Featured Posts

  • Prev
  • Next

பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?

Posted on : 02-02-2010 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

Tags: , , , , ,

2

டாக்டர்.ஜி.ராஜமோகன் Ph.d.,M.A(Phy)

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறினார். காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னுடைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் காரணம் சொன்னார் அந்த வாலிப வனப்பு மிக்க இளைஞன். வேறு ஒரு ரகசியத்தையும் அவர் கூறினார். வேறு பெண்களோடு மிகவும் திருப்தியான உறவைக் பொள்ள முடிவதையும், அவனிடம் பெறும் அனு பவத்திற்காகவே சில குடும்ப பெண்கள் கூட தன்னிடம் வருவதாக சொன்னார்.

இதைப்போலவே மனம் சார்ந்த பிரச்சனை களில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச் சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும்.

பாலுறவு சிக்கல்கள் – இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம். எனவே மன நல ஆலோச கர்கள் எப்படி இப்பிரச்சனையை அணுகுவது என்பதில் நுட்பம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கேட்காத, இடையூறு இல்லாத தனிமையான இடமாக இருப்பது அவசியம். குடும்ப பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாலின்ப சிக்கல் இருக்கிறதா என அறிவது அவசியம்.