Featured Posts

  • Prev
  • Next

ஆயங்குடி

Posted on : 24-08-2010 | By : mohamedali | In : ஊர்

0

ஆயங்குடி ஜாமியா பள்ளிவாசல்ஆயங்குடி (Ayangudi), இந்தியாவில் சமூக நீதி காத்த பூமியான தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.

ஆயங்குடி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றதொகுதிக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக திரு.ரவி குமார் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி கட்சியின் தலைவரான திரு. திருமாவளவனும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 898 ஆண்கள், 929 பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும்.

ஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிருந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும . சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.

தோப்புத்துறை தோற்றம் மற்றும் வரலாறு (இணையதளத்தில் தோப்புத்துறை)

Posted on : 02-08-2010 | By : mohamedali | In : ஊர்

0

தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களiல் தோப்புத்துறை சரித்திரம் கொண்ட பசுமை நிறைந்த ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. தோப்பும் துறைமுகம் சார்ந்த ஊர் தோப்புத்துறை எனவே பன்னாட்டு விமானநிலையம் மற்றும் துறைமுகத்திற்கு வழங்கப்படும் குறியீடு சுருக்க எழுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியாத விசயம். தோப்புத்துறை துறைமுக குறியீடு – TPH (INTPH-International Port code)
தோப்புத்துறை தோற்றம் மற்றும் வரலாறு பல நூற்றாண்டு காலத்திற்கு முன் என்று பலரும் நம்புகிறார்கள். தமிழக கடற்கரை ஊர்களாக காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை ஊர்வாசிகள் போன்றே தோப்புத்துறை மக்களும் சத்திய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதுடன், அரபியா மக்களுடன் திருமண பந்த தொடர்பு உறவு முறைகளை கலிபா காலத்திலிருந்து குறிப்பாக கலிபா அபுபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இருந்ததாக நம்பிக்கை செய்தியாகும். நம்பிக்கைகள் சில நேரத்தில் உலக அளவில் சரியாக இருக்கலாம் அல்லது சந்தேகத்துடன் வலம் வருவது இயற்கையான விசயம் தான். இந்த காலத்தில் தான் நம் ஊர்களiல் இறைநேசர்களாக கடல் மார்க்கமாக வந்தவர்கள் இஸ்லாமிய நெறிகளை போதித்து மக்களை ஏகத்துவநெறியின் பக்கம் அழைத்து அதன் படி தங்கள் வாழ்க்கை அமைத்து கொடுத்தார்கள், அத்துடன் மக்களுடன் கலந்து இறைபோதனையும் மார்க்க நெறிகளையும் வாழ்ந்து காட்டி தங்கள் வாழ்க்கை இறுதி நாள் வரைஇங்கே இருந்துள்ளார்கள்.
விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் நம் பகுதி அவர்களiன் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.

முத்துப்பேட்டை ஓர் அறிமுகம்’

Posted on : 31-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

முத்துப்பேட்டையில் சுமார் 22,000 மக்கள் வசித்து வருகின்றனர். பேரும்பாலானோர் முஸ்லிம்களே வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 12 பள்ளிவாசல்கள், 2 மதரஸாக்கள், 11 பாடசாலைகள், 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிறப்பு ஊராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவுகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், வார சந்தை, அரசு பொது நூலகம், இன்டெர்னெட் மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் வழிபாட்டு தளங்களும் உள்ளன.
இங்குள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறையாக கடைபிடித்து வருகின்றனர்.
முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 340 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளது.
முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் படிப்பது, தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.

அதிராம்பட்டினத் துறைமுகம்:முனைவர் ராஜா முஹம்மது

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்கள் அதிரை பற்றி ஆய்வு செய்தளித்த குறிப்புகள்:
(in Chronological Order)

அதிராம்பட்டினத்தில் சீன நாட்டு வணிகர்கள்: முனைவர் ராஜா முஹம்மது.
அவர்கள் தொகுப்பின் முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…

* அதிராம்பட்டினத் துறைமுகத்திலிருந்து மரைக்காயக் கப்பல் வணிகர்கள் முத்துப்பேட்டை, நகப்பட்டினம், கீழக்கரை, தொண்டி, காரைக்கால், காயல்பட்டினம் ஆகிய துறைமுக வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

நீடூர் – நெய்வாசல்

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

நீடூர் – நெய்வாசல்

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

இந்நீடூர் இராஜாதி ராஜவள  நாட்டைச் சேர்ந்ததாகும்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது

நீடூர் தொடர்வண்டி நிலையம்

.

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா  புதிய  ள்ளிவாசல்

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா – பட்டமளிப்பு விழா

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.07.2010 ஞாயிற்றுகிழமை நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. காலை 9.30 முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும் (இறைவன் நாடினால்).


மௌலவி ஆலிம் ஃபாஜில் மிஸ்பாஹி பட்டம் பெரும் மாணவர்கள் – 21
மௌலவி ஆலிம் மிஸ்பாஹி பட்டம் பெரும் மாணவர்கள் – 4

ஹாபிழ் பட்டம் பெரும் மாணவர் – 1

ஜின்னா தெரு ள்ளிவாசல்

நீடூர் பள்ளிவாசல்

ரைஸ் மில் தெரு பள்ளிவாசல்

நீடூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடையில் உள்ள இருப்பை தெரிந்துக்கொள்ள,
PDS 20 DP031
என்று டைப் செய்து 9789006492 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

நீடூர்

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

சித்தார்கோட்டை எனும் சீர்மீகு ஊர் …

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

புகழ்பெற்ற சரித்திர நாயகர்களையும் வள்ளல் பெருமக்ளளையும் சாதனைச் சிற்பிகளையும் ஒருங்கே கொண்டு புகழ் பெற்ற மாவட்டம் நம் இராமநாதபுரம் மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு சிற்று}ர் தான் சித்தார்கோட்டை. இது சிற்றூராகக் காட்சி தந்தாலும் சாதனைகளில் ஒரு பேரூருக்கு நிகரானது. இஸ்லாமிய மார்க்க வல்லுனர்களையும் வள்ளல் பெருமக்களையும், அறிவார்ந்த எழுத்தாளர்களையும் சான்றோர் பலரையும் கொண்டிலங்கும் அழகிய ஊர் சித்தார்கோட்டை.
சித்தார்கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13 கி.மீ. ஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. சித்தார்கோட்டை பஞ்யாத்தில் ஏழு கிராமங்கள் உள்ளன. வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை மற்றும் இலந்தைக் கூட்டம் இதில் அடங்கும்.
சித்தார்கோட்டை மற்றும் வாழூரில் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள். பெரும்பகுதியான மக்கள் வெளிநாடுகளில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்ப10ரில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

Click the image to see the enlarged view

சித்தார் கோட்டை’யது சிற்றூர் தான் ஆனாலும்
சீரிய முஸ்லிம்கள் செறிந்த ஊர்
முத்தார் முகம்மதுவின் மொழிவழியால் தொழுகை
முதலான மூவிரண்டு நெறிமுறையால்
சத்தான் இசுலாத்தின் சரியான வழி வந்தோர்
சக்காத்துக் கொடுப்பதற்கோ சலிக்க மாட்டார்
எத்தாலும் வாழலாம் என்றெண்ண மாட்டார்கள்
ஈகைக்கு எடுத்தக் காட்டவரே

லால்பேட்டை அறிமுகம்

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

முன்னுரை:


ஏக அல்லாஹுவின் திருபெயரைக்கொண்டு ஆரம்பிக்கின்றோம் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞர்களை உருவாக்கி உலகமெங்கும் அனுப்பும் வரலாற்று சிறப்புமிக்க ஓர் ஊரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

லால்பேட்டை ஓர் அறிமுகம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் சிதம்பரத்திலிருந்து 22கி.மீ. நெய்வேலியிலிருந்து 30கி.மீ. காட்டுமன்னார்குடிஇலிருந்து 3கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, லால்பேட்டை. லால்பேட்டையின் இயற்ப்பெயர் லால்கான்பேட்டை ஆகும். இந்தபெயர் காலப்போக்கில் மாறி லால்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. பெயர் எப்படி உருவானது என்பதை, லால்பேட்டை உருவானது எப்படி என்ற தலைப்பில் பின்னர் கீழே காண்போம்.
இன்ஷா அல்லாஹ்.
இவ்வூர் முஸ்லிம்கள் அதிக அளவிலும் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் குறைந்த அளவிலும் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இருக்கும் ஓர் ஊராகும். லால்பேட்டை சிதம்பரம் நாடாளுமன்ற மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்வரும் ஓர் பேரூராட்சியாகும்.
இவ்வூரில் முஸ்லிம்கள்,ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

கிளியனூர் வரலாறு (KILIYANUR)

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : ஊர்

Tags: , , , , , , ,

0

நஞ்சை வளமிக்க தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியினை நிர்வாக வசதிக்காக காயிதேமில்லத் நாகை மாவட்டம் என்று பிரித்தனர்.

அச்சுக்கலையை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்திய டச்சுக்காரர்களின் துறைமுகப் பட்டிணமாகிய தரங்கம்பாடி தாலுக்காவில் காவிரியின் உபநதியாகிய வீரசோழன் ஆற்றின் வடகரையில் உள்ளடங்கி அமைந்த ஊர் தான் கிளியனூர்.

மயிலாடுதுறை தான் அருகிலுள்ள நகர் அரசுடையமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பல்வேறு பள்ளி, கல்லூரி, கல்விச் சாலைகள், நூற்றுக் கணக்கான வர்த்தக நிறுவனங்கள் சூழ்துள்ள அழகிய நகர் தான் மயிலாடுதுறை.

1967 முதல் பொறையாறு வீரப்பாபிள்ளையின் சத்திவிலாஸ் தொடங்கி இன்று அரசுடமையாக்கப்பட்ட போக்குவரத்து பேருந்துகள் வரை மட்டுமின்றி பல்வேறு சிற்றுந்துகள் (மினி பஸ்) வரை கிளியனூருக்கும் மயிலாடுதுறைக்கும் பாலமாக விளங்கி வருகின்றன.

30.10.1953 முதல் கிளியனூர் மின்சார வசதி பெற்ற ஊராக விளங்கி வருகிறது.

1955 ஆண்டு முதல் முற்றிலும் ஊர்ஜமாஅத்தார்களால் கட்டி முடிக்கப்பட்ட லோக்கல் பண்டு மருத்துவமனை இன்று அரசு மருத்துவமனையாக இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகிறது.

கிளியனூர் ஜமாஅத்துக்குச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் தான் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளியனூர் புதுத் தெருவிலும் பிறகு ஐ.எப்.எஸ். மெயின் ரோட்டிலும் இயங்கி வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் 1960க்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு அருகில் கட்டப்பட்டு முதல்வர் கர்மவீரர் காமராஜ் திறந்தார்.

அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் திறந்து வைத்த இடைநிலைப் பள்ளிக்கூடமும் கிளியனூர் ஆற்றங்கரை பாலமும் 1959ல் திறந்து வைக்கப்பட்டது. பிறகு வேளாண்துறை அமைச்சர் மண்ணை நாராயணசாமி அவர்களால் 1972-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியாக ஏற்றம் பெற்று வலிவும் பொலிவும் பெற்று அறிவொளி பரப்பி வருகிறது.