Featured Posts

  • Prev
  • Next

130 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

ஜோர்ஜியாவிலுள்ள பின்தங்கிய மலைப்பிராந்திய கிராமமொன்றில் வசிக்கும் பாட்டியொருவர் வியாழக்கிழமை தனது 130 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்ஸா கவிசவா என்ற மேற்படி பாட்டி, உலகில் உயிர்வாழும் மிகவும் வயதான நபர் தானே என உரிமை கோரியுள்ளார்.

திபிலிஸி நகரின் மேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சசினோ என்ற கிராமத்தில் 40 வயதான தனது பேரனுடன் அன்ஸா கவிசா வாழ்ந்து வருகிறார்.

தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அன்ஸா கவிசவா, தனது குடும்பத்தினருடன் இணைந்து சோளக்கஞ்சி மற்றும் வாசனையூட்டப்பட்ட இறைச்சி என்பவற்றை உண்டு மகிழ்ந்தார். அவர் போர் மற்றும் புரட்சி என்பவற்றின் போது தனது பிறப்புச் சான்றிதழை இழந்த போதும், அவரது கடவுச்சீட்டு ஆவணங்கள் அவரது வயதை உறுதிப்படுத்துவதாக ஜோர்ஜிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தள்ளாத வயதிலும் சிவப்பு உதட்டுச் சாயத்தை பூசுவதில் ஆர்வம் காட்டும் அன்ஸா கவிசவா விபரிக்கையில், “நான் எப்போதும் ஆரோக்கியமாகவும் வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்து கொண்டும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

உலகில் வயதான நபர்தானே என அன்ஸா கவிசவா உரிமை கோருவதற்கு முன்னர் பிரான்ஸைச் சேர்ந்த இயுஜினி பிளன்சார்ட் என்ற 114 வயது பெண்மணியே உலகின் வயதான நபராக அடையாளங் காணப்பட்டிருந்தார்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/130.html

Write a comment