வளவு ஏன்? அவரது வரலாற்றை எழுத அவரைச் சந்தித்துப் பேச அ.மா.சாமி போனார்.  மதிய சாப்பாட்டு நேரமாகி விட்டது.  அது நோன்பு நேரம்.  “மற்ற நேரமென்றால், வீட்டிலிருந்து உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்திருப்பேன்” என்று சயீத் சொன்னார்.  “பரவாயில்லை, அண்ணே.  பக்கத்தில் நிறைய ஓட்டல்கள் உள்ளன” என்று அ.மா.சாமி கூறினார். “அர்ச்சனாவில் சாப்பிடுங்கள்.  தயிர்ச் சோறு நல்லது.  குடலுக்கோ உடலுக்கோ இடைய+று செய்யாது” என்று சயீது சொல்லி அனுப்பினார்.

சின்ன விசயந்தான்.  ஆனால், காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது அல்லவா?

உண்மை
ஒழுக்கத்தின் ஆணிவேராக உண்மை இருக்கிறது என்று ஓர் அறிஞன் சொன்னான்.
பேச்சிலும், செயலிலும் உண்மை வேண்டும் என்று திருக்குரான் வற்புறுத்துகிறது ; நாயகம் (சல்) அவர்களும் அப்படியே வாழ்ந்தார்கள்.
சயீதும் உண்மையின் உறைவிடமாக வாழ்ந்தார்.  “யாருக்காகவும் அஞ்சி உண்மையை மறைத்து விடாதீர்கள்” என்று நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள்.  இஸ்லாமை தனது சமயமாக மட்டுமல்ல, தனது வாழ்க்கைப் பாதையகாவும் கொண்ட சயீதும் அப்படியே வாழ்ந்தார்.  அவர் விளையாட்டுக்குக் கூடப் பொய் சொல்லுவதில்லை.  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்தார்.  இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை உரைக்கலாம்.” நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மை தவிர வேறு அல்ல” என்று நீதிமன்றங்களில் சத்தியம் செய்வதுடன் சரி ; ஆனால், நீதிமன்றங்களில் நடப்பது என்ன? கொலைகாரர்கள் கூட விடுதலையாவது எப்படி?
இஸ்லாமிய வழியில் – இணையில்லா நாயகம் (சல்) அவர்களின் ஒளியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சயீதுக்கு இது பிடிக்கவில்லை.  உண்மை தெரிந்தும் பொய் சொல்ல அவர் அஞ்சினார்.  அவரது நெஞ்சம் கூசியது.  ஆதனால் தான் கறுப்புக் கோட்டைக் கழற்றிப் பரணில் வைத்துவிட்டு, வழக்கறிஞர் தொழிலை மூட்டைக் கட்டிவிட்டு, நீதிமன்றங்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்!
உழைப்பாளி
சயீது கடுமையான உழைப்பாளி.  ஆதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து விடுவார்.  யார், எங்கே அழைத்தாலும் உதவி செய்யக் கிளம்பி விடுவார்.  முதுமையைக் கூடப் பொருட்படுத்த மாட்டார்.
உதவி, உண்மை, உழைப்பு என்று உயர்ந்த இஸ்லாமிய வாழ்க்கையை அவர் அமைத்துக் கொண்டார்.  ஐவேளைத் தொழுகை தவறுவதில்லை ; நோன்புகளை விடாமல் கடைப்பிடித்தார்.  பயணங்களில் அவருக்கு விருப்பம் அதிகம்.  இதுவும் நாயகம் (சல்) அவர்கள் காட்டிய வழிதான்.
ஆடம்பரம் கிடையாது ; ஆர்ப்பாட்டம் இல்லை! ஆரவாரம் பிடிக்காது.  அடக்கமானவர்.  உடையிலும் நடையிலும் எளிமையான கூட்டங்கள், விழாக்களுக்கு அழைத்தல், தவறாமல் போவார். வழி செலவுக்கோ, பேசுவதற்கோ பணம் வாங்கமாட்டார்.

உயர்ந்த மணிதர்
எளிமையும். ஆடக்கமும், தன்னலமற்ற சமுதாய சமயத் தொண்டு சயீதை உயர்ந்த மனிதன் ஆக்கின.  ஆவர் பிறவியிலேயெ உயர்ந்த மனிதன்தான்-ஆறடி ஒரு அங்குலம்.  வாழ்க்கையிலும் அவர் உயர்ந்த மனிதர் ஆகிவிட்டார்.
“தோன்றில் புகழொடு தோன்றுக” என்று திருவள்ளுவர் கூறினார்.  அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், சயீது.  வாழும்போவே வரலாறு ஆனவர், அவர்.  அவரது வரலாறு மற்றவர்களுக்கு வழிகாட்டியும் கூட அவரது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுவோமா?

முத்துச்சிப்பி
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “பிறக்கும் போதே வாயில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவர்” என்பது, அது.  இதையே, கர்ணன் காதில் குண்டலத்துடன் பிறந்தான் என்பார்கள்.
அதையே “கருவிலே திருவுடையார்” என்று தமிழில் சொல்லுவார்கள்.
சயீதும் கருவிலே திருவுடையார்.
சேல்வமும் செல்வாக்கும் செழித்த குடும்பத்தில் பிறந்தவர், அவர். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்” என்றபடி குடும்பத்தின் புகழை, குன்று போல உயர்த்தவும் செய்தார். சயீது.

http://nidurseasons.com

அ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மது இஸ்மாயில் பாகவி பேச்சு

Posted on : 12-12-2009 | By : mohamedali | In : Nidur (நீடூர்), கட்டுரைகள் (ARTICLES)

1

அ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மது இஸ்மாயில் பாகவி பேச்சு.

நமதூர் நவீனமாகட்டும்!

Posted on : 27-10-2009 | By : mohamedali | In : Nidur (நீடூர்), கட்டுரைகள் (ARTICLES)

0

என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.

எட்டு திசைகளிலும் வாழ்கின்ற எங்களூர் மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.

மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.