Featured Posts

  • Prev
  • Next

தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்

Posted on : 31-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0


பதிவர் பராரி அவர்கள் பின்னூட்டத்தில் தங்கத்தைப்பற்றி எழுதுங்களேன் என்று கூறியிருந்தார். நான் தங்கக் கடையில் பணிப்புரிவதை அறிந்தவர் என்றே நினைக்கிறேன். இதற்கு முன் பதிவிட்டுக் கொண்டிருந்த கவிவனம் என்ற எனது வலைப்பூ வைரஸ் தாக்குதலினால் முடங்கிப்போனது. அதில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் சில யோசனைகளை எழுதியிருந்தேன். அதை மீள்பதிவாக இங்கு எழுதவில்லை யென்றாலும் தங்கத்தைப்பற்றிய நிகழ்காலத்தின் நிலைகளை எனக்கு தெரிந்த விசயங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எழுதத்தூண்டிய நண்பர் பராரி அவர்களுக்கு நன்றி.
(0)
தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது.வீடு இல்லாமல் இருப்பவர்களைவிட தங்கம் இல்லாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு என்றேதான் சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்களை அதிகமதிகம் கவரக்கூடியது தங்கம்.

இஸ்லாமும் பாடல்களும்

Posted on : 31-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

ஷிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் பாடல்களோ அல்லது நாம் கேட்கும் பாடல்களோ அல்லாஹ்விற்குரிய தன்மைகளை பிறருக்கு கொடுக்கக்கூடிய கருத்துக்களை பொருந்தியதாகவோ அல்லது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கொடுக்கத் தூண்டும்படியான பாடல்களாகவோ இருக்கக்கூடாது. தவறான கருத்துள்ள பாடலென்பது, தவறான கலாச்சாரத்தையும் தவறான பழக்க வழக்கங்களையும் கூறக்கூடிய, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரட்டை கருத்துள்ள பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய   வார்த்தைகளை கூறக்கூடிய பாடல்கள்,  இவை அனைத்தையும் இஸ்லாம் தடுக்கின்றது. இத்துடன் பாட்டில் இசை கலந்திருக்கவும் கூடாது. இவைகள் அல்லாத பாடல்களை கேட்பதில் தவறில்லை.

இன்று நமது நாடுகளில் இஸ்லாமிய பாடல்கள் என்கிற பேரில் ஷிர்க் மற்றும் இசை கலந்த பாடல்கள் நமது வீடுகளில் வலம் வந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாகும். குறிப்பாக, அதிகாலையில் விழித்தெழுந்ததும் முதலில் கேட்பது நாகூர் E.M ஹனீபா மற்றும் அவர் போன்றவர்களின்  பாடல்களைத்தான். இவைகளுக்குப் பெயர், இஸ்லாமியக் கீதம்(?!).

இவைகள் இஸ்லாமியக் கீதமா? இஸ்லாத்திற்கு முறணான கீதமா? இஸ்லாத்திற்கு முறணான பல கருத்துக்களைக் கூறக்கூடிய, இந்த பாடல்களுக்கு  இஸ்லாமியக் கீதம் என்கிற முத்திரையையும் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். இது போன்று மவ்லிது என்கிற பேரில் தெளிவான ஷிர்க்கியத்தான பாடல்களையும் நமது வீடுகளில் படிக்க வைப்பதற்கு, கூலிக்கு கூட்டி வந்து, நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பெரும் ஷிர்க்கையும் நமது வீடுகளில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றோம்,  இதைப் பற்றிய தெளிவை மக்களுக்கு கூற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கோபப்படு – காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Posted on : 31-10-2009 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

என் மீது
அடிக்கடி கோபப்படு
அதில் உன் பிரியம் தெரிகிறது
அழுத்தமான நேசிப்பு தெரிகிறது
உனக்கென்று என்னிடமிருந்து
நீயே எடுத்துக்கொள்ளும்
உரிமை தெரிகிறது
நமக்கான உறவு அதில்
வேர் பரப்பிக் கொண்டிருக்கிறது
நன்றி:அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
அன்புடன் புகாரி

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

Posted on : 31-10-2009 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

1 கடவுள் வாழ்த்து – குறள் 5

இருள்சேர் – அறத்துப்பால் – 1 பாயிரவியல்=- குறள் 5

அருளும் இறைவனின்
அனைத்துப் பெருமைகளையும்
அறிந்தே வாழ்வோரிடம்
அளவிலாத் துயர் தரும்
அறியாமைச் செயல்கள்
எட்டியே நிற்கும்
எப்போதும்

அன்புடன் புகாரி

பழகு மொழி – 01

Posted on : 31-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

பழகு மொழி – 01

(1) எழுத்தியல்நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர்.

தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன. அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, “இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர்.

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

NIDUR SEASONS: அயல்தேசத்து ஏழை

Posted on : 30-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

NIDUR SEASONS: அயல்தேசத்து ஏழை.

உலகப் பெண்கள் பிரச்சினை

Posted on : 30-10-2009 | By : mohamedali | In : GENERAL KNOWLEDGE

0

தஞ்சை ஜில்லா கல்விச்சங்க துணைத் தலைவரும், நாடறிந்த நாவலரும்,
வழக்குரைஞருமான
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத் நீடூர்

“… … அண்மையில் கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது.  பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.  1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை. காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம்.  நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம்.  அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர்கட்டியே திருமணம் நடைபெறுகிறது.  அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் – பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை.  மஹர் தான் நம் சட்டம்.  ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்!  பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத்தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது.  ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது.  ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.

1974-ம் ஆண்டிலே தஞ்சை மாவட்டத்திலே மாய+ரத்தில் மகாநாடு கூட்டி, தீர்மானம்போட்டு, சட்டம் செய்து, கையெழுத்து வாங்கியிருந்தோம்.  புலனளிக்கவில்லை.  74-க்கு பிறகு 80 நடந்து கொண்டிருக்கிறது.  74-ல் போட்ட சட்டத்தை மீறாதவன் நான் ஒருவன்தான்! மற்றவர்களையெல்லாம் மீறிவிட்டார்கள்.  எதையுமே நாம் அநுஷ்டானப+ர்வமாக (Pசயஉவiஉயட) அணுக வேண்டும்.  இந்த வரதட்சனைக் கொடுமைக்கு 60 விழுக்காடு பெண்கள் தான் காரணமாயிருக்கிறார்கள்.  மகளுக்குக் கொடுத்த சீரை மகன் மூலம் வாங்கித் தீர நமது தாய்மார்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.  பெண்களுக்கு இதில் பொறுப்பு உண்டு.  கைக்கூலிக்கு அடிப்படைக் காரணம் நம்மிடையே மார்க்கக்கல்வி சூனியம்.  நும் மத்தியில் போதிய மார்க்கக் கல்விக்கூடங்கள் இல்லை.  அப்படியே அங்குமிங்குமாக தீனியாத் பள்ளிகளை ஆரம்பித்து வைத்தால், நமக்கு தீனியாத் கல்வி பயிலும் ஆர்வமும் ஏற்படுவதில்லை – நமது குழந்தைகளையும் மதரஸாக்களுக்கு அனுப்பி வைப்பதுமில்லை.  மஹரைப்பற்றி அறிந்து கொள்வதற்கு நம் பெண்களுக்கு எந்த அளவுக்கு மார்க்கக்கல்வி தெரிந்திருக்கிறது? நாம் என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டாமா? எல்லாவற்றுமே விலை ஏறியிருக்கும் இந்த 1980-ல் ஒரு பெண்ணுடைய விலையை – மதுரை – 100, 200 ரூபாயாக வைத்துள்ளோம்.  இதுகேலிக்குரியது.  தலாகின் கொடுமை பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தால் இவ்வளவு மலிவாக பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அநுமதிப்போமா? கூக்குரல் இட்டால் மட்டும் போதாது.  சுரியான அணுகு முறை (Pழளவைiஎந யிpசழயஉh) நம்மிடையே வேண்டும்.  எண்ணம் சிறப்பாகயிருந்து, கூட்டுச்செயல் உருவாகுமானால் உங்களைக் கண்டு சமுதாயம் பயப்படும்.  அந்த அடிப்படையில் இன்றே சபதம் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.  பெண்கள் முகாமிலே தொண்டர் படையை ஏற்படுத்துங்கள்.  இறைவன் நம் பக்கம் இருந்து நமது தூய கடமைப் பணிகளுக்கு உரிய பலனை ஈட்டித்தருவது திண்ணம்” என்பதாக சுமார் 1 மணி நேரம் வரை சயீத் சாஹிபவர்கள் தமது வழக்குறைஞர் பாணியிலே, ஆதாரங்களை முன் வைத்து உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்தினார்.

அன்புகெழுமிய தோழி தில்ஷாத்திற்கு

Posted on : 30-10-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

- -நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். ஸயீத் பி.ஏ., பி.எல்.,

அன்புகெழுமிய தோழி தில்ஷாத்திற்கு ரமீஜா வரைவது.  ஆண்டவன் உனக்கு சாந்தியும், சமாதானமும் தந்தருள்வானாக!

திருமணத்திற்கு முன் நாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது, நாம் இருவரும் திருமணமாகி கணவர் இல்லம் சென்று விட்டோம்.  புல மைல்களுக்கப்பால் பிரிந்து வாழும் நாம் பல வருஷங்களாக சந்திக்க முடியாமல் போயிற்று.  நாம் நேரில் தான் சந்தித்து அளவளாக இயலாவிட்டாலும் கடிதத்தொடர்பு மூலமாவது நம் நட்பை வளர்த்துக் கொண்டிருக்கலாமல்லவா! தன் மனத்தின் மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ உற்ற தோழியிடம் சொன்னால் தான் மனம் அமைதியடையும்.  நான் உன் முகவரியை அடையமுடியவில்லை.  அடிக்கடி அலுவலக மாற்றலின் காரணமாக நம்மைப் போன்ற குடும்பத்தினர் வாழ்வு, புகைவண்டி பிரயாணம் போல் இருக்கிறது.  இருவருக்கும் கடிதத் தொடர்பு தொடர்ந்து நடக்கும் வண்ணஞ் செய்யத்தான் நான் இதை எழுதுகிறேன்.

அன்புள்ள தம்பிக்கு,

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

அன்புள்ள தம்பிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.  இறைவன் அருளால் நலம்; ; நலமறிய ஆவல்.

சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அன்பு வேண்டுகோளின்படி நீயும் உனது நண்பர்களும் உற்சாகமுடன் மீலாத்விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடியது அறிந்து மகிழ்ந்தேன் ஒரு சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக அப்புனித விழாவில் நான் பங்கு பெறும் பேறு கிடைக்காமல் போய்விட்டது.  இது போன்ற இஸ்லாமியத் திருநாட்களில் நீங்கள் விழா நடத்தும் போது உங்களில் பலர் மேடையேறிப் பேசுவது மிக சிறப்பாக இருக்கும்.

இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.

பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

‘மனிதருள் மாணிக்கம்’

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.

இறைவன் படைப்பினில் மனிதன் சிறப்புள்ளவன்.  அத்தகைய மனிதரில் ஒரு சிலரே மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.  இறைவனடி எய்திய நாஜிர் N.P.ஆ. அவர்கள் அப்படியொரு மாணிக்கமாகத் திகழ்ந்தவர்கள்.  இஸ்லாமிய உலகம் மறக்க முடியாத மாபெரும் மேதைகளில் ஒருவராக அவர்களைப் போற்றினாலும் மிகையாகாது.  அந்த அளவுக்கு தன்னலத்தைத் துறந்து மார்க்கக் கல்விக்காக அல்லும் பகலும் பாடுபட்டிருக்கிறார்கள்.

ஆடம்பரத்தின் முடிவு அழிவு!

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

“எந்த ஊரையாவது நாம் அழிக்க நினைத்தால் சுகபோக வாழ்க்கை வாழும் அதன் மக்களுக்கு கட்டளைகள் அனுப்புகிறோம் அவர்கள் அதில் மாறுசெய்கிறார்கள் அவர்களுக்கெதிரான வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டுவிடுகிறது.  அதற்கு மேல அதை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.                    - அல்குர்ஆன் 17 : 16

இறைவனின் இந்தததிருவசனத்தை படிக்கும் போதெல்லாம் எத்தகைய பேருண்மை அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

உலகெங்கும் பரந்துகிடக்கிற சமுதாயத்தினரின் வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது இறையச்சத்தை மறந்து இம்மையின் தற்கால சுகபோகங்களில் சிக்கி வாழ்க்கைப் பாதையில் நடந்தவர்களெல்லாம் பரிதாபத்துக்குரியவர்களாக வாழ்ந்து மடிந்ததை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது.

கவிஞன் என்பவன்…

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

தனக்குள்
எரியும் நெருப்பைத்
திரியில் ஏற்றும் எரிமலை

புழுக்கள்
நிறைந்த பூமியைச்
சலிக்கத் தெரிந்த சல்லடை

அனுபவ
ரத்தம் திரித்து
பாலாய்ச் சுரக்கும் மார்பு

மொழியின்
வேர்கள் உலுக்கி
பூக்கள் கொட்டும் காம்பு

உணர்வின்
விரல்கள் விரித்து
உழலும் உயிர்க்கு மருந்து

நிலவும்
வாழ்க்கை வழக்கில்
தலைமுறை கடந்த தீர்ப்பு

மறுக்கும்
தரையை மிதித்து
பறக்கத் தெரிந்த பறவை
நன்றி:அன்புடன் புகாரி

மூஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ஈமான் என்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை எவ்வித திருத்தமும் மாற்றமுமின்றி உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிவதற்கு ஈமான் என்று கூறப்படும்.

இஸ்லாம்

முஸ்லிம் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதுடன் அவனால் தடுக்கப்பட்டவர்களைத் தவிர்ந்து கொள்பவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும்.  எனவே ஒரு முஸ்லிம் இறைவனின் சட்டதிட்டங்களை நிலைமைக்கேற்ப அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  உதாரணமாகத் திருமணம் செய்ய நாடுபவன் திருமணத்தின் சட்டங்களையும் அதே போல ஒரு வியாபாதி இஸ்லாமிய வியாபாரச் சட்டங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  அதன் அடிப்படையில் அறிய வேண்டிய அவசியச் சட்டங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை நான் தொகுத்துள்ளேன்.  அப்புத்தகத்தின் ஒரு சில கருத்துகளையே இங்கு கட்டுரையாக தொகுத்து வழங்குகிறேன்.

மனித நேயமும் மத நல்லிணக்கமும்-

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

-சட்டத்தரணி ஏ.ம்.ஸயீத் B.A.,B.L.,

அனைத்துலகங்களும் அவற்றிளுள்ள எல்லா வஸ்துகளும் அல்லாஹ{த் தஆலாவின் படைப்புக்களாகும்.  இவற்றுள் மனித இனமே மிகவும் விசேஷம் வாய்ந்தது.  சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மறுமைப் பயனுக்குரிய சரியான வழியை வகுத்து செயல்படுவதால் மனிதர்களில் முஸ்லீம்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் சமூகமாக பிரிந்து வாழ்கின்றார்கள்.  அவ்வாறின்றி மொழி, நிறம், நாட, இனம், குலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வௌ;வேறு சமூகங்களாகப் பிரிக்கப்படும் முறை இஸ்லாத்தில் கிடையாது.

ஒவ்வொரு சமூகத்திற்கும் சில தனித்துவங்கள் உண்டு.  இத்தனித்துவத்தில் அடிப்படையில் தான் ஒவ்வொரு சமூகத்திற்கும் பெயரிடப்படுகின்றது.   இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமான இதர கொள்கைகளை கடைப்பிடிப்போர் அனைவரும் பிற சமூகத்தினர் என நாம் கணிக்கின்றோம்.  உலக மனிதர்கள் இவ்வாறு இரு சமூகங்களாக பிரிக்கப்பட்டாலும் எல்லோரும் அல்லாஹ்வின் சிருஷ்டிகளாகும்.

தறிவுடைய மனிதர் என்ற வகையில் பிறமனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் முஸ்லீம்கள் என்ற வகையில் பிற சமயத்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் வைக்க வேண்டிய தொடர்புகள் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பிற மதத்தவர்களுடன் சினேகமாக இருக்க வேண்டும்.  பரஸ்பரம் இரு சமூகத்தவரும் உதவி உபசாரங்கள் செய்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அல் குர்ஆனிலே அல்லாஹ் அநுமதித்துள்ளான்.

(விசுவாசிகளே)! மார்க்க வியத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாத, உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு நீங்கள் கருனை காட்டி நன்மை செய்ய வேண்டாமென்றோ, அவர்களுடன் நீங்கள் நிதானமாக நடந்து கொள்ளக் கூடாதென்றோ அல்லாஹ் உங்களை தடுக்கவில்லை.  நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிப்பவனாகவே இருக்கிறான்.                (அல் குர் ஆன்)

உலமாக்கள் ஆலோசகர்களாக திகழ வேண்டியது காலத்தின் தேவையாகும்

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

நபிமார்களின் வாரிசுகள் என்ற வகையில், உலமாக்களின் பொறுப்பு மிக முக்கியமானது. நன்மையை ஏவுவதும் தீமையைத்தடுப்பதும், அதன் அடிப்படையில் சமூகச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதும் இவர்களது கடமையாகும்.  இதனை இஸ்லாமியப்பணி எனவும் தஃவாப் பணி எனவும் அழைக்கப்படுகின்றது.

தஃவாப்பணியின் எல்லை மிக விரிவானது என்பதை நாம் அறிவோம்.  குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவது, சொற்பொழிவாற்றவது, மேடைப்பிரசங்கம் செய்வது, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாமிய போதனைகளை விளக்குவது, மார்க்கத் தீர்ப்பு வழங்குவது, நூல்கள் எழுதுவது, பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றை வெளியிடுவது, தஃவா அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற அனைத்து விடயங்களும் தஃவாப் பணியில் அடங்கும்.

NIDUR SEASONS: தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

NIDUR SEASONS: தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு.

புகாரி என்றால் என்ன?

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0


என் பெயர் புகாரி. என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர். புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.

நவீன தமிழ்ச்சொற்கள்

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

தமிழ்ச்சொற்களின் வளர்ச்சிக்கு கணினி என்ற சொல்லே ஒரு நல்ல உதாரணம். முதலில் அவசரத் தேவைக்கு உலகின் ஒரு புதிய சொல்லை அப்படியே பயன்படுத்தவேண்டும்.

கம்ப்யூட்டர்

இதனால் நவீன ஆக்கங்கள் தடைபடாது அல்லது ஆக்கப்படுவதற்காகக் காத்திருக்காது. அப்படி ஆக்கப்படுவது எல்லோருக்கும் புரியும். இதற்கு அடுத்த நிலை அந்த புதிய சொல்லின் மொழிபெயர்ப்பு

கணிப்பொறி

இப்போது மக்களிடம் ஓரளவு கம்ப்யூட்டர் என்றால் புரியும் நிலை வந்துவிட்டது. அதை கணிப்பொறி என்று சொல்லும்போது அது கம்ப்யூட்டர்தான் என்று அறிகிறார்கள். அடுத்து சட்டென்று உலகின் ஒரு மூலையிலிருந்து ஒரு சொல் பிறக்கிறது.

கணினி

இது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. கணிப்பொறி என்று சொல்வதைவிட கணினி என்பது இனிமையும் பொருள்தரக்கூடியதுமாக இருக்கிறது.

ஆனால் இதை கணனி என்று இலங்கையில் எழுதுகிறார்கள். உலகமே கணினி என்று எழுதும்போது இலங்கையர் கணனி என்று எழுதுவது நெருடலாய் இருக்கிறது. இந்த மனப்பான்மை தமிழர்களிடம் இருந்து மறைய வேண்டும். ஆனாலும் இலங்கை வழக்கு என்று ஒன்று இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதை நான் மறந்துவிடுகிறேன்.

பிறமொழிச் சொற்களுக்கு பலரும் கிரந்தம் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இலங்கைத் தமிழர்கள் ரிம் ரேக் அவுட் அண்ட் கேற்றரிங் (Tim Take out and Catering) என்றும் ஸ்ரார் (Star) என்றும் எழுதுகிறார்கள். வாசிக்கும்போது கண்ணுடைந்து கைகளில் விழுகிறது. அவர்கள் கவலையே படுவதில்லை. விளக்கமும் தருவதில்லை.

கணினி என்ற சொல்லை கணி என்றும் பயன்படுத்தலாம். என் கவிதைகளில் நிறைய சொற்களை அப்படி உருவாக்கி இருக்கிறேன்.

கணித்தமிழ், கணிமொழி, கணியெலி, கணிப்பாவை, கணித்திரை என்று சென்றுகொண்டே இருக்கும்.

இந்த நிலைப்பாட்டின்படி தமிழ் 100 சதவிகிதம் நவீனகாலப் பயன்பாட்டிற்கு உகந்தது. ஆனால் இந்த கிரந்த எதிர்பாளர்கள்தான் தமிழை ஒரு கூண்டுக்குள் அடைத்து சிறகுகளை வெட்டியெறியப் பார்க்கிறார்கள். அவர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன் ஏனெனில் அவர்கள் தோல்வியாளர்கள். வளரும் தமிழை எவராலும் தோற்கடிக்க முடியுமா?

நன்றி! : அன்புடன் புகாரி

முகம் மூடி அகம் திறப்பவர்கள்

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.
எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் காட்ட
விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை
அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக மட்டுமே பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கிரந்தம் விரும்புவதால் தமிழ் விரோதியாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்

இப்படியே அடுக்கலாம்…..

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முகம் காட்டி நான் நிற்கலாம்தான். ஆனால் இவை
அனைத்தின் கலவைதானே உண்மையான நான்? என் நிஜமுகத்தோடு, அது எத்தனை
அழகாயிருந்தாலும் சரி எத்தனை அசிங்கமாக இருந்தாலும் சரி, என்னைக்
காட்டிக்கொள்வதுதானே சரி. ஏன் பயப்படவேண்டும்? யாருக்குப் பயப்படவேண்டும்?

என் புத்திசாலித்தனங்களை மட்டுமல்லாமல் என் முட்டாள்தனங்களையும் சேர்த்தவன்
தானே நான் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு நாணம் வரவில்லை. ஆனால் இயன்றவரை
முட்டாள் தனங்களிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று எண்ணவாவது செய்கிறேன்.

கண்ணதாசன் வனவாசத்தில் இயன்றவரை தன் நிஜ முகம் எழுதினார். காந்தி அவருக்கு அந்த
எண்ணத்தைத் தந்தார் என்றும் சொல்கிறார். கண்ணதாசன் உண்மையான முகம் நமக்குத்
தெரிகிறது. போலியற்ற நிலையில்தான் மனிதர்கள் உயர்வானவர்கள் என்பது என் கருத்து.

கலாச்சாரம் பண்பாடு, கௌரவம், பெறுமை என்ற போர்வைக்குள் சுயம் கொன்று ஆடும்
கூத்து எனக்கு அருவறுக்கத்தக்கதாய்ப் படுகிறது.

நான் நிச்சயமாக எவரையும் குறைகூறவில்லை. என் மனமும் முகமூடி நாடியது. முயன்றும்
பார்த்தேன், பின் அதைக் கைவிட்டேன். நான் நானாக இருப்பதால் எவருக்கேனும்
பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே பொருள், இதில்
இழப்பு என்ன இருக்கிறது என்று திடமாக உணர்ந்தேன்

அன்புடன் புகாரி

Curry powder could treat cancer

Posted on : 28-10-2009 | By : mohamedali | In : English(ARTICLES), உடல் நலம் -(Health)

0

A chemical found in the curry spice turmeric has been able to kill oesophageal cancer cells in the laboratory, according to a new study.

In the study, researchers from University College Cork found that curcumin started to kill cancer cells within 24 hours. The cells also began to digest themselves.

“These exciting results suggest that scientists could develop curcumin as a potential anti-cancer drug to treat oesophageal cancer,” the researchers said.

Each year around 350 people are diagnosed with oesophageal cancer in Ireland. Less than 20% of people survive oesophageal cancer beyond five years. It is the seventh most common cause of cancer death and accounts for around 4% of all Irish cancer deaths.

“The incidence of oesophageal cancer has gone up by more than a half since the 70s, particularly in the Western world and this is thought to be linked to rising rates of obesity, alcohol intake and reflux disease, so finding ways to both treat and prevent this disease is extremely important.  The development of natural compounds as chemo-preventative agents is also a very promising area of research,” the researchers added.

The study was published in the British Journal of Cancer.

source : irishhealth.com