நீங்கள் விசாரிக்கபடும் முன் உங்களை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள் : சுய பரிசோதனை
Posted on : 03-03-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)
Tags: இண்டர்விவ், இஸ்லாம், தகுதி, நடை முறை, நியாயம், வாழ்க்கை
0
ஒரு இண்டர்விவ் நாம் போகிறோம் என்று வைத்துகொள்வோம், அங்கே என்னவெல்லாம் கேட்ப்பார்கள் அதெற்கு எப்படி நாம் பதில் சொல்வது, இப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது , அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டு முதலில் நாம் நம்மை அதற்காக தயார்படுத்தி கொள்வோம்,அந்த குறிப்பிட்ட வேலைக்கு நம்மை தகுதியான ஆளாக மற்றிகொள்வோம்.
வெற்றி பெற்றால் மிகவும் சந்தோசபடுவோம் ஆனால் தோல்வி என்றால் மனவருத்ததோடு அடுத்த வேலையை தேடி அலைவோம் இது இந்த உலகத்தில் நடக்கும் சங்கதி – ஒன்றை விட்டால் அடுத்தது ..
அதை போல் நாம் ஏற்று இருக்கும் இஸ்லாம் இருக்கிறதே,மறுமைக்கான ஒரு இண்டர்விவை இம்மையில் நமக்கு வைக்கிறது … ஆனால் பாருங்கள் அந்த இண்டர்விக்கு என்ன கேள்வி என்பதையும் , அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிகொடுக்கபட்டிருகிறது என்றால் இதை விட சுலபமான இண்டர்விவ் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன ? நிச்சியமாக இல்லை…..
ஆனால் உலக வாழ்விற்காக காலம் பூராக கஷ்டபட்டு செல்வத்தை
சேர்க்கும் நாம் , மறுமை வாழ்விற்கு சேர்க்க வேண்டிய செல்வத்தில் கோட்டை விட்டு விட்டு ஏழையாக இருகிறோம்.
நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கைக்கு நாம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக பிறந்து சில வருடங்களிலே படிக்க ஆரம்பித்து விடுகிறோம். சராசரியாக 20 வருடங்கள் தொடர்து படிக்கிறோம் சிலர் வேளையில் இருந்தாலும் அதிக வருமானத்திற்காக மேலும் படிக்கிறார்கள். ..
உண்மையை சொன்னால் ஒரு இண்டர்விவிர்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்பதற்கு கொடுப்பதில்லை சிந்திக்க கடமை பட்டுளோம் .
உங்கள் தாயின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான்.( 16:78)
ஒன்றுமே இல்லாத , படைக்கபடாத நிலையில் இருந்த நமக்கு ” உயிர் கொடுத்து , உணவு கொடுத்து , மனைவி மக்களை கொடுத்து வாழவைத்த நம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் கஞ்சத்தனம் காட்டுகிறோம் , இஸ்லாத்தில் தூய வடிவம் நமக்கு தெரியவில்லை , எப்படி அல்லாஹ்வை பயப்படுவது என்று தெரியவில்லை, ஏதோ முஸ்லிமா பொறந்துட்டோம் தொழுகிறோம் . ஓதுகிறோம் என்று தான் நம்மில் பலரின் நிலைமை
ஆனால் இஸ்லாம் நம்மை ஏதோ அலுவலகத்தில் வேலை செய்யும் பகுதி நேர ஊழியனாக இருக்க சொல்ல வில்லை , மாறாக நீ வாழ்வதே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது .
இவ்வுலகில் ஒரு கம்பெனியில் பெரிய பதவி வேண்டும் என்று ஆசை படும் நாம் ,மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை படுவதில்லை ஏன் ? அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியவில்லை ..

நாம் ஒரு அமலை நன்மை என்று நினைத்து செய்கிறோம், அது யாரோ நமக்கு தெரிந்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லிகொடுத்தது, சரி என்று செய்து கொண்டு இருக்கிறோம் – மரணம் நமக்கு வருகிறது , நாளை மறுமையில் நிறுத்த படுகிறோம் : மீஜான் திராசு தட்டில் நன்மை மிக குறைவாக இருக்கிறது .., ( நீங்கள் செய்து வந்தது அல்லாஹ் , ரசூல் சொல்லிகொடுகாத செயல் அதலால் நீங்கள் நன்மை என்று எண்ணி செய்த செயல் தூக்கி ஏறிய படுகிறது )
என்ன செய்வீர்கள் ? நஷ்டவாலி யார் ? யாரிடம்போய் நியாயம் கேட்பீர்கள்..?
எந்த ஜாமத்தை அங்கே போய் குறை கூறி கொண்டு இருப்பீர்கள் ..?
காலில் முல் குத்தினால் தாங்க முடியாத நாம் நரகத்தில் …????? நினைத்து பார்க்கவே நடுங்குகிறது …





