Featured Posts

  • Prev
  • Next

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

0

by முதுவை ஹிதாயத்

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். இவரா இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் சார்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம், புஹாரி ஷரீஃப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நூல்களை அழகு தமிழில், எளிய நடையில் மொழிபெயர்த்தவர் என எண்ணத் தோன்றும். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் துபையில் பணிபுரிந்து வந்த இவர் ஜுலை மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார்.

சமுதாயத்தில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள இவரது சமுதாயப் பணிகளை அறிந்து கொள்ள அவருடன் ஒரு சந்திப்பு :

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்

பதில் : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி

கே : தங்களது இளமைப் பருவம் பற்றி….. ?

பதில் : நான் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தேன். பெற்றோர் பெயர் ஹாஜி எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் – ஹசீனாபி. எனது பெற்றோருக்கு 9 வது கடைக்குட்டியாக பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் 3 அக்கா, 5 அண்ணன்கள். 1970 ல் எனது தாயார் வஃபாத்தானார்.

கே : தங்களது கல்வி குறித்து ?

பதில் : காஞ்சிபுரத்தில் தர்கா பள்ளி,, டிஆர்.எஸ். பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்தேன். பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி.யை மார்ககக் கல்விக்காகத் துறந்தேன்.
பின்னர் வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1972 முதல் 1979 ஆம் ஆண்டு வரை ஓதி ஆலிம் ஸனது பட்டம் பெற்றேன்.

கே : பள்ளிக்கல்வியில் சிறப்புறக் கற்றிருந்த தாங்கள் அரபிக் கல்லூரியில் சேரக் காரணம் ?

பதில் : பிறை, முஸ்லிம் முரசு உள்ளிட்ட இதழ்களில் மார்க்க அறிஞர்கள் அப்துல் வஹ்ஹாப் சாஹிப், மஹதி, அல் ஃபத்தாஹ் பாகவி உள்ளிட்டோரின் கட்டுரைகள் என்னை அரபிக்கல்லூரியிலும், மேலும் வட மாநிலங்களில் உள்ள தேவ்பந்த் போன்ற மார்க்க்க் கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே 1972 ஆம் ஆண்டு வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த ஆண்டே அதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நீதிபதி மு.மு. இஸ்மாயில், எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முஸ்லிம் முரசு மாத இதழ் வெள்ளிவிழாவினையொட்டி நடத்திய ’நான் விரும்பும் தலைவர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நான் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் குறித்து எழுதிய கட்டுரைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் பரிசு ஏ.கே.அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் குறித்து எழுதிய சாயபு மரைக்காயருக்கு கிடைத்தது.

இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.

சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

‘ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.

செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

“சவுகரியமா? இதன் மூலமா?” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.

முக்கனிகளின் இரண்டாம் கனி :” பலா”

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

0

by அபுல் பசர்

முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.

கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.
அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.

நன்றி : http://abulbazar.blogspot.com

தமிழக வக்போர்டுக்கு புதிய தலைவர் :முதல் கோணல்

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

Posted by நோக்கம்

தமிழக வக்போர்டின் புதிய தலைவராக கவிக்கோ அப்துல் ரஹ்மன் 10.6.2009 அன்று நியமிக்கப் பட்டிருக்கிறார்.
“பால் வீதி” கவிதை நுல் வழியாக வீச்சு மிகுந்த கவிஞராக வெளிப்பட்டு பன்முகத்தன்மை கொண்ட வசீகரமான உரைத் தொகுப்புக்கள் பிற கவிதை நூல்கள் ஏராளமான கவியரங்குகள், வழியாக பிரபலமடைந்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களில் தனி இடம் பெற்றவர். கவிக்கோ அப்துல் ரகுமான்.
தி.மு.க.வின் ஆஸ்தானக் கவிஞர்களில் ஒருவராக முதல்வர் கலைஞருக்கு நெருக்கமாகவும் இருந்த அவருக்கு இந்தப் பதவி பவழ்ங்கப் பட்டது இலக்கியத்தை நேசிக்க்கும் உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
தி.மு.க. வின் மாநாட்டு மேடைகளில் சங்க நாதம் செய்த நாகூர் ஹனீபாவுக்கு மரியாதை செய்தது போல கவிஞருக்கும் மரியாதை செய்து விட்டதில் தி.மு.கவின் உயர் மட்டத்திற்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் ஒரு கசப்பான சதியியிருந்து அவரது இந்தப் பயணம் ஆரம்பமாகியிருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு கவலையளித்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியம் ஊழல் மலிந்ததாக இருப்பதுதான் பெரும்பாலும் செய்தியாக இருக்கும். இந்த முறை அது அரசியல் சதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.

ஹைதர் அலியில் தொடங்கிய வக்போர்டின் சோகம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கையாண்ட வழிமுறையிலிலும் தொடர்கிறது.

பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் தர்காக்கள் உள்ளிட்ட புனித தலங்களின் நிர்வாக அமைப்பில் ஊழல்கள் புழுத்துப் போயிருப்பதும் சதித் திட்டங்களால் மூச்சுத்திணறுவதும் தமிழ முஸ்லிம் ஜமாத்துகளுக்கு ஒரு சோதனையே .

ஜூன் 5 ம் தேதி டெக்கான் கிரானிகளில் “அதிகாரிகள் என்னை ஏமாற்றி விட்டார்கள்” என்ற தமிழக தலைமைக் காஜி சலாஹுத்தீன் அய்யுபியின் அறிக்கையை படித்த முஸ்லிம்கள் கொஞ்சம் பதறித்தான் போனார்கள்.

வக்பு போர்டு என்பது இஸ்லாமிய வக்பு நிருவணங்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் செய்கிற ஒரு அமைப்பாகும்.

தமிழ முஸ்லிம் கிராமங்கள் ஒன்றில் ஒரு பள்ளிவாசலில் ரமலான் மாதத்தின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகை குர் ஆனை மன்னம் செய்த ஒருவரைக் கொண்டு நடைபெறவில்லை. இதை அறிந்த ஒரு முஸ்லிம் பிரமுகர் அதற்கான காரணத்தை விசாரித்திருக்கிறார் அவ்வாறு தொழ வைக்கிற இமாகுக்கு கொடுக்கத் தேவையான பண வசதி இல்லை என்று கூறப்பட்டது. அப்படியானல் நான் நான்கு ஏக்கர் நிலம் தருகிறேன் அதில் கிடைக்கிற வருமானத்தை வைத்து ஆண்டு தோறும் தராவீஹ் தொழுகையை குர் ஆனை மனனம் செய்த ஒருவரைக் கொண்டு நடத்துங்கள் என்று நான்கு ஏக்கர் நிலத்தை தானம் செய்தார், அந்த தானத்திற்கு வக்பு என்று பெயர். இது போல பல்வேறு பட்ட சமய சமுதாய நோக்கங்களுக்காக வக்பு செய்யப் பட்ட சுமார் 6694 வக்பு நிறுவனங்களை தமிழகத்தில் அந்ததப் பகுதிகளில் உள்ள பொறுப்பாளர்கள் நிர்வகித்து வருகிறார்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி வக்பு சொத்துக்களில் ஒன்று எடுத்துக் கொண்டால் இது போன்ற பிரதான இடங்களில் இருக்கிற வக்பு சொத்துக்களின் மதிப்பு கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர் அலி அவர்களால் தி.மு.கவிற்கு வழங்கப் பட்டதக திரு பி.ஜே குற்றம் சாட்டுகிற திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலத்தின் நிலமும் வக்பு சொத்துதான் என்றால் வக்பு வார்யத்தின் நிர்வாகக்கட்டுப் பாட்டில் உள்ள சொத்துக்களின் மதிப்பை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்களேன். அவர்களை கண்காணிக்கவும் அவற்றை மேம்படுத்தவும் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்ட அமைப்பு தான் வக்பு வாரியம்.

வக்பு வாரியத்தின் பணிகளையும் அதன் அதிகார வரம்பையும் 1995 ம் ஆண்டில் நிறைவேற்ற்ப் பட்ட வக்பு சட்டம் வக்பு சட்டம் வரையறூத்தது.

வக்பு சொத்தின் மூலப்பதிவு அதன் வறுவாய் அதை செலவிட வேண்டிய வழிகள் அதன் பயணாளிகளை பற்றிய ஆவணங்களை பராமரிப்பது, வக்பின் வருவாய் அதற்குரிய வழியில்தான் செலவிடப் படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது, வக்பு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை கண்காணிப்பது தேவை ஏற்படும் இடங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது அல்லது நீக்குவது. வக்பு சொத்துக்களை நிர்வகிப்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, வக்பு நிறுவனங்குளுக்கு இழப்புக்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பது. வக்பு சொத்துக்களை கண்டறிவது, வக்பு சொத்துக்களை விற்பது, அல்லது குத்தகைக்கு விடுவது அல்லது பரிமாற்றம் செயவ்து, ஆகியவை வக்பு வாரியத்தின் பணிகள் அதன் அதிகார எல்லககள் என அச்சட்டம் கூறுகிறது.

வக்பு வாரியத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக மாநில மத்திய அரசுகள் உதவுகின்றன, 1990 5 லட்சமாக இருந்த மாநில அரசின் உதவி 2008 ம் ஆண்டில் 45 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இடக்காலங்களில் வக்புவாரியத்திற்கு ஏற்பட்ட அதிகப் படியான செலவை ஈடுகட்ட அரசு விஷேச நிதியை விடுவித்துள்ளது.

ஒரு பள்ளிவாசல் ஐந்து நேரத் தொழுகைக்காக முஸ்லிம்களுக்காக திறந்து விடப் படும் என்றால் அதுவும் வக்பு சொத்தாகிவிசும் என்ற வகையில் பெரும்பாலான பள்ளிவாசல்களும் வக்பு வாரியாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறூ இணைத்துக் கொள்ளப பட்டிருப்பதால் அந்நிறுவனங்களை நிர்வகிக்கிற பொறூப்பாளர்கள் அதை நடத்துவதற்கு பெரும்பாடு பட்டி காசிபணத்தைச் சேர்த்த்தால் அதிக் ஏழு சதவீதத்தை வக்பு வாரியத்திற்கு கப்பமாக கட்ட வேண்டும். இதற்கு பிரதியாக அந்த வக்பு நிறுவனத்திற்கு ஏதாவது செலவு ஏற்பட்டால வக்பு வாரியம் வழங்கும். அதைப் பெறுவதற்குள் அந்த நிறுவனத்தின் தாவு தீர்ந்து விடும்.

வக்பு வாரியத்திற்கு வக்பு நிறுவனங்கள் வழங்குகிற 7 சதவீத பங்குதான் வக்பு வாரியத்தின் முக்கிய வருவாய் ஆகும். 1997 ல் 58 லட்சமாக இருந்த இந்த வருவாய் படிப்படியாக அதிகரித்து 2008 ம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : Uncategorized, கட்டுரைகள் (ARTICLES)

0

பதிவர் : கலையரசன்

ஐரோப்பாவில் மிக அண்மைக்காலம் வரையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய யூனியன், நவ-லிபரலிச அடிப்படைவாத பொருளாதார சீர்திருத்தங்களை திணித்து வருகின்றது. நலன்புரி அரசு பெற்றுத் தந்த மக்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்கள் பெற்று வந்த அரச மானியம் குறைக்கப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் ஒரு புறம் கல்விக்கட்டணம் உயர்ந்து வருவதுடன், மறு புறம் பல்கலைக் கழகங்களின் தரம் தாழ்ந்து வருகின்றது.

பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஜெர்மன்,ஆஸ்திரியா, போலந்து மாணவர்கள் போராடி வருகின்றனர். தாம் கல்வி கற்கும் கல்லூரி வளாகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனியில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலந்தில் லுப்ளின் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! – இறுதிப் பகுதி

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

என் தேசம்சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து வைத்திருந்தது. எனவே, நேரு, வல்லபாய் பட்டேல் போன்றோரின் துணையுடன் பாகிஸ்தான் பிரிவினைக்கு நன்றாக விதை தூவி வளர்த்து, மவுண்ட் பேட்டனின் துணையுடன் விடுதலையின்போது பாகிஸ்தானைப் பிரித்து ஜின்னாவின் கையில் கொடுத்து இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.

ஒரு காலகட்டம்வரை தீவிர ஹிந்துத்துவ நிலைபாடுகளுக்கு எதிராகவே கருத்துகளைத் தெரிவித்து வந்த காந்தியடிகள், காங்கிரஸில் தன் பிடி கைவிட்டுப் போய் விட்டதை உணர்ந்தபோது பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து விடுவதுதான் உத்தமம் என்ற முடிவுக்கு வந்தார். பிரிவினையின்போது பாகிஸ்தான் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுப் பங்கைச் சரியாக கொடுக்க வலியுறுத்திய காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸால் காந்திஜி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இவ்வறான இந்திய விடுதலை வரலாற்றில் பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு, “விடுதலைக்குப்பின் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைத் துண்டாடியது ஜின்னா என்ற முஸ்லிம்தான்” என்ற எண்ணம் இந்திய முஸ்லிம்களின் மனதில்கூட உறுதியாகப் பதியும் விதத்தில் பிரச்சாரம் அவிழ்த்து விடப்பட்டது. இது, “இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்தியா சொந்தமானதல்ல” என்ற எண்ணைத்தையும் “இந்தியா இந்துக்களுக்குத்தான்” என்ற எண்ணத்தையும் இந்திய மக்களிடையே உருவாக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவவாதிகளுக்குப் பெரிதும் பயன்பட்டது.

விடுதலைக்குப்பின் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் ஹிந்துத்துவ ஆட்சியைக் கொண்டு வந்து விடலாம் எனக் காய் நகர்த்திய ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு, காங்கிரஸை நம்பிக் கொண்டிருப்பதால் பலனேதும் இல்லை என்ற எண்ணம் 70 களிலிருந்து உருவாக ஆரம்பித்து விட்டது. பதவி வெறி, ஊழல், கோஷ்டி சண்டை இவற்றிலேயே திளைத்துக் கிடந்த காங்கிரஸில் பூரண ஹிந்துத்துவ சிந்தனையை முழுமையாகக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று உணர்ந்து கொண்ட ஆர்எஸ்எஸ், காங்கிரஸுக்கு மாற்றாக மற்றொரு சக்தியை உருவாக்குவதே “இந்துஸ்தான் இந்துக்களுக்கே” எனும் கனவுக்குத் தீர்வு என்ற எண்ணத்தோடு வகுப்புவாதத்தை இரகசியக் கொள்கையாகக் கொண்ட பாஜக எனும் கட்சி தேசிய அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

துவங்கிய 20 ஆண்டு காலகட்டத்திலேயே பாஜகவின் முகமூடி கிழிக்கப் பாட்டு, அதன் நிஜமுகம் மக்கள் முன்னிலையில் அவமானப்பட்டு நிற்கின்றது. “கருத்துச் சுதந்திரம் இல்லாத, நிர்வாகத் திறமையும் சகிப்புத் தன்மையும் அற்ற அரசியல் கட்சியாக, ஊழல், பதவி வெறி, காட்டுமிராண்டித்தனம்” ஆகிய அனைத்துக்கும் மொத்தக் குத்தகைக் கட்சியாக, அரிதாரம் கலைந்துபோன ஜோக்கர் போன்று இந்திய தேசிய அரசியலில் பாஜக இன்று சிறுமைப்பட்டு நிற்கின்றது.

காங்கிரஸில் சிதறியிருக்கும் மதவாத இந்துக்களின் ஓட்டுகளை எப்பாடு பட்டாவது ஒன்று திரட்டினால் மட்டுமே மத்தியில் நாற்காலியைப் பிடிக்க முடியும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, ராமனின் பெயர் கூறி, மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி, இந்துக்களுக்கு மதவெறியூட்டி, உடன்பிறப்புகளாக வசித்து வந்த இந்நாட்டு மக்களின் இரத்தத்தை ஓட்டி, பதவிக்கு வந்த  பாஜக, 5 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த போதிலும்கூட, தங்களின் முழு முதற் இலட்சியம் என்று இந்து மக்களின் முன்வைத்த பொய்க் காரணமான ராமனுக்கான கோயிலை அயோத்தியில் கட்டாதது அதன் அயோக்கியத்தனத்தை மக்களுக்குக் காட்டி விட்டது.

நாட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டி வாங்கியதிலேயே செய்த பாஜக ஆட்சியின்  ஊழலிலிருந்து நாட்டு மக்களுக்காக நாடாளுமன்ற அவையில் கேள்வி கேட்க இருக்கும் உரிமையைக் காசுக்காக விற்ற அயோக்கிய அர்ப்பர்களின் கூடாரம்தான் பாஜக என்பதை நாட்டு மக்கள் கண்டு கொண்டனர்.

தொடர்ந்து,  நாடாளுமன்ற அவையிலேயே கோடிகளைக் கொட்டிக் காட்டி, உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்ததில் இந்நாட்டின் மீதான பற்று என்பது பாஜகவுக்குக் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிந்து கொண்டனர். இறுதியாக, இதுநாள் வரை கூறி வந்த பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம்கள் காரணமல்ல என்ற உண்மையை அக்கட்சியின் மூத்தத் தலைவர்களே கூறியதும் அதனைப் பொறுக்க முடியாமல் என்ன எழுதினார் என்றே படித்துப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியை விட்டுத் தூக்கியடித்ததோடு அவரைப் பின்பற்றி பாஜக கூடாரமே கலகலத்துப் போய் நிற்பதும் மக்கள் மத்தியில் பாஜகவின் தகனம் நெருங்கி விட்டதை அறுதியிட்டுக் காட்டி விட்டது. இதில் ஒரு மகாக் கேவலமான விஷயம் என்னவெனில், ஜஸ்வந்த் சிங்காவது இந்தியாவில் இருந்து கொண்டுதான் “பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா காரணமல்ல” (பெட்டிச் செய்தியில்).

மக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

Posted by அபுல் பசர்

மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும். காலை​யில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைக​ளைப் பள்​ளிக்கோ கல்லூ​ரிக்கோ தயார் செய்து அனுப்பி​விட்​டுக் கணவரை அலுவலகத்​திற்​குப் புறப்படச் செய்வதற்​குள்

குடும்பத்தலைவிக ​ளுக்கு போதும் போது​மென்​றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்ப​தில்லை என்ப​தால், தொலைக்​காட்சி​யின் பக்கம் கவனம் செலுத்துவது என்​கிற பேச்​சுக்கே இட​மில்லை.​ அத​னால்​தான் பெரும்​பா​லான சானல்க​ளில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவ​ருக்​கும் பொது​வான நிகழ்ச்சிகள் அந்த நேரத்​தைப் பங்கு​போட்​டுக் கொள்​கின்றன.
இந்தக் காலை​நேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்​காட்சி​யைத் திருப்​பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குத​லைத் தொடங்கு​கின்றன நமது சானல்கள். பொது​வாக, ஒவ்​வொரு குடும்பத்தி​லும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிக​ளுக்கு இருப்ப​துண்டு. இந்தக் கவலை​யைத் தங்க​ளுக்​குச் சாதகமாகப் பயன்ப​டுத்தி, அவர்களது அறியாமையை​யும் நம்​பிக்கையை​யும் காசாக்க முயல்​கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீர​வேண்​டுமா? இந்தக் கல்லை வாங்​குங்கள், அந்தக் கவசத்தை வாங்​குங்கள் என்று சானல்க​ளில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்​பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்​கிற உன்னத​மான குறிக்கோ​ளோடு, கண்ணை மூடிக்​கொண்டு சானல்க​ளும் இதற்​குத்  துணை போவது கொடுமையி​லும் கொடுமை!
விஜய்  தொலைக்​காட்சி​யில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்​காக வரும் நகைக்க​டைக்காரர், போக​ரின் பாஷா​ணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்க​மாக மாறுவது (தெரிந்​தால் இவரே தங்கம் தயா​ரிக்க வேண்டியது​தானே!) என்பது போன்ற ஒன்​றுக்​கொன்று சம்பந்த​மில்​லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்​புப்ப​டுத்​திப் பேசி​யும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்​யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட ‘லஜி’களைக் கூறி​யும், ஏற்கெனவே குழப்பத்​தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்​தில் ஆழ்த்தி​னார்.
உங்கள் ஜாதகத்துடன் நகைக்க​டைக்​குள் செல்வது, மாஸ்டர் செக்கப்​பிற்​காக மருத்துவம​னைக்​குச் செல்வ​தைப் போன்றது என்று தனது வியாபாரத்​திற்கு வலு சேர்க்​கும் இவர் சொல்ல வருவது என்ன​வென்​றால், ‘எங்கள் கடை​யில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணி​யுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்​தும் தீர்ந்துவி​டும்’ என்பது​தான். கல் ஒன்று, மாங்​காய் இரண்டு என்பது பழ​மொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து​கொண்ட புது​மொழி!
அதிர்ஷ்டக்கல் வியா​பாரி தனது வியாபாரத்தை முடித்து​விட்​டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகி​றார் கட​வுள் பெய​ரில் கவச விற்பனை செய்​யும் சாமி​யார் வேட​மிட்ட ஒரு வியா​பாரி.​  செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்​கிய வாழ்வு ஆகியவற்​றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலி​ருந்து காப்பது, வழக்குக​ளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களை​யும் நல்குகிற​தாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவ​னிக்க)​. குழந்தைக​ளுக்​குப் பள்​ளிக் கட்டணம் கூடக் கட்ட முடி​யாத நிலை​யில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்​கிய பின்னர் (கவசம் வாங்க மட்​டும் காசு எங்கி​ருந்து வந்த​தென்று தெரிய​வில்லை!) செல்வச் செழிப்​பில் திளைப்பதாகப் பேட்டி​யும் உண்டு.
இதைத் தொடர்ந்து  – கண் திருஷ்​டியிலி​ருந்து காக்​கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளி​லும் குரானி​லும் கூடக் குறிப்பிடப்பட்டி​ருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்​திற்கு வலு சேர்த்​தார்கள் இந்நிகழ்ச்சி​யில். கல்யாணமா​காத பெண்கள் இதை வாங்கி​னால் உடனே திருமணம் நிச்சயமாகு​மாம் (பலன​டைந்தவ​ரின் பேட்டி​யும் உண்டு). இத்த​னைக்​குப் பிற​கும் நீங்​கள் ஏமாளியாகாமல் இருந்​தால் ஆச்சரியம்​தான்!

ஜமாத் தலைவர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்படுவர் : வக்பு வாரியாம் எச்சரிக்கை

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

பரமக்குடி : “”பொது சொத்துகளை பாதுகாக்கும் விதமாக, தவறு செய்கின்ற ஜமாத் தலைவர்கள் தண்டிக்கப்படுவர்; தவறு செய்த மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர்,” என, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல்ரகுமான் தெரிவித்தார்.

பரமக்குடியில் நடந்த சமூக கல்வி பொருளாதார விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வக்புவாரியத்துக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் பெறுமான சொத்து உள்ளது. ஆக்கிரமிப்பிலும், மீட்க முடியாத நிலையில், இழந்து போன சொத்தாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வசம் உள்ள 7000 ஏக்கர் நிலங்களுக்கு, எந்த இழப்பீடும் அரசு தராமல் உள்ளது. திருச்சி பாரதி தாசன் பல்கலை இடத்துக்கு இழப்பீடு கேட்டுள்ளோம். பொருளாதார நிலையில் உயர்ந்தும், வருமானம் போதாது. 6வது ஊதிய குழு கமிஷன்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் உள்ளது. இதற்காக அரசிடம் மானியம் கோரி உள்ளோம்.

வருமானம் ஈட்டும் வகையில் திருநெல்வேலி சக்கரம் பள்ளி இடத்தில் வணிக வளாகம், தழையூத்தில் பாலிடெக்னிக், கான்பிரன்ஸ் ஹால், உணவு விடுதி கட்டவும், பாளையங்கோட்டையில் இன்ஜினியரிங் கல்லலூரி அல்லது பாலிடெக்னிக் கட்டவும் திட்டம் உள்ளது. திண்டிவனம் காலி நிலத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்ட, டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி அல்லது தாஞ்சவூரில் மருத்துவக்கல்லூரி கட்டப்படும். லக்னோ பல்கலை கழகம் ஐந்து மாநிலங்களில் கிளைகள் தொடங்க இடம் கேட்டுள்ளது. திருவண்ணாமலையில் 250 ஏக்கர் நிலம் உள்ளதால் இங்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, என்றார்.

நன்றி http://muthupet.org/?p=1575

பிரட் சாண்ட்வெஜ்

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

0

by அன்புடன் மலிக்கா


தேவையான பொருட்கள்

பிரட் 8 பீஸ்

சீஸ்

கெச்சப்

மயோனஸ்

ஆயில் மிளகு உப்பு

பேஸ்ட்டுக்கு பொதினா கொஞ்சம், கெட்டித்தயிர் கொஞ்சம்,

வேகவைத்து அரைத்த கொண்டக்கடலை கொஞ்சம், சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

Microsoft and Yahoo finalise anti-Google agreement

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

1

Software giant Microsoft and Internet stalwart Yahoo have completed their web search agreement announced late October, it being their latest attempt to stab Google were it hurts: in its online ad business.

Steps from Eiffel Tower sell for 85,000 euros

Posted on : 31-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), செய்திகள் (NEWS)

0

An aerial view of the Eiffel Tower. A piece of a staircase from the Eiffel Tower, which was part of a larger piece removed from the tower in 1983, sold at auction for 85,000 euros (124,000 dollars) in Paris on Monday.

An aerial view of the Eiffel Tower. A piece of a staircase from the Eiffel Tower, which was part of a larger piece removed from the tower in 1983, sold at auction for 85,000 euros (124,000 dollars) in Paris on Monday.

AFP – A piece of a staircase from the Eiffel Tower sold at auction for 85,000 euros (124,000 dollars) in Paris on Monday.

The 7.8-metre chunk of the tower’s spiral staircase, containing 40 steps, was part of a larger piece removed from the tower in 1983.

It was bought on Monday by an ironworker from the town of Troyes, east of Paris, during a sale of Paris-themed souvenirs at the Drouot auction house.

The man, who declined to give his name, told AFP he planned to “cut it up and re-sell it.”

He said he had done the same with a piece of the Berlin Wall.

Source : http://www.france24.com/

Click here to find out more!

The Evils of Television

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), இஸ்லாம் (ISLAM), கட்டுரைகள் (ARTICLES)

0

By
A Student of Darul Uloom
Holcombe, Bury, U.K

Television Diverts Man’s Attention from The Remembrance of Allah

Our Holy Prophet sallallahu alaihe wasallam said,

“Every play (sport or amusement ) of the world excepting three (types of play) is Baatil (baseless, null and not permissible) – (The three types being) your practising with your bow and arrow; your training your horse and your playing with your family.”

(Narrated by Hakim in Mustadrak, the Hadith is Sahih in terms of the conditions of Imaam Muslim)

Allah Ta’laa says in the Holy Qur’aan, “The life of this world is but play and amusement. And the Abode of the Hereafter is best for those who fear (Allah).”

The above stated Hadith and verse of the Holy Quraan, as well as many other verses of the Qur’aan and Ahadith make it Quite clear that Islam does not tolerate futility, idle sport and amusement, This is because amusement and entertainment divert ones attention from the Remembrance of Allah Ta’ala. Amusement and entertainment which Islam describes Lahw, La’b make a person indolent, negligent and irresponsible. Hence, we find The Holy Prophet condemning very strongly even such play as chess and backgammon, etc. The Holy Prophet sallallahu alaihe wasallam said,

“Whosoever plays with backgammon (chess) has dipped his hands in the blood of swine.”

(Muslim)

On the basis of this Hadith as well as other Ahadith and the general spirit of Islam as regards futility and amusement, the Fuqahaa state:

“It is forbidden to play chess, backgammon; the indulgence in every amusement (or play) is forbidden because this is futile and idleness. And, this (futility) is Haraam. The Holy Prophet sallallahu alaihe wasallam said,

‘The play of a Mu’min (believer) is baatil (baseless, null and not permissible), but on three occasions – his training his horse; his practising with his cross-bow, and his playing with his family.’

And because it (chess) is a kind of play which diverts one’s attention from zikrullah (Remembrance of Allah), and from attention of Jama’at Salaat. Therefore it is Haraam. (Also) Because the Holy Prophet sallallahu alaihe wasallam said,

‘Whatever diverts your attention from zikrullah is gambling.’

Imam Abu Yusuf and Imam Muhammad maintain that it is not permissible to offer salutations (to say assalamu alaikum) to people indulging in chess games. This is, so as to act as a warning to them.”

இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

மத அடிப்படைவாதம் ஒரு மேலைத்தேய இறக்குமதி – 2

இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கேயும் ஒரே மாதிரியாக தோன்றவில்லை. இதன் வளர்ச்சியை இரண்டு கால கட்டமாக பிரிக்கலாம். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி, மற்றும் இறுதிப்பகுதி என இரண்டு தலைமுறைகளை கண்டுள்ளது. முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் பின்தங்கிய பாலைவன நாடான சவூதி அரேபியாவில், மேற்கத்திய செல்வாக்கிற்கு உட்பட்ட எகிப்திலும் தோன்றியது. இவ்விரு மதவாத இயக்கங்களும் வெவேறு தளங்களில் தோன்றியிருந்ததுடன், சில கொள்கை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. சவூதி அரேபியாவில் “முஹமது பின் அப்துல் வஹாப்” இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் இருக்குமிடங்களுக்கு யாத்திரை சென்று வந்து, தனது கருத்துகளை நூலில் வடித்தார். அவரது ஆதரவாளர்கள் தம்மை “முவாஹிதூன்” என அழைத்துக் கொண்டனர். ஆனால் பிறர் அவர்களை “வஹாபிகள்”என அழைத்தனர்.

வகாபிகளைப் பொறுத்தவரை குர் ஆனில் எழுதி உள்ளவை மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கன. புனிதர்களை வழிபடும் தர்க்காகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
மெதினாவில் இறைத்தூதர் முகமதுவின் கல்லறை ஒன்று இருந்தது. மக்கள் வழிபடுகிறார்கள் என்று, அதைக் கூட சேதமாக்கினார்கள். அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவரான முஹமது இபுன் சவுத் தலைமையில் வஹாபிகள் இராணுவ பலத்தை கட்டி அமைத்தனர். ஆரம்பத்தில் சிறிய ஆயுதக் குழுவாக இருந்து, பின்னர் படை பலத்தை பெருக்கி, ரியாத், மெதீனா போன்ற நகரங்களை கைப்பற்றி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அது தான் சவூதி அரேபியா என்ற நவீன தேசம் தோன்றிய கதை. வஹாபி மதப்பிரிவின் தலைவனாக மட்டுமல்ல, அரசுத் தலைவனாகவும் மாறிய (அப்துல் அசீஸ் இபுன்) சவூத்தின் பெயர் அந்த புதிய நாட்டிற்கு சூட்டப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் முடிவில், அந்தப் பிராந்தியத்திற்கு வருகை தந்த இராணுவ பலம் மிக்க அந்நியர்களான பிரிட்டிஷாருடன் சில உடன்படிக்கைகள் போடப்பட்டன.

தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

(“போர்க்களமான புனித பூமி” தொடரின் இரண்டாம் பகுதி)

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலகில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது. போரில் பாதிக்கப்பட்ட பிரிட்டன் தனது காலனிகளை பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இதற்கிடையே அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகியிருந்தது. ஹிட்லரின் யூத மக்கள் படுகொலை, உலகம் முழுவதும் யூதர்களுக்கு சார்பான அனுதாப அலைகளை தோற்றிவித்தது. ஆரம்ப காலங்களில் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறியவர்கள், கிழக்கைரோப்பாவை சேர்ந்த சோஷலிச யூதர்களாக இருந்தனர். அவர்களால் இலகுவாக சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலின் நண்பனாக இருந்தது அமெரிக்கா அல்ல, சோவியத் யூனியன். இது இன்று பலருக்கு வியப்பளிக்கலாம்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் ஸ்டாலினின் கொள்கையின் கீழ் அந்த ஆதரவு வழங்கப்பட்டது. சோவியத் யூனியன் அன்று, அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் எதிரான சக்தியாக இஸ்ரேல் உருவாவதை விரும்பியது. ஆனால் அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இஸ்ரேலிய அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் உறவு கொண்டாடி, சோவியத் யூனியனுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்கா கூட ஆரம்பத்தில் எகிப்துடன் நல்லுறவைப் பேணவே விரும்பியது. ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினையில் இஸ்ரேலை விட சிறந்த அடியாள் கிடைக்க மாட்டான் எனக் கண்டு கொண்டது.

நாசிகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறவும், அங்கே இஸ்ரேல் அமைக்கவும் ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கியது. ஆரம்பத்தில் பாலஸ்தீன அரபுக்கள் கூட யூத மக்களும் அனுதாபத்துடன் நோக்கினார்கள். அதுவரை தாயகம் திரும்பும் யூதர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஐரோப்பிய அரசாங்கங்கள், இப்போது திடீர் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உதவியால் நாசிகளின் நரவேட்டைக்கு அகப்படாது தப்பிய யூதர்கள் கப்பல், கப்பலாக பாலஸ்தீனம் சென்று குடியேறினர். சிறிது சிறிதாக பாலஸ்தீன அரபுக்கள் என்ன நடக்கின்றது என உணர ஆரம்பித்தார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. மேற்கு பாலஸ்தீனத்தில் போதுமான அளவு யூதர்கள் குடியேறிய பின்பு, ஐ.நா.சபை பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தை இரு துண்டுகளாக்க தீர்மானித்தது. யூதர்கள் இந்த முடிவை வரவேற்றனர். இஸ்ரேலிய குடியரசு பிரகடனம் செய்தனர். மறுபக்கத்தில் அரபுக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. யுத்தம் மூண்டது. யூதர்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள், அவர்களின் வெற்றியை உறுதிப் படுத்தியது. பல கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அரபு மக்கள், அயல்நாடுகளில் அகதிகளாயினர்.

இந்தச் சமயத்தில், அன்றைய ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த துரோகம் பலர் அறியாதது. இந்த துரோகத்திற்கு பிராயச் சித்தமாக, பாலஸ்தீன அகதிகளுக்கு ஜோர்டானிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் அடித்து விரட்டப் பட்டன. மன்னருக்கு விசுவாசமான படைகள் பாலஸ்தீன எழுச்சியை அடக்கியதில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். இறுதியாக பாலஸ்தீன போராளிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் பலவீனமான லெபனான் நாட்டின் மீது படையெடுத்தது.

ஜோர்டானில் இருந்தது போலவே, லெபனானிலும் பாலஸ்தீன அகதி முகாம்கள் ஆயுதபாணி இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அத்தோடு இஸ்ரேலிய எல்லையோரம் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்த படியே இஸ்ரேலினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். போராளிகளின் செயல்கள் உள்ளூர் (லெபனான்) மக்களிடம் வெறுப்பை தோற்றுவித்தது. அதிலும் லெபனானிய கிறிஸ்தவர்கள் அளவுகடந்த வெறுப்பை காட்டினார்கள்.

THE LEGACY

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), இஸ்லாம் (ISLAM)

0

The foundation of this legacy was the astonishing achievements of Muslim scholars, scientists, craftsmen, and traders during the two hundred years or so that are called the Golden Age. During this period, from 750 to 950, the territory of the Muslim Empire encompassed present-day Iran, Syria, Iraq, Egypt, Palestine, North Africa, Spain, and parts of Turkey and drew to Baghdad peoples of all those lands in an unparalleled cross-fertilization of once isolated intellectual traditions.

Geographical unity, however, was but one factor. Another was the development of Arabic, by the ninth century, into the language of international scholarship as well as the language of the Divine Truth. This was one of the most significant events in the history of ideas.

A third important factor was the establishment in Baghdad of a paper mill. The introduction of paper, replacing parchment and papyrus, was a pivotal advance which had effects on education and scholarship as far reaching as the invention of printing in the fifteenth century. It made it possible to put books within the reach of everyone.

Unlike the Byzantines, with their suspicion of classical science and philosophy, the Muslims were enjoined by the Prophet to “seek learning as far as China” – as, eventually, they did. In the eighth century, however, they had a more convenient source: the works of Greek scientists stored in libraries in Constantinople and other centers of the Byzantine empire. In the ninth century the Caliph al-Mamun, son of the famous Harun al-Rashid, began to tap that invaluable source. With the approval of the Byzantine emperor, he dispatched scholars to select and bring back to Baghdad Greek scientific manuscripts for translation into Arabic at Bayt al-Hikmah, “the House of Wisdom.”

Bayt al-Hikmah was a remarkable assemblage of scholar-translators who undertook a Herculean task: to translate into Arabic all of what had survived of the philosophical and scientific tradition of the ancient world and incorporate it into the conceptual framework of Islam.

As the early scholars in the Islamic world agreed with Aristotle that mathematics was the basis of all science, the scholars of the House of Wisdom first focused on mathematics. Ishaq ibn Hunayn and Thabit ibn Qurrah, for example, prepared a critical edition of Euclid’s Elements, while other scholars translated a commentary on Euclid originally written by a mathematician and inventor from Egypt, and still others translated at least eleven major works by Archimedes, including a treatise on the construction of a water clock. Other translations included a book On mathematical theory by Nichomachus of Gerasa, and works by mathematicians like Theodosius of Tripoli, Apollonius Pergacus, Theon, and Menelaus, all basic to the great age of Islamic mathematical speculation that followed.

The first great advance on the inherited mathematical tradition was the introduction of “Arabic” numerals, which actually originated in India and which simplified calculation of all sorts and made possible the development of algebra. Muhammad ibn Musa al-Khwaraznli seems to have been the first to explore their use systematically, and wrote the famous Kitab al-Jabr wa-l-Muqabalah, the first book on algebra, a name derived from the second word in his title. One of the basic meanings of jabr in Arabic is “bonesetting,” and al-Khwarazmi used it as a graphic description of one of the two operations he uses for the solution of quadratic equations.

The scholars at Bayt al-Hikmah also contributed to geometry, a study recommended by Ibn Khaldun, the great North African historian, because “it enlightens the intelligence of the man who cultivates it and gives him the habit of thinking exactly.” The men most responsible for encouraging the study of geometry were the sons of Musa ibn Shakir, al-Mamurl’s court astronomer. Called Banu Musa – “the sons of Musa” – these three men, Muhammad, Ahmad, and al-Hasan, devoted their lives and fortunes to the quest for knowledge. They not only sponsored translations of Greek works, but wrote a series of important original studies of their own, one bearing the impressive title The Measurement of the Sphere, Trisection of the Angle, and Determination of Two Mean Proportionals to Form a Single Division between Two Given Quantities.

The Banu Musa also contributed works on celestial mechanics and the atom, helped with such practical projects as canal construction, and in addition recruited one of the greatest of the ninth-century scholars, Thabit ibn Qurrah.

During a trip to Byzantium in search of manuscripts, Muhammad ibn Musa happened to meet Thabit ibn Qurrah, then a money changer but also a scholar in Syriac, Greek, and Arabic. Impressed by Thabit’s learning, Muhammad personally presented him to the caliph, who was in turn so impressed that he appointed Thabit court astrologer. As Thabit’s knowledge of Greek and Syriac was unrivaled, he contributed enormously to the translation of Greek scientific writing and also produced some seventy original works – in mathematics, astronomy, astrology, ethics, mechanics, music, medicine, physics, philosophy, and the construction of scientific instruments.

Although the House of Wisdom originally concentrated on mathematics, it did not exclude other subjects. One of its most famous scholars was Hunayn ibn Ishaq, Ishaq’s father – known to the West as Joanitius – who eventually translated the entire canon of Greek medical works into Arabic, including the Hippocratic oath. Later a director of the House of Wisdom, Hunayn also wrote at least twenty-nine original treatises of his own on medical topics, and a collection of ten essays on ophthalmology which covered, in systematic fashion, the anatomy and physiology of the eye and the treatment of various diseases which afflict vision. The first known medical work to include anatomical drawings, the book was translated into Latin and for centuries was the authoritative treatment of the subject in both Western and Eastern universities.

Others prominent in Islamic medicine were Yuhanna ibn Masawayh, a specialist in gynecology and the famous Abu Bakr Muhammad ibn Zakariya al-Razi – known to the West as Rhazes. According to a bibliography of his writings al-Razi wrote 184 works, including a huge compendium of his experiments, observations, and diagnoses with the title al-Hawi, “The All-Encompassing.”

A fountainhead of medical wisdom during the Islamic era, al-Razi, according to one contemporary account, was also a fine teacher and a compassionate physician, who brought rations to the poor and provided nursing for them. He was also a man devoted to common sense, as the titles of two of his works suggest. The Reason Why Some Persons and the Common People Leave a Physician Even If He Is Clever, and A Clever Physician Does Not Have the Power to Heal All Diseases, for That is Not within the Realm of Possibility.

The scholars at the House of Wisdom, unlike their modern counterparts, did not “specialize.” Al-Razi, for example, was a philosopher and a mathematician as well as a physician and al-Kindi, the first Muslim philosopher to use Aristotelian logic to support Islamic dogma, also wrote on logic, philosophy, geometry, calculation, arithmetic, music, and astronomy. Among his works were such titles as An Introduction to the Art of Music, The Reason Why Rain Rarely Falls in Certain Places, The Cause of Vertigo, and Crossbreeding the Dove.

How did Islamic fiqh (jurisprudence) develop

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), இஸ்லாம் (ISLAM)

0

by Halimah bint David

Bismillaah

Author: ‘Umar ibn Sulaymaan al-Ashqar

Praise be to Allaah.
During the lifetime of the Prophet (peace and blessings of Allaah be upon him) the Muslims used to receive the rulings of Islam directly from him. The Qur’aan came down as a teacher, guide and mufti, as Allaah said (interpretation of the meaning):

“They ask you for a legal verdict. Say: “Allaah directs (thus) about Al-Kalaalah (those who leave neither descendants nor ascendants as heirs)…”[al-Nisa’ 4:176]

And it came to explain matters concerning which the Prophet (peace and blessings of Allaah be upon him) and his companions were uncertain, as in the story of the woman who asked the Prophet (peace and blessings of Allaah be upon him) about her husband’s divorcing her by zihaar (a jaahili form of divorce in which the husband says to his wife, “You are to me as my mother’s back”), as a result of which the first verses of Soorat al-Mujaadilah were revealed.

The Prophet (peace and blessings of Allaah be upon him) used to send some of his companions to teach the new Muslims how to worship and to give them legal rulings (fatwa). The Prophet (peace and blessings of Allaah be upon him) used to allow them a certain amount of room in understanding the texts of sharee’ah, then he would approve of their interpretation or correct them. At the time of the Prophet (peace and blessings of Allaah be upon him) a number of the Sahaabah used to issue fatwas (legal rulings). Some of the scholars said that they numbered fourteen, but in fact there were more than that. The Prophet (peace and blessings of Allaah be upon him) was the imaam (leader) and teacher of mankind and at that time people spoke proper Arabic so whatever variations in interpretation there were, were few and minor. So the death of the Prophet (peace and blessings of Allaah be upon him) was counted as a great loss to the ummah, because they lost their leader, guide and perfect example.

It was narrated that Anas ibn Maalik said: “After the death of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him), Abu Bakr said to ‘Umar, ‘Let us go to Umm Ayman and visit her as the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to do. When they came to her, she wept, and they said to her, ‘Why are you weeping? What is with Allaah is better for His Messenger (peace and blessings of Allaah be upon him).’ She said, ‘I am not weeping because I do not know that what is with Allaah is better for His Messenger (peace and blessings of Allaah be upon him); rather I am weeping because the revelation from heaven has come to an end.’ She moved them to tears and they started weeping with her.” (Narrated by Muslim, 2454). But the Prophet (peace and blessings of Allaah be upon him) did not die until after the religion had been completed.

One of the characteristics of this religion, which was perfected during the time of the Prophet (peace and blessings of Allaah be upon him), was that it includes features which qualify it to remain and continue until the end of time.

Therefore this religion and understanding of it remained after the death of the Prophet (peace and blessings of Allaah be upon him) and it will abide until the Day of Resurrection. After the death of the Prophet (peace and blessings of Allaah be upon him), the people followed his guidance and the guidance of the Rightly-Guided khaleefahs who followed him. Abu Bakr (may Allaah be pleased with him) used to judge amongst them and issue fatwas to them based on what he found in the Qur’aan and hadeeth. If he could not find an answer, he would go out and ask the Muslims, saying, “Such and such an issue has been referred to me, do you know whether the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) passed a judgement concerning such a matter?” Then perhaps a group of them would come to him, all of them saying that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) had passed a judgement on it. Then Abu Bakr would say, “Praise be to Allaah Who has caused there to be among us those who memorized things from our Prophet.” And if he was unable to find any Sunnah narrated from the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him), he would gather the leaders of the people and the best among them and if they agreed on something he would pass judgement according to that.

‘Umar (may Allaah be pleased with him) did the same after Abu Bakr had died.

விவாகம் ரத்து

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

பெற்றோர்களே பெற்றோர்களே
நீங்கள் பெற்றபிள்ளைகளின்
மனக்குமுறலைக்கேளுங்கள்

உங்களின் வீண்பிடிவாதத்தாலும்
வரட்டு கவுரவத்தாலும் பாதிக்கப்படுவது
நீங்களில்லை நாங்கள்

உங்களுக்குள் நீங்கள் விட்டுக் கொடுத்து
வாழத்தவறுவதால் எங்களின் வாழ்க்கை
அனைத்தும் பட்டுபோகிறது

வாக்குவாதங்கள் எல்லை மீறிவிடுதால்
குடும்பம் கோர்ட்டுக்குபோகிறது
வீண்விவாதங்கள் ரத்தாகாததால்

விவாகம் ரத்தாகிறது
கும்மியடித்த குதுகலத்திற்கு நடுவே
கோடு ஒன்று கிழிக்கப்பட்டு
இப்புறம் பத்துநாள் அப்புறம் பத்துநாள் -என
நாங்கள் பந்ததாடப்படுகிறோம்
உங்களின் வாழ்வைகண்டு கண்டு

எங்களுக்கு வாழ்க்கையின்மேலேயே
பயம்கலந்த வெருப்புவருகிறது

உதாரணமாய் இருக்கவேண்டிய நீங்களே
இப்படி உருப்படியில்லாமல் நடந்தால்
எங்களின் நிலைமை என்னவாகும்
விட்டுகொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை
யாசித்துக்கேட்க்கிறோம் யோசித்துப்பாருங்கள்
ஒற்றுமையாய் இருந்து உணர்ந்துபாருங்கள்
எங்களையும் இணைத்து மகிழ்ச்சியாய் வாழுங்கள்…

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்
நன்றி http://niroodai.blogspot.com

Only in Vietnam

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : English(ARTICLES), country

0

From : mujeeb rahman

உலகப்பொருட்காட்சிப் பூங்காவிலுள்ள கட்டிட்டங்கள்

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ஷாங்காய் உலகப்பொருட்காட்சி பூங்காவில் ஐந்து நிரந்தர கட்டிடங்கள் இருக்கின்றன. இப்பூங்காவின் நடுப்பகுதியில் குறுக்கே நீண்டு அமைந்த கட்டிடம், குறிப்பிடத்தக்கது. வணிகச் சேவை, உணவுத் துறை, பொழுதுபோக்கு, கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கான சேவை முதலிய வசதிகளைக் கொண்ட ஒரு பெரிய ரக வணிக மற்றும் போக்குவரத்து ஒட்டுமொத்த கட்டிடமாகும்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் துணைத் தலைவர் ஹுவாங் சியன் ச்சி, அறிமுகப்படுத்தியதாவது:
சூரிய ஒளி பள்ளத்தாக்கு என்ற தொழில் நுட்பம், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம், சூரிய ஒளியைக் கொண்டு, தரைக்கடியிலான இரண்டு அடுக்குப்பகுதிகளில், ஒளியூட்டலாம் என்று, அவர் குறிப்பிட்டார்.
ஐந்து நிரந்தர கட்டிடங்களில், கலை நிகழ்ச்சி அரங்கம் கலை பாணி மிக்கது. வழிகாட்டி சாங் சீ அம்மையார் கூறியதாவது:

இரவில், இவ்வரங்கத்தைப் பார்த்தால், ஒளி நிறைந்த சிப்பியைப் போன்று மிகவும் அழகானது. ரசிகர்களின் எண்ணிக்கையின் படி, இருக்கையின் எண்ணிக்கையைச் சரிப்படுத்தலாம். 4000 முதல் 18000 வரையான ரசிகர்கள் இங்கு ஒரே நேரத்தில் கலைநிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கலாம்.
தவிர, நடப்பு உலகப்பொருட்காட்சியில், தலைமை அகம் அமைக்கப்பட்டது. நகரம், மனித குலம், உயிர், கிரகம் மற்றும் எதிர்காலத்துக்கிடையிலான உறவு பற்றி இதில் விவாதிக்கப்படும். அதன் இரண்டு காட்சியறைகளில், எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கருத்துகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

அன்னிய தொழில் நிறுவனங்களின் உற்சாகமான முதலீடு

Posted on : 30-12-2009 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

2008ம் ஆண்டு மே திங்கள் 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச் சுவானில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தில், பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஏற்பட்டன. கடந்த ஓர் ஆண்டில், சிச்சுவான் மாநிலத்திலுள்ள பல்வேறு நிலை அரசுத் துறைகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கு, நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்து விரைவாக விடுபட உதவியளிக்கின்றன.

சிச்சுவான் மாநிலத்திலுள்ள cheng du நகரில் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசம், சீனாவிலுள்ள தேசிய நிலை புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும். அதுவும், சிச்சுவான் மாநிலத்தில் அன்னிய தொழில் நிறுவனங்கள், அதிகமாகவுள்ள இடமாகும். அமெரிக்காவின் Motorola, ஜெர்மனியின் Siemens, ஜப்பானின் Sumitomo முதலிய 400க்கு அதிகமான புகழ் பெற்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், இங்கு அமைந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், cheng du புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசத்தில் Ericsson தொழில் நிறுவனம், தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவியது. Ericsson தொழில் நிறுவனத்தின் தலைவர் kong xian dong கூறியதாவது

2004ம் ஆண்டு, தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை Ericsson தொழில் நிறுவனம் இங்கே நிறுவியது. உள்ளூர் அரசு இதற்கு பேராதரவு வழங்கியது. இங்கு, உயர் கல்வியறிவை கொண்ட பணியாளர்களை பணிக்கமர்த்த முடிகிறது. ஏனென்றால், இங்கு, சிச்சுவான் பல்கலைக்கழகமும், cheng du மின்னணு மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும் உள்ளன. தவிர, ஷாங்காய், பெய்ஜிங் முதலிய சீனாவிலுள்ள பிற மாநகரங்களை விட, cheng duவில் முதலீட்டுச் செலவு, குறைவாக இருக்கின்றது. எனவே cheng duஇல் எமது ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவினோம்.

Ericsson தொழில் நிறுவனம் போல, வேறு பல தொழில் நிறுவனங்களும், chen duஇன் சிறப்பான முதலீட்டுச் சுற்றுச்சூழலை தேர்ந்தெடுந்துள்ளன. அவை, chen du நகரில் முதலீடு செய்து, தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன. Chen du yu bi கணினி மென்பொருள் கூட்டு நிறுவனத்தின் தலைவர் cao jian wei கூறியதாவது

சிறப்பான அடிப்படை வசதி, chen duஐ நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு மே திங்கள் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போதும், அதற்கு பிறகும் தொடர்ந்து பணி செய்து இருந்தோம். அலுவலகத்தின் மின்சார வினியோகமும் இணையமும் இயல்பாக இருந்தன. Chen duஇல் முதலீடு செய்வது, சரியான தெரிவாகும். ஏனென்றால், இங்கு, சிறப்பான அடிப்படை வசதிகள் உள்ளன. அத்துடன், இது, பாதுகாப்பான இடமாகும்.

சிச்சுவானிலுள்ள பல்வேறு அரசுகளின் முயற்சியால், கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு, அன்னியத் தொழில் நிறுவனங்கள், சிச்சுவானில் தொடர்ந்து செயல்பட்டு இடைவிடாமல் முதலீடு செய்து வருகின்றன.

உள்ளூரின் பல்வேறு நிலை அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு, நிலநடுக்கத்தின் பாதிப்பை தணிவித்தன. அன்னிய வணிகர்களின் முதலீட்டு நம்பிக்கையை வலுப்படுத்துவது, நிலநடுக்கத்துக்கு பிறகான மறுசீரமைப்பில் அவற்றின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு, அன்னிய தொழில் நிறுவனங்களுக்கான நிலநடுக்கத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணியையும், உற்பத்தியை மீட்கும் பணியையும் சிச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறை, உடனடியாக துவங்கியது. சிச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறையின் அதிகாரி shi zheng hua கூறியதாவது

2009ம் ஆண்டின் முதல் காலாண்டில், சிச்சுவான் மாநிலத்தில் முதலீட்டுத் தொகை ஒரு கோடி அமெரிக்க டாலரை தாண்டிய அன்னிய மூதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 15 ஆகும். 7 அன்னியத் தொழில் நிறுவனங்களும், அதன் முதலீ்ட்டுத் தொகையை அதிகரித்துள்ளன.

இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில், சிச்சுவானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 பிரதேசங்களில் அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்து 323ஐ எட்டியுள்ளன. இது நிலநடுக்கத்துக்கு முன், அதே இருந்ததை விட 174 அதிகரித்துள்ளது. சிச்சுவானில் அன்னியத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை, 4 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

சிச்சுவான் மாநிலத்தின் தொழில் மற்றும் வணிகத் துறையின் துணைத் தலைவர் huang jun கூறியதாவது

நிலநடுக்கத்துக்கு பிறகு, பொதுவாக, அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, chen du நகரில் இது அதிகம். 2008ம் ஆண்டு மே திங்கள் முதல் 2009ம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, chen du நகரில், புதிதாக பதிவாகியுள்ள அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 166ஐ எட்டியுள்ளது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிற பிரதேசங்களில் புதிய அன்னிய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இப்பிரதேசங்களில் அந்நிய வணிகர்களின் முதலீட்டு உற்சாகம், தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

Source: http://tamil.cri.cn