இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
பயோ டேட்டா
வம்சம் : வாஞ்சூர். தந்தை : வாஞ்சூர் முஹம்மது;
தாயார் : பாத்துமுத்து. பிறப்பு : 1914
கல்வி : பர்மா ரங்கூனில். பாசைகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், மலாய்
தொழில்: தோல் பொருள் தயாரித்தல், விவசாயம், மிளகாய் கமிசன் மண்டி. மின்சார நுனுக்க பொருட்கள், மின்சார சாதனங்கள், சிஙகப்பூரில் பிரிட்டிஷ் ரானூவத்தினர்க்கு சப்ளை கண்ட்ராக்டர்.
பதவிகள்: ஐ.ஏன்.பி. பள்ளிவாசல் டிரஸ்டி, தர்ம ஸ்தாபனங்களில், அரசாங்க ஆலோசணை குழுக்களில், கல்வி ஸ்தாபனங்களில் அங்கத்தினர்.
சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவர். கல்லூரியின் முதன் முதல் தாளாளர்.
மரணம்: 26.03.1987
அரசியல்: பர்மா ரங்கூனில் அல்லாமா கரீம் கனி அவர்களுடைய அமைப்புகளில் தொண்டூழியம் செய்தவர். இளையாங்குடியில் இந்திரா காங்கிரசை தோற்றுவித்து அதன் தலைவராக செயலாற்றி அன்னை இந்திரா காந்தியிடமிருந்து பாராட்டு பெற்றவர். இளையாங்குடிக்கு வருகை தரும் தலைவர்களுக்கு தன் வீட்டில் விருந்தளித்து உபசரித்தவர்
வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற பெயர் எல்லா சமூகத்தினரிடையும் இளையாங்குடியில் மட்டுமன்றி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் எதிரொலித்து வந்த ஒரு பெயராக இருந்து வந்தது.
சிவந்த மேனி, சதா சிரித்த அழகிய முகம், பேச ஆரம்பித்தால் ஒட்டு மொத்த சபையையே கவரும் நாவண்மை.. அஞ்சா நெஞ்சர். தேவை ஏற்பட்டால் சீறும் சிங்கம் போன்ற தன் கண் பார்வையினால் அடிக்காமலே அடக்கும் திறன். ஊர் மக்கள் அனைவரும் குறிப்பாக பெண்களும் கல்வியில் திறன் பெற வேண்டும் எனத்தாங்கொனா தாகம். கடுமையான அயராத உழைப்பாளி.
“வாருங்கள் வாஞ்ஜூர் பீர் முஹம்மதிடம் முடிவு கேட்போம்” என்று உள்ளூரிலும் சுற்று வட்டங்களிலும் எந்த சிக்கலான பிரச்ச்சினைகளிலும் நியாயமான நல்லதொரு முடிவை பெற அணுகப்பட்டவர்.
பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.
தன் பெண்களுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ‘ என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்” பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்” என முகத்திலடித்தாற்போல் கூறியவர். அத்துடன் சீதனம் கொடுக்கபடும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊரார் பலரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்
நியாயத்தை நிலை நிறுத்த போராடும் பொழுது வரும் பகை, துன்பம், இழப்பு அவதூறு, உடன் இருந்தவர்கள்/இருப்பவர்களின் துரோகம் இவைகளை சிறிதும் சட்டை செய்யாமல் தாங்கிக்கொண்டு தனித்து தனி மரமாக கடைசி வரை போராடி வாகை சூடியவர்.
இக்கொள்கயினால் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் அவர் மீது பகை வளர்த்து வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.
நிறைய தருவதாக வாக்களித்துவிட்டு இறுதியில் அறவே இல்லாமலோ அல்லாது குறைத்தே நிறைவேற்றும் பழக்கத்தை கைக்கொள்ளாது வாக்களித்தற்கு மேலாகவே எதையும் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் நிறைவேற்றி கொடுப்பவர். கொடையாளி.
39 ஆண்டுகளுக்கு முன் இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகிய காலத்தே அதை செயல் படுத்த பல வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் கூடி வராத நிலையில்,
அடுத்தவர்களின் முதுகில் சவாரி செய்யாதவராக, வெறும் நாற்காலி மாப்பிள்ளையாக இல்லாமல் இளையாங்குடியில் ஓர் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அச்சாணியாக நின்று அதை செயல் வீராராக பொருளும் உழைப்பையும் தந்து நிறைவேற்றிக் கொடுத்த மாமனிதர்.
அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்த பொழுது சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு ” வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி ” என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டவர்.
அவர் மட்டும் விரும்பியிருந்தால் “ஜாகிர் உசேன் கல்லூரி” என்றில்லாமல் “வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி” என பெயரிடப்பட்டிருக்கும்
அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து
அன்றைய மாநில கவர்னரை அழைத்து அடிக்கல் நாட்டி, தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக
யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து
1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் திறப்பு செய்து அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு அதனை கொண்டே இளையாங்குடி சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.


இரா. நெடுஞ்செழியன் அவர்களால் “கண்டத்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்” ஒரு வாஞ்ஜூர் பீர் முஹம்மது போன்றவர்கள் இருந்தால் உலகில் கல்விக்கு பஞ்சமேயில்லை என புகழாரம் சூட்டப்பட்டு,
முதல் தாளாளராக அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தலைமையில் கல்லூரி நிர்வாகம் தொடங்கியது
அப்பொழுது சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்த கேப்டன் அமீர் அலியை கல்லூரி முதல்வராகவும், மற்றும் பாதுஷா உஸ்மான், கமாலுதீன், ராஜ சேகரன் ஆகிய விரிவுரையாளர்களையும் கொண்ட திறமை மிக்க ஆசிரியர் குழுவை அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நியமித்து கல்லூரியை செயல்படுத்தினார்கள்.
நன்றி மிகுதியால் கல்லூரி முதல்வர் அமீர் அலி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் குடும்ப போட்டோவை தன் முதல்வர் அறையிலேயே தன் பதவிக்காலம் வரை மாட்டி வைத்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் சாகிர் உசேன் கல்லூரி செயல் பட தொடங்கியது.
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.



அன்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நம் இளையாங்குடியில் கல்விக்காக விதைத்த “விதை ” எல்லாம் வல்ல இறையவனின் நல்லருளால் ஆழமாக வேறூன்றி வளர்ச்சி அடைந்து கொண்டே வருவதுடன் இன்றைய இளம் அறிவாளிகளை பல துறைகளிலும் உருவாக்கிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
கல்லூரி திறப்பு விழாவின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் உருவம் அகற்றப்பட்டு பதிலாக பிற நாற்காலி மாப்பிள்ளைகள் உருவப்படங்கள் இணைக்கப்பட்டு கல்லூரி மலர்களில் பிரசுரித்த அறிவு ஜீவிகள், அதை அறிந்தும் அறியாதவர்கள் செயல் பட்ட நிர்வாக செயல் வீரர்கள்!!!
இன்றுவரை திருத்துவதற்கு யாரும் திருந்தவில்லையா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இதிலிருந்தே இளையாங்குடிக்கு அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது செய்ததெற்கெல்லாம் இளையாங்குடி செய்ததென்ன? செய்து வருவதென்ன? மீதியை நீங்களே விளங்கிக்கொள்ளுங்கள் .
யா அல்லாஹ் சகலத்தையும் பார்த்தும் ,கேட்டும், மறைவானவைகளை அறிந்தும் கொண்டிருப்பவனே. உன்னிடமே இதை விட்டு விடுகிறோம்.
இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கு இடம் கிட்டாமல் இருப்பதை இளையாங்குடி முஸ்லீம் கல்வி டிரஸ்டின் தலைவர் புதுக்குளத்தார் ஜனாப் இபுறாஹிம் அலி அவர்கள், பொருளாளர் ஜனாப் இபுறாஹிம்ஷா அம்பலம் அவர்கள் மூலமாக அறிந்து அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நிதி உதவு அளித்ததுடன் பள்ளிக்காண கட்டிடம் கட்டி முடியும் வரை தன்னுடய சொந்த கட்டிடத்தை இலவசமாக பள்ளி நடத்திக் கொள்ள அளித்தார்கள்.
இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது க்கு சொந்தமான 65 சுல்தான் அலாவுதீன் தெருவிலுள்ள கட்டிடத்திலேயே தொடங்கப்பட்டது.
பின் அப்பள்ளி மறைந்த ஹாஜி T.K . ஹமீது சுல்தான் அவர்களின் தாயாரின் நினைவு கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்தது.
இளையாங்குடியில் 1914 ல் உதித்து, சுய தொழில்களை செய்து வந்தார் .
அப்பொழுதே பணமே குறி என்று இருக்காமல் பொது சேவையிலும் நாட்டமும் ஆர்வமும் உள்ளவராக இருந்தபடியால் அப்பொழுது ரங்கூனில் இருந்த “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு
அவருடைய இயக்கங்களில் தன்னுடைய ஒய்வு நேரங்களை பயன்படுத்திக் கொண்டு, “இனி வரும் காலங்களில் பர்மாவில் வெளி நாட்டவர்கள் யாவரும் துன்பத்திற்கே ஆளாவார்கள் ஆதலால் தென் கிழக்காசியா (சிங்கப்பூர் மலேயா) சென்று தொழில் செய்யுங்கள்” என்ற “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களின் கூற்றை மனதில் பதித்துக் கொண்டார்.
தோல் பை தயாரிக்கும் தொழில் இளையாங்குடியில் தொடங்கி அல்லாமா அறிஞர் கரீம் கனி அவர்கள் தென் கிழக்காசியாவுக்கு சென்று தொழில் செய் என்று கூறியிருந்தபடி 1939ல் இரண்டாம் உலகப் போருக்கு முன் சிஙகப்பூருக்கு வந்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் வேலையில் யுத்தம் மேகம் சூழ்ந்தபடியால்
பெங்களூரில் தொழில் தொடங்கி பின் சென்னையில் ஜூபிடர் லெதர் வொர்க்ஸ் ,7 முத்துமாரி செட்டி தெரு , மற்றும் 154 அங்கப்ப நாயக்கன் தெருவில் ஜூபிடர் லாட்ஜ், என்ற பயணியர் தங்கும் விடுதியையும் தொடங்கி வரும் காலத்தே மீண்டும் அறிஞர் கறீம் கனி அவர்களின் கூற்று படியே மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பி தோல் பை வியாபரத்தை PEER LITTLES என்ற பெயரில் தொடங்கி இறையவனின் அருளால் பெரும் செல்வந்தரானார்.
சிங்கப்பூரில் முதலில் சொந்த தொழில் ஆரம்பித்த, சிங்கப்பூரில் முதலில் குடும்பத்துடன் வசித்த இளையாங்குடியார் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது
சிங்கப்பூரில் 1954ல் பேன்ஸி ஸ்டோர் வியாபரத்தையும் தொடங்கி பின் அத்துடன் எலக்ட்ரிகல் வியாபாரத்தையும் இணைத்து விரிவாக்கி 1974 வரை பிரிட்டீஷ் முப்படை ராணுவத்தினர்க்கு எலக்ட்ரிகல் குட்ஸ் சப்ளை கண்ட்ராட்ராக.
V.M.PEER MOHAMED = “ YOU NAME IT WE GOT IT
என்ற சிறப்புடன் சிங்கப்பூரில் தொழில் செய்து ஆங்கிலேயர்களிடம் இங்கிலாந்து வரை V.M.PEER MOHAMED என்ற பெயரை எட்ட வைத்தவர்.
சிங்கப்பூரின் அதி உச்ச நீதி மன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்காத ஒரு வழக்கை பிரிட்டனுக்கும் அனைத்து காமன்வெல்த் நாடுகளின் உச்ச நீதி மன்றங்களுக்கும் உச்சமான லண்டணில் உள்ள பிரீவி கவுன்சிலுக்கு (PRIVY COUNCIL) எடுத்து சென்று தனக்கு சார்பான தீர்ப்பு பெற்று சாதனை படைத்த ஒரே இளையாங்குடியர்.
பிள்ளைகளை தொழிலில் நன்கு பழக்கப்படுத்திவிட்டவராக 1962 க்கு இளையாங்குடியில் விவசாயத்தை கவனித்துக் கொண்டும், மிளகாய் கமிஷன் மண்டி நடத்திக் கொண்டும் ஊர் நலனில் முழு சிரத்தை எடுத்து செயலாற்றி வந்தார்.
இளையாங்குடியிலேயே விவசாயத்திற்கு வருமான வரி கட்டியவர்கள் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மதுவும் , தூங்காலயன் சிக்கந்தர் அவர்களும் அண்ணாமலை அவர்களும் செட்டியார் தான்.
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே அரியாண்டிபுரத்தில் 1 ஏக்கருக்கு ஐ.ஆர்.8 சம்பை நெல் சாகுபடியை அதிகமாக உற்பத்தி செய்து காட்டி 1969 அரசாங்க கெஜட்டில் இடம் பெற்றவர்.
அரியாண்டிபுரத்தில் தனக்கு சொந்தமான 2.ஏக்கர் 70 சென்ட் நஞ்சை நிலத்தை அப்பகுதி தாழ்த்தப்ப்ட்ட ஹரிஜனங்களுக்கு அவர்கள் குடியிருப்புக்காக இனாமாக சாசனம் செய்து கொடுத்துவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடி வட்டத்தில் மல்பெரி செடி வளர்த்து அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து சென்னை அகில இந்திய வானெலியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பேட்டி காணப்பெற்றவர்.
இளையாங்குடியில் 1971 ல் முதன் முதலாக இந்திரா காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து இந்திரா காந்தியிடமிருந்து கடித வாயிலாக அங்கீகாரம் பெற்றவர்.