Featured Posts

  • Prev
  • Next

சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்!

Posted on : 08-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , ,

0

எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துப் பின்பற்றுவதற்கு விரும்பிய ஒரு மனிதர் பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்:

“இறைத்தூதரின் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையானவற்றை அவர்கள் எவ்விதம் தேடிக்கொண்டனர்?”

பிலால்(ரலி) அவர்கள் கூறத் துவங்கினார்கள்:

தூதரின் கையில் சேமிப்பு என்று எதுவுமே இல்லாதிருந்தது. மரணம் வரை இறைத்தூதரின் தினசரி பிரச்சனைகளை நான் தான் கவனித்து வந்திருந்தேன். முஸ்லிம் சகோதரர்களின் எவராவது சிலவேளைகளில் அவர்களிடத்தில் வருவர். வறுமை காரணமாக பெரும்பாலும் அவர்கள் முக்கால் நிர்வாணத்தில் இருப்பர். அதனைக் கண்ட உடனேயே திருத்தூதர் என்னிடம், “பிலால், இவருக்கு ஒரு துணி ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்று கூறுவார்கள்.

உடனடியாக வெளியே சென்று யாரிடமிருந்தாவது கடன் வாங்கி அம்மனிதருக்கு உணவும் உடையும் ஏற்பாடு செய்து கொடுப்பேன். இது போன்றப் பிரச்சனைகளில் எனது கஷ்டங்களைக் கண்ட ஒரு முஸ்லிமல்லாத வியாபாரி என்னிடம் கூறினார்: “பிலால், நீ இவ்விதம் பலரிடமிருந்தும் கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டாம். எனக்கு அத்தியாவசியத்திற்கும் மேலாக வசதியுண்டு. என்னிடம் மட்டும் நீ கடன் பெற்றுக் கொள். உனக்குத் தேவையான கடன் நான் தருகின்றேன்.”பின்னர் அதன்படியே நான் செய்து வந்தேன். இவ்வாறு அவரிடமிருந்து வாங்கியக் கடனின் அளவு வெகுவாக உயர்ந்திருந்தது. ஒருநாள் உடலைத் தூய்மை செய்துக் கொண்டு, பாங்கு அழைப்பு கொடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வியாபாரியும் மற்றும் சில நபர்களும் கூட்டமாக என்னை நோக்கி வந்தனர்.

“ஏய், அபிசீனியக்காரா!”, விரும்பத்தகாத சுரத்தில் அந்த மனிதர் என்னை அழைத்தார்.

“நான் இதோ இங்கே இருக்கிறேன்”, என்று கூவியவாறு நான் அவர் அருகில் ஓடிச் சென்றேன்.

அந்த மனிதரின் முகத்தில் திருப்தியற்ற பாவனை. கடுமையுடன் அவர் என்னிடம் கேட்கின்றர்:

“இம்மாதம் முடிய இனியும் எத்தனை நாட்கள் உள்ளன?”

நான் கூறினேன், “கிட்டத்தட்ட முடியப்போகின்றது”.

“வெறும் நான்கு தினங்களே மீதம் உள்ளன. எனக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற அன்று நான் நடவடிக்கை எடுப்பேன். நீ பழையது போன்று ஆடு மேய்க்கச் செல்ல வேண்டி வரும்”, அம்மனிதர் மிகக் கடுமையாகக் கோபத்துடன் கூறினார்.

இதனைக் கேட்பவர்கள் என்னைக் குறித்து என்ன நினைப்பர்?. எந்நிலை மோசமாவது நிச்சயம். திருத்தூதரைக் கண்டு இவ்விவரத்தைத் தெரிவித்தப் பின்னர் நான் கூறினேன், “அம்மனிதருக்குக் கொடுக்க என் கையிலும் உங்கள் கையிலும் எதுவுமே இல்லை. எனவே சிறிது காலம் இவ்விடம் விட்டு மாறி நிற்கத் தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். அல்லாஹ் ஒருவழி நமக்குத் திறந்துத் தருவது வரை அது தான் நல்லது”.