Featured Posts

  • Prev
  • Next

பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் 6 வயது சிறுமி அலிஷா

Posted on : 30-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

by எம்.ரிஷான் ஷெரீப்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை, அமெரிக்க அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது.

இந்த சிறுமி, விமானத்தில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிப்பவர் டாக்டர் சந்தோஷ் தாமஸ். இவரது ஆறு வயது மகள் அலிஷா. தாமஸ், சமீபத்தில் தனது மகளுடன் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றார்.

அங்கிருந்த டிராவல் ஏஜன்ட் அலிஷாவுக்கு விமான டிக்கெட் வழங்க மறுத்து விட்டார்.சிறுமி அலிஷாவின் பெயரை பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்க அரசு சேர்த்துள்ளதாகவும், அலிஷா விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தாமஸ், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார். இதையடுத்து, இந்த பயங்கரவாத பட்டியலை தயாரித்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையை அணுகி, விளக்கம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை அதிகாரிகள், சிறுமியின் பெயர் பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்றது உண்மை தான் என, ஒப்புக் கொண்டதோடு, இந்த பட்டியலில் இருந்து அலிஷாவின் பெயரை நீக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாமஸ் கூறுகையில்,”ஆறு வயது சிறுமி யாரை அச்சுறுத்த முடியும். வேண்டுமானால், தனது சகோதரியை அச்சுறுத்தலாம். அமெரிக்க அரசை அச்சுறுத்த முடியுமா” என்றார்.

இந்நிலையில், அலிஷா விமானத்தில் செல்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு முறை விமானத்தில் செல்லும் போதும், கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே அவருக்கு அனுமதி அளிக்கப்படும்.

சிறுமியின் பெயர், பயங்கரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் என்ன காரணத்துக்காக சேர்க்கப் பட்டது என்பது தொடர்பான விவரங்களை அமெரிக்க அரசு தெரிவிக்கவில்லை.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/06/6.html

உறங்க விரும்பாத குழந்தைகள் உறங்குவதற்கு எனது உரையே மருந்து – ஜனாதிபதி

Posted on : 29-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

இரவு வேளையில் உறங்க விரும்பாத குழந்தைகளை உறங்கச் செய்வதற்கு, அவர்களை தனது தொலைக்காட்சி உரைகளை பார்க்கச் செய்வதே சிறந்த மருந்தென வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் அந்நாட்டு தாய்மாருக்குத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு ஓவியப் படங்களைப் போட்டுக் காட்டுவதற்கு பதிலாக எனது உரையைக் காண்பிப்பது பயன் தருவதாக அமையும் எனத் தெரிவித்த ஹுகோ சாவேஸ், தான் பேசப் பேச குழந்தை மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் என்று கூறினார்.

பல மணிநேரம் உரையாற்றுவதில் புகழ்பெற்றவர் ஹுகோ சாவேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கேற்கும் “ஹலோ பிரஸிடன்ட்” தொலைக்காட்சி நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஆரம்பமாகி நாள் முழுவதும் நீடிப்பது வழமையாக உள்ளது.


Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/06/blog-post_29.html

கொஞ்சுவது சினம்…

Posted on : 28-06-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

நவீன் ப்ரகாஷ்

Image Hosted by  ImageShack.us

உன்
கோபத்தைவிட
உன்
கண்ணீர்துளிகள்தாம்
என்னை
அதிகம்
காயப்படுத்துகின்றன
தெரியுமா ?

Image Hosted by ImageShack.us

கோபமாக திட்டுவதாக
நினைத்துக்கொண்டு
நீ செய்யும்
அழிச்சாட்டியங்களை
எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?

Image Hosted by ImageShack.us

நீ
கோபப்பட்டால்
கொஞ்சத்தான்
தோன்றுகிறது
ஆனாலும்
கெஞ்சுவதுபோல்
நடிக்கிறேன்
தெரியுமா ?

Image Hosted by ImageShack.us

நீ
கோபப்பட்டால்
அழகாய் இருக்கிறாய்
என சொன்னதற்காக
இப்படி அடிக்கடி
கோபப்பட்டால்
எப்படி?

செம்மொழிப் பாடல் !!!

Posted on : 26-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

செம்மொழிப் பாடல் !!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

செம்மொழியான – தமிழ் மொழியாம்!
செம்மொழியான – தமிழ் மொழியாம்!

செம்மொழியான – தமிழ் மொழியாம்!
செம்மொழியான – தமிழ் மொழியாம்!

பிரபல இஸ்லாமிய பிரசாரகர் பிலால் பிலிப்ஸுக்கும் லண்டனில் நுழைய தடை

Posted on : 26-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

லண்டன் : உலக அமைதிக்காக பிரபல இந்திய இஸ்லாமிய பிராசரகர் ஜாகிர் நாயக் வருடந்தோறும் பீஸ் எனும் பெயரில் கருத்தரங்கத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு மாநாடு கடந்த வாரம் லண்டனில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு தடை விதித்திருந்ததை ஏற்கனவே இந்நேரத்தில் வெளியிட்டிருந்தோம்.

தற்போது அக்கருத்தரங்குக்கு வருகை தரவிருந்த பல இஸ்லாமிய பிராசரகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து அரீப் இஸ்லாம் எனும் பிரசாரகருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது போல் கனடாவை சேர்ந்த தற்போது கத்தாரில் வசிக்கும் பிரபல இஸ்லாமிய பிராசரகரான பிலால் பிலிப்ஸூம் லண்டன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக்குக்காவது வருவதற்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தான் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கியதாகவும் பின் காலை 11 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் தங்களின் அமைதிக்கான மாநாட்டை தடை செய்வதன் மூலம் அவ்வெற்றிடத்தை தீவிர போக்குடையவர்கள் ஆக்கிரமிப்பதிற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

தங்கள் கால்களை தாங்களே சுட்டு கொள்வதாக சொன்ன பிலால் பிலிப்ஸ் ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே என்றும் இவர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூரணமாக்கி வைப்பான் என்றும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இணைய தள நிபுணர் கூகுள் தேடலில் ஜாகிர் நாயக் மற்றும் பீஸ் மாநாடு அதிகம் பார்க்கப்படுவதற்கும் இஸ்லாத்தை குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரிப்பதற்குமே இது உதவும் என்று கூறினார்.

Source : http://www.inneram.com/201006269025/uk-refuses-entry-to-another-islamic-scholor

தமிழே உலகின் முதல் மொழி : கருணாநிதி!

Posted on : 24-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

Tags: , , , , , , , , , ,

0

தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை வருமாறு:

உலகச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது” வழங்கி விழாப் பேரூரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் அவர்களே, தடைக்கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றை யெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தமிழகத்தின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும்- பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க, வருகை தந்திருக்கும், தமிழ்நாடு ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர் களே!

தமிழக அரசின் நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கே வருகை தந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே!

கோவையில் நடைபெறு கின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக் கத்தையும் உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி தீரத்தின் நெற் களஞ்சியமாம், தஞ்சை தரணியிலே, கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும், மிகுந்த முத்துவேலருக்கும், அஞ்சுகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து, 14 வயதினிலே, “வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே எனும் அணிவகுப்புப் பாடல் இயற்றி தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி, அதே வயதில் “திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது. பெரும் பாலான திராவிடர் வீறு கொண்டெழுந்து விட்டனர்.

நாட்டைக் காப்பாற்றவும் கலை நாகரீகத்தைக் காக்கவும் கச்சை கட்டி விட்டனர்” என்ற முன்னுரையோடு “செல்வ சந்திரா” என்ற நாடகத்தை எழுதி, 17 வயதில் தமிழ்நாடு தமிழ்மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பினைத் தோற்று வித்து, அதன்ஆண்டு விழாவுக்கென “கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்! கிழித் தெறியத் தேடுகாண் பகைக்கூட்டத்தை” என்ற பாடல் வரிகளைப்  அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று,

“திராவிட நாடு” தொடக்க இதழ் ஒன்றில், “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணாவின் கவனத்தை கவர்ந்தது. 20 வயதில் “சேரன்” என்ற புனைப்பெயரோடு, “முரசொலி” இதழைத் தொடங்கி, “கிழவன் கனவு” என்னும், சீர்திருத்த சிறுகதையினை வழங்கி,

பின்னர் தந்தை பெரியா ரின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணா வின் அன் பிலும் நனைந்து, வளர்ந்து, தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு- கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து – ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணிமணிகள் பலவும் தேடிக்கொணர்ந்து சூட்டி வரும் எனக்கு,

கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும், கிட்டிய வாய்ப்பினை பெருமையாக கருதுகிறேன்.

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற் றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை உலகத் தமிழ் மாநாடுகள். இப்பொழுது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும், பொருள் பொதிந்தவை மட்டுமல்ல, பொருத்தமானவையும், ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞால முதல்மொழி தமிழே என்று நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற் கள் உலக மொழிகளில், சொல் வடிவில், உருத் திரிந்து, பொருள் அளவில் உருத்திரி யாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக உலக மொழி களில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவு பெயர்கள், நான், நீ, அவன் எனும் மூவிடப் பெயர்கள், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் போன்றவை தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின்

Posted on : 23-06-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

- எம்.ரிஷான் ஷெரீப்

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
‘ நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?’
‘ஆமாம். ஆவேன். கண்டிப்பாக’
‘அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?’
‘ஆவேன்’ எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. ‘இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?’ எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, ‘அழாதே’ என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. ‘அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது’ என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

எனதூருக்கு வருவாயா…?

Posted on : 23-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

by எம்.ரிஷான் ஷெரீப்


அன்புடன் சினேகிதனுக்கு …,
பனை மரங்களையும்
பவளப் பாறைகளையும்
பார்த்திடும் ஆவலில் நீ
எனதூர் வரப்போவதாக
மூன்று வாரங்களுக்கு
முன் அனுப்பிய
அஞ்சலட்டை
இன்றென் கரம் சேர்ந்தது !

என்ன செய்ய ?
உள்நாடு தானெனினும் – அதுவும்
பல சாவடிகளில் தரித்தே
வரவேண்டியிருக்கிறது !

யுத்தம் தின்று துப்பி
எச்சிலான எனதூரில்,
சமுத்திரம் உறிஞ்சிக் குடித்து,
வாந்தியெடுத்துயிர் பிழைத்த
மக்களுடன் முகாமினில்
எனது இருப்பு !

நண்பா ,
பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது ‘
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன.

அல்லாஹ் போதுமானவன்!

Posted on : 22-06-2010 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

0

டாக்டர் ஹிமானா செய்யத்

விடிந்தால் நோன்பு இருபத்தேழு.

ஆமினாவுககுத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். இந்தப் பெருநாளைக்கு எப்படியும் ஒரு பவுனில் ஒரு சங்கிலிக்கொத்து போடுவதாக அத்தா வாக்குக் கொடுத்திருந்தார். இந்த வருஷம் 27ஆம் கிழமையில் கிடைக்கும மொத்தத் தொகையையும் அதற்காகவே செலவழிக்க வேண்டும் என்பது அவரது முடிவு.

வயதுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் இன்னும் வரன் வரவில்லை. எவ்வளவு பரம ஏழையாக இருந்தாலும் ஐந்து பவுனும் ஐயாயிரமும் எதிர்பார்க்கும் இந்தக் காலத்தில் மகளை மணமுடித்துக் கொடுக்கும் அவர் முயற்சி தோற்றுக் கொண்டே போகிறது.

பேட்டை மஸ்தான் தான் சொன்னார். ‘வருஷத்துக்கு ஒரு பவுன், இரண்டு பவுனாச்சும் சேர்துக்க ஜக்கரியா’ என்று – ஆமினாவும் அப்போது உடனிருந்தாள். அவர் சென்றதும் ஆமினாவிடம் ஆலோசித்தார் அத்தா. இந்த வருஷத்தில் மொத்தமாக சில ஆயிரங்களை பார்க்க வேண்டுமென்றால் ரமளானைவிட்டால் வேறு வழியில்லை.

பள்ளியில் படிக்கும் ஆமினாவின் தம்பி ஹமீத் காலையில் அத்தாவிடம் ஏதோ கேட்டான்.

அத்தா சொல்லிவிட்டார் ” அக்காவுக்கு சங்கிலி வாங்கிட்டு பாக்கியிருந்தாத்தான் நமக்கு துணிமணி வாங்கனும் ஹமீது. அக்காவை சீக்கிரமே கட்டிக் கொடுத்துடனும் பாரு” என்றார் அவர்.

தம்பி ஒப்புக் கொண்டான். விவரம் தெரிந்தவன். ஆமினாவுக்கு அவன் நடந்து கொண்ட விதம் பிடித்து இருந்தது. அத்தாவிடம் சொல்லி எப்படியாவது அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிடச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பக்கீர்சா தப்ஸ் அடித்துக் கொண்டு ஊருக்குள் நுழையும் சப்தம் கேட்டது. ஒரு மணியாகி விட்டது. ஸஹருக்கு சோறு பொங்கி சுடச்சுட அத்தாவுக்குக் கொடுக்க எண்ணியிருந்தாள் படுக்கையிலிருந்து எழுந்து மளமளவென்று காரியமாற்றினாள். ரசம், துவையலோடு சாப்பாடு ரெடி.

மெல்ல ஹாலுககுள் நுழையம் போதே விழித்துக் கொள்ளும் அத்தா, அருகில் சென்று “அத்தா” என்று அழைத்தும்  அசையாமல் கிடப்பது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல உட்கார்ந்து முதுகைத் தொட்டாள்.

“அம்மாடி” என்று கத்தி விட்டாள். உடலில் அவ்வளவு வெப்பம். ஜக்கரியா ராவுத்தரால் பேசக்கூட முடியவில்லை.

“சும்மா சாதாரண காய்ச்சல்தாம்மா சத்தம் போடாதே” என்றார். “தொழுதுட்டு சும்மாதானே அத்தா படுத்தீங்க?” அதுக்குள்ளே என்னாச்சுத்தா?” – அவள் அரற்றினாள்.

‘வியாதி வர்ரதுக்கு நேரங்காலம் ஏதும்மா?’ என்றவர் எழுந்து உட்கார்ந்தார்.

தலையணைக்கடியில் வைத்திருந்த காய்ச்சல் மாத்திரையை எடுத்து, தண்ணீர் வாங்கி போட்டார். ஏற்கனவே உடல் வலி காய்ச்சல் இருந்திருக்க வேண்டும்.

மாத்திரை போட்டுப் பத்து நிமிடம் ஆகியிருக்காது: திடீரென வாந்தி எடுத்தார்.

பரபரப்பில் ஹமீதும் எழுந்து கொண்டான்.

“அத்தா, டாக்டர்கிட்ட போவமா?” என்றான். “என்னால எழுந்திருக்க முடியலை ஹமீது. போயி தையூப்கான் டாக்டரை கூட்டிக்கிட்டு வா” என்றார்.

ஹமீது ஓடினான்.

அரைமணி நேரத்தில் டாக்டர் வந்து விட்டார். அதற்குள் இரண்டு முறை வாந்தி – மூன்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்ததுமே அந்த அனுபவ டாக்டர் சொல்லி விட்டார். “சீக்கிரம் டவுனுக்கு போயி குளுக்கோஸ் ஏத்துங்கப்பா. உடம்புல தண்ணிச் சத்தே இல்லாமப் போச்சு. எந்த ஊசி மருந்துக்கும் இது கேக்காது”

ஆமினா அழுதாள். ஹமீது குழம்பிப் போய் நின்றான். ஜக்கரியா உடைய ஆரம்பித்தார்.

“யா அல்லாஹ் இது என்ன சோதனை? இன்னக்கிப் பார்த்து இப்படியாச்சே. புள்ளக்கி எப்படியாச்சும் இந்த வருஷ ஜக்காத்துக் காசுல நகை பண்ணிடனும்னு நெனச்சிட்டிருந்தேனே. இந்த நெலமையில் நான் எங்கே போயி காசு கேக்கறது? அவர் உள்ளளுக்குள் மருகினார்.

டாக்டர் திரும்பவும சொன்னார். ” என்ன அத்தாவும் பிள்ளைகளும் மலைச்சுப் போயி நிக்கிறீங்க? சொன்னது காதுல விழுகலயா?”

ஜக்கரியா ஒரு நிலைக்கு வந்தார். ” இப்படிச் சொன்னா எப்படி டாக்டர்? டவுனுக்கு இந்த நேரத்துல டாக்ஸி பிடிச்சு போறதுக்கு வசதியில்லாதவங்க நாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றார் பலகீனமான குரலில்.

அதுக்கில்லேப்பா – நாளைக்கு எம்மேல கொற வரப்படாதுல்ல? அதுக்குத்தான் முன்கூட்டியே சொல்லிக்கறேன்” என்றார்.

ஊசி  போட்டு மருந்து கொடுத்தார்.

கவலையும் கண்ணீருமாய் பொழுது ஓடியது.

விடியற்காலையிலேயே தெருக்களில் பரபரப்புத் தெரிய ஆரம்பித்து விட்டது. கூட்டங்கூட்டமாக ஜக்காத்து வாங்கும் வெளியயூர்காரர்கள் படையெடுப்பு.

ஏதோ வாந்தி, வயிற்றுப்போக்கு டாக்டர் செய்த வைத்தியத்தில் நின்றிருந்தது. ஆனால், நாவறட்சி – சோர்வு இருந்தது.  காய்ச்சலும் குறையவில்லை.

“ஆமினா.. ஆமினாம்மா” என்றழைத்தார் ஜக்கரியா.

என்னத்தா?  இங்கேதானே இருக்கேன்” என்றாள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த ஆமினா.

“சீக்கிரமா கொஞ்சம் வெந்நீர் போடும்மா. குளிச்சிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துடறேன்” என்றார்.

ஆமினா பதறினாள். “இந்த நெலமயில நீங்க வெளியில போக முடியாது அத்தா! சும்மா படுத்துக்கெடங்க..”

“ஸஹருக்கு ஆக்குன சோறு அப்படியே இருக்கு மறு உலைப்பாச்சி கஞ்சியாக்கித் தாரேன்” என்றாள்.

ஜக்கரியா மறுத்து விட்டு எழ முயன்றார். மடாரென்று சரிந்தார்.

“அத்தா!” என்ற பிள்ளைகளின் கதறலில் தெருவே கூடி விட்டது.

வேறு வழியில்லை! இந்த 27ஆம் கிழமை வருமானம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது! தன்னுடைய ஆசையில் – திட்டத்தில் விழுந்த பேரிடியின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தினறினார் ஜக்கரியா.

பிள்ளைகள் அருகிலிருந்து மெளனமாய் அழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது வீட்டின் வெளியே கார் நிற்கும் சத்தம்.

ஹமீது அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான்.

காரிலிருந்து இறங்கிய அவ்வூரின் பெருந்தனக்காரர் மஹ்மூது ஹாஜியார்” ஏம்பா தம்பி! ஜக்கரிய்யா ராவுத்தர் வீடு இது தானே?” என்றார்.

“ஆமாங்க” என்றான் – இவ்வளவு பெரிய பணக்காரர் தங்கள் வீடுதேடி வந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

இலேசான பயமும் கூட! “உள்ளே வாங்க” என்று பவ்யமாக அழைத்தான்.

உள்ளே வந்த ஹாஜியார், “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்” என்றார்.

ஆயாசத்துடன் படுத்திருந்த ராவுத்தர் அவசரமாக பதில் சொல்லி எழுந்து உட்கார முயன்றார்.

பரவாயில்லே. படுத்துக்கோங்க. இப்பத்தான் டாக்டர் தையூப்கான் நம்ம வீட்டுக்கு ஊசி போட வந்தாரு. ராத்திரி நடந்ததை சொன்னாரு. ஒவ்வொரு வருஷமும் உங்களுக்குத் தந்துட்டுத்தான் மத்தப்பேருக்கு ஜக்காத்து கொடுக்குறது வழக்கமாச்சே.

அதான் நேர்ல வந்து தந்துடலாம்னு வந்தேன். என்றவர் சற்றும் முற்றும் பார்த்தார்.

வறுமையின் கோலமாய் நின்ற அந்த வீடு. வாடி வதங்கிய பிள்ளைகள். ஓரமாய் நின்ற ஆமினா.

“ஏன் பாய். பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடு ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா?” என்று கேட்டார் திடீரென்று.

ஜக்கரியாவுக்கு அழுகையே வந்து விட்டது.

மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

எழுந்து கொண்ட ஹாஜியார் “ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க பாய்! இன்ஷா அல்லாஹ் பெருநாள் கழிச்சி என்ன வந்து பாருங்க. கலியாணத்தை முடிச்சுப் போடுவோம். என்ன?” என்றவாறு சலாம் சொல்லி விடை பெற்றார்.

அவர் ராவுத்திரின் கையில் திணித்து விட்டுச் சொன்ற புதிய பணக்கட்டு அந்த வீட்டை பிரகாசமாக்கியது,

“அல்ஹம்துலில்லாஹ்” என்ற ராவுத்தரின் குரல் வீடெல்லாம் நிறைந்து பரவியது.

Jazakkallahu Hairan

நன்றிhttp://www.chittarkottai.com/himana/sirukathaikal/allah_pothumaanavan.htm

அப்பா

Posted on : 21-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

பாஷா


Father and Childபடைப்பு புறக்கணிக்கும்
முதல் படைப்பாளியாய்…..
கோமாளி குல்லாய்களால்
கைகொட்டி அங்கீகரிக்கப்பட்டு
காசு தரும்
கைகாட்டி பொம்மையாய்……
இருண்ட பால்வெளியில்
உலகுக்கு ஒளியூட்ட
ஒற்றை நட்சத்திரமாய்,
தேவதூதனாய் தோன்றி – பின்
சாத்தனாக சபிக்கப்படும்
சாந்தமாய்……….
அப்பாவென்றொரு உறவு!

எதிர்த்துப் போராடுவதுமில்லை
எட்டி மிதிப்பதுமில்லை
இயலாமையின் இயல்பென
இமைமூடி அழும்
வெட்டிசாய்க்கப்படும் முதிர்மரமும்
வேர்வை வற்றிய அப்பாவும்!

நெஞ்சிலே கருவறைகொண்டு
பிரசவ நாள் மறுத்து
நாடியடங்கும் நொடியிலும்
நினைவை சுமந்து செல்லும்
அங்கீகரிக்கப்படாத தாய்மையது!

பாஷா

நன்றி: www.keetru.com

http://xn--clc0da2dh4e.com/index.php?option=com_content&view=article&id=6774:2010-04-24-10-19-04&catid=2:poems&Itemid=265

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

Posted on : 21-06-2010 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

0

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.

ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.

நன்றி:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2183:2010-01-19-05-39-50&catid=17:diet&Itemid=94

‘சுறா’ தாக்குதல்!

Posted on : 21-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் தாக்குதலில் 5ல் ஒன்று மத்திய புளோரிடாவில் தான் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தான் அதிகளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நாட்களில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் மீன்களின் இனப்பெருக்க நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் சுறாக்கள் உண்ணும் மீன்களின் நடமாட்டத்துக்கும் சுறாக்களின் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏன் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்ற என்றால், அமெரிக்காவில் அது கோடை காலம் என்பதால், அந்த மாதத்தில் கடற்கரையில் அதிக மக்கள் கூடுவதே காரணம் என்கிறது ஆய்வு.


by எம்.ரிஷான் ஷெரீப்

Jazakkallahu Hairan

http://mrishan.blogspot.com/2010/06/blog-post_04.html

முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு நிகழும் அன்றாட பிரச்சினைகள்

Posted on : 19-06-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

by சிராஜ் அப்துல்லாஹ்

முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு நிகழும் அன்றாட பிரச்சினைகள்


  • (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
  • ‘அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
  • ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
  • அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
  • மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
  • எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:1 முதல் 6)

மேற்கண்ட இந்த அருள்மறை வசனங்கள் எழுதவும், படிக்கவும் தெரியாத கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு அனைத்தையும் சூழ்ந்து அறியக்கூடிய ஞானமிக்க இறைவானாகிய அல்லாஹ் விடமிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளாகும். இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவெனில் அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகிறான் என்பதே! (சுப்ஹானல்லாஹ்)

அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).


இங்கு அல்லாஹ் அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை என்று கூறுகிறான் கல்வியைப் பற்றி சிந்தித்திருந்தால் நம் சமுதாயம் இன்று அனைத்து சமூகத்தாரையும் பின்னுக்குத் தள்ளியிருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை இதனால் என்ன தீமைகள், ஏன் நம் சமுதாய  மாணவ மாணவிகள் கல்வியில் பின்தங்கியுள்ளார்கள் என்பதை அலசிப்பார்ப்போம் வாருங்கள்!

தீன்குல மாணவ மாணவிகள் படிப்பில் ஆர்வம் செலுத்தற்கான காரணங்கள் இதோ

நெம்பர் 1 – பெற்றோர்களும் ஆசரியர்களும்

நாம்தான் ஒழுங்காக படிக்கவில்லை நம் பிள்ளைகளாவது படிக்கட்டுமே என்று தவிக்கும் பெற்றோருக்கு சாதாரண நோட்டு புத்தகம் வாங்குவதற்கு கூட வசதிகள் குறைவாக உள்ளது காரணம் பெற்றோரின் கல்வியறிவின்மைதான்.

நம் சமுதாயத்தின் 5ம் வகுப்பு கீழ் படித்த பெற்றோர்களில் பெறும்பாலும் பீடி சுற்றுபவர்களாகவும், பஞ்சர்கடை, பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளராகவும், ரிக்சா இழுப்பவராகவும் குதிரைவண்டி ஓட்டுனர்களாகவும் தான் வாழ்கிறார்கள் மேலும் 6 முதல் 10ம் வகுப்பு மேல் படித்த பெற்றோர்களில் பெறும்பாலானோர் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தினக்கூலிகளாகவும், ஆட்டோ ஓட்டுனராகவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வறுமை இவர்களின் பிள்ளைகளை பாதிக்கிறது!


  • 6ம் வகுப்பு படிக்கும் மகன் வசதியற்ற தன் தந்தையிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித்தர கெஞ்சுகிறான் ஆனால் போதிய பணவசதியன்மையால் தந்தை முகம் சுழிக்கிறார்!
  • 7ம் வகுப்பு படிக்கும் மகள் அடுப்பங்கரையில் இருக்கும் தன் வசதியற்ற தாயிடம் ஒரு நோட்டு புத்தகம் வாங்கித்தர கெஞ்சுகிறாள் ஆனால் தாயோ அப்பாவுக்கு வருமானம் இல்லை இரண்டு நாள் போகட்டும் என்று கூறி பள்ளிக்கு அனுப்புகிறாள்!

மகன் பள்ளிக்கு செல்கிறான் பக்கத்து வகுப்பில் பயிலும் தன் தோழனிடம் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்குகிறான் இதை பார்க்கும் ஆசிரியரோ ஜாமென்ட்ரி பாக்ஸ் கூட வாங்க உனக்கு வக்கில்லையா என்று வகுப்பறையில் எல்லோர் முன்னால் கண்டிக்கிறார் மகனின் மனம் உடைகிறது! கண்களில் கண்ணீர் வடிகிறது, இறுதியாக படிப்பில் கவனம் சிதறுகிறது!

கருவிலிருக்கும் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

Posted on : 17-06-2010 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

0

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இதுத் தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில்,”கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Source http://paalaivanathoothu.blogspot.com/2010/06/blog-post_923.html

பேஸ் புக்கிற்கு இணையான மில்லத் பேஸ் புக்.

Posted on : 13-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

பேஸ் புக் இணையத்தளம் மூலம் நபிகளாரை அவமதிக்கும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பேஸ் புக்கிற்கு மாற்றீடாக பாகிஸ்தான் இளைஞர்கள் `மில்லத் பேஸ் புக்’ எனும் புதிய சமூக வலைப்பின்னல் இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உலகெங்கும் வாழும் சுமார் 1.6 பில்லியன் முஸ்லிம்களுக்குமான ஓர் உறவுப் பாலமாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் தளமாகவும் இந்த இணைய வழி சமூக வலைப்பின்னல் திகழும் என மில்லத் பேஸ் புக்கின் தயாரிப்பாளர்களான பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் ஸஹீர் தலைமையிலான கணினி மென்பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மட்டும் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ் புக்கிற்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டதையடுத்தே இளைஞர்கள் அதிரடியாக இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.முஸ்லிம்கள் மட்டுமின்றி சகல சமூகங்களின் உணர்வுகளையும் மதித்து நடக்கும் அனைவரும் மில்லத் பேஸ் புக்கில் இணைந்து கொள்ள முடியும் எனவும் இந்த இணையதளத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களுக்குள் சுமார் 20,000 இற்கும் அதிகமானோர் இதில் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர்.

பேஸ் புக்கிற்கு நிகரான சகல வசதிகளும் இத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாம் அதிகம் நேசிக்கும் நபிகளாரை அவமதிப்பவர்களுக்கு எதிராகப் போட்டி போடுவதும் அவர்களை தோற்கடிப்பதும் நமது கடமை என உஸ்மான் ஸஹீர் ஏ.எப்.பி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் மட்டுமின்றி பிரிட்டன்,பல்கேரியா, கனடா, சீனா ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் மில்லத் பேஸ் புக்கில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: நீதிபதி இக்பால்!

Posted on : 13-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

நீதித்துறையில் லஞ்சம் மற்றும் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெள்ளிக் கிழமையன்று பதவியேற்றுக் கொண்ட பின், உயர் நீதிமன்ற வளாகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டு நீதிபதி இக்பால் பேசியதாவது:

தமிழக மக்களுக்கு நீதி பரிபாலனை செய்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சென்னை ஐகோர்ட்டு என்பது பாரம்பரியமிக்க நீதி பரிபாலனை செய்துகொண்டிருக்கும் ஒரு கோவிலாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நீதிபதிகளும், வக்கீல்களும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் நீதி வழங்கும் பணிக்காக கடவுளால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

நீதி பரிபாலனை என்பது ஒரு தெய்வீக பணி. ஒவ்வொரு வழக்கிலும் நீதி கிடைத்துவிடாதா? என்பதுதான் ஒவ்வொரு மக்களின் கண்களிலும் தென்படும் நம்பிக்கை. இதை நிறைவேற்றுவதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நல்லொழுக்கம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நாம் செயல்படுவது அவசியம்.

நீதி என்னும் புனித நீரூற்றை ஊழல் என்ற கறை படிந்த கரங்களால் மாசுபடுத்தக்கூடாது. ஒவ்வொரு நீதிபதிகளும் எப்பேற்பட்ட சூழ்நிலைகளிலும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். வக்கீல்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முழுமையான நீதியை வழங்க முடியாது. வழக்கை நீதிபதிகள் நுட்பமாக கவனிக்காத பட்சத்தில், ஒரு நல்ல வாதத்தை வக்கீல்கள் வைக்க முடியாது. நீதிமன்றத்தில் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமானால் நீதிபதிகள், வக்கீல்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.

மர்மட்யூக் (முஹம்மது) பிக்தால்

Posted on : 11-06-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சிராஜ் அப்துல்லாஹ் ஆல்

பெயர் மர்மட்யூக் பிக்தால்

பிறப்பு 1875

இறப்பு 1936

தந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால்

தாயார் மேரி-ஒ-பிரேயின்

சாதனை அல்குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தது

பிக்தால் என்பவர் யார்? முன்னுரை

பிக்தால் அவர்களின் முழுப்பெயர் மர்மட்யூக் பிக்தால் இவர் கிருஸ்தவ தம்பதியினருக்கு பிறந்தவர். பிக்தால் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்லாமல் பத்திரிக்கை நிறுபராகவும், தலைமை ஆசிரியராகவும், அரசியல் தலைவராகவும், மார்க்க மேதையாகவும் இருந்தார்.

பிரிட்டீஷ் அரசாங்கத்தினால் இஸ்லாமியர்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகளை கண்ணெதிரே கண்டு மனம் உறுகி தன் நாட்டையும் கிருத்தவர்களையும் எதிர்த்து குரள் எழுப்பிய மாபெரும் எழுத்தாளன்.  மர்மட்யூக் பிக்தால் ஆக இருந்தவர் இவர் இறுதியாக அல்லாஹ்வின் கருணையினால் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது பிக்தால் ஆக மாறினார்.

வாழ்நாள் சாதனையாக இவர் செய்தது அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகும். இவரைப் பற்றி இங்கு காண்போம்!

பிக்தால் அவர்களின் குடும்பம்

பிக்தால் அவர்களின் குடும்பம் மிகவும் புகழ்பெற்ற இங்கிலாந்து மன்னரான வில்லியம் கான்குயிரர் என்பவரது பாதுகாவரின் பரம்பரையைச் சார்ந்தவர்கள் எனினும் அன்னாரது பெற்றோர் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேலும் கிருஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். தந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால் அவர்களின் மரணம்  மர்மட்யூக் பிக்தாலின் 5ஆம் வயதில் நிகழ்ந்தது பின்னர் தனது ஏழை விதவைத்தாயுடன் இலண்டன் மாநகரத்தில் குடிபெயர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இக்பால் பதவியேற்பு!

Posted on : 11-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.ஒய். இக்பால் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நீதிபதி இக்பாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கோகலே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி இக்பாலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

1951ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி இக்பால் தன்னுடைய கல்லூரி கல்வியையும் சட்டக் கல்வியையும் ராஞ்சி பல்கலைக் கழத்தில் முடித்தார். 1975ஆம் ஆண்டு முதல் ராஞ்சி நகர நீதிமன்றங்களில் வாதாடிய இவர், பின்னர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் ராஞ்சி கிளையில் வாதாடினார். 1990ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதல் ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

Source : http://www.inneram.com/201006118776/justice-iqbal-sworn-in-as-madras-hc-cj

1.6 அங்குல உயரமான மூக்குப் பொடி குப்பியொன்று 821,383 பவுணுக்கு விற்பனை

Posted on : 10-06-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பேரரசர் கியான்லோங்கிற்காக தயாரிக்கப்பட்ட 1.6 அங்குல உயரமான மிகச் சிறிய அலங்கார மூக்குப் பொடி குப்பியொன்று 821,383 ஸ்ரேலிங் பவுணுக்கு விலைபோயுள்ளது. ஹொங்கொங்கிலுள்ள பொன்ஹம்ஸ் ஏல விற்பனை நிலையத்திலேயே மேற்படி குப்பி ஏலத்தில் விடப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டு காலத்தில் சீனாவில் மூக்குப் பொடி பாவனை பிரபலம் பெற்று விளங்கியது. மூக்குப்பொடியை, வெப்பமான காலநிலையிலிருந்து பாதுகாக்கும் வகையில், அது காற்றிறுக்கமான குப்பிகளில் அடைத்து விற்பனை செய்யப்பட் டது. கியான்லோங் பேரரசன் காலத்தில் (1711-1799) க்குப் பொடிக்கு பெரும் கிராக்கி நிலவியது.


Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/06/16-821383.html

காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும்

Posted on : 09-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

Tags: , , , , , ,

0

Posted by ஃபஹீமாஜஹான்

நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்

முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்