Featured Posts

  • Prev
  • Next

“டயானா கொலை” வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக்கறிஞர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் டிரைவர் பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு டிரைவரின் வங்கிக் கணக்கில் திடீ‌ரென அதிகளவிலான பணம் மு‌தலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையில் ஒரு வரி கூட இடம்பெறாததது,

டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகவும் மைக்கேல் தெரிவித்துள்ளார். டயானா கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மைக்கேலின் இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/blog-post_24.html

Write a comment