Featured Posts

  • Prev
  • Next

உன் விழிக் குளத்தில் பூப்பதெல்லாம் கவிதைகளா

Posted on : 10-11-2009 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

flower-1உன் இதய வனத்தில் ஒதுங்கிக்கொள்ள
கொஞ்சம் நிழல் கேட்டேன்
நீயோ உன் இதயத்தையே
பெயர்த்துக் கொடுத்தாய்

இருநீல மலர்களை
சிறுமுகப் பொய்கையில்
பூத்தவளே

உன் விழிக் குளத்தில்
பூப்பதெல்லாம் கவிதைகளா
எனில் அவை என்னைத் தவிர
வேறெவர்க்கும் புரிவதில்லையே

தொகுப்பு:

நன்றி உங்களுக்கு;”அன்புடன் புகாரி

source : http://anbudanbuhari.blogspot.com/

Write a comment