0
முத்துப்பேட்டையில் சுமார் 22,000 மக்கள் வசித்து வருகின்றனர். பேரும்பாலானோர் முஸ்லிம்களே வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 12 பள்ளிவாசல்கள், 2 மதரஸாக்கள், 11 பாடசாலைகள், 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிறப்பு ஊராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவுகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், வார சந்தை, அரசு பொது நூலகம், இன்டெர்னெட் மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் வழிபாட்டு தளங்களும் உள்ளன.
இங்குள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறையாக கடைபிடித்து வருகின்றனர்.
முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 340 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளது.
முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் படிப்பது, தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.
அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் 70 கி.மீ. தெலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளது.
முத்துப்பேட்டையிலிருந்து தமிழகம் முழவதும் இணைப்பு பேருந்துகள், இரயில்வே வசதியும் அமைந்துள்ளது.
சிறந்த கல்வி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் பயனமையும் வகையில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பொழுதுள்ள நிலையில் கல்வியின் வளர்ச்சி சற்று வளர்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது.
ஆ.நே. பள்ளிதான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.
முத்துப்பேட்டையில் சில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் இன்னும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும





