Featured Posts

  • Prev
  • Next

மாயவரம் மெது பகோடா

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , ,

0

புவனேஸ்வரி ராமநாதன்.

நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்து விட்டார்கள் என்றால் எங்கள் மாயவரம் பகுதியில் இந்த மெது பகோடாதான் செய்து தருவார்கள். குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்பார்கள். சரியாக 10 நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம். செய்வதும் மிகச் சுலபம். மாலை வேளையில் காபி, டீ, உடன் வைத்து சாப்பிடச் சுவையாக இருக்கும். எங்கள் ஊர் டீக்கடைகளில் இந்த மெது பகோடா ரொம்ப பிரபலம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 2
கடலை மாவு : 100 கிராம்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : வறுக்கத் தேவையான அளவு


செய்முறை:

பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும், பச்சை மிளகாயை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

சூடான எண்ணையில், கலந்து வைத்த மாவை உதிரி, உதிரியாகப் போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இந்த பகோடாவை செய்ய வேண்டும். பகோடா மொறுமொறுவென்று வரும் வரை காத்திராமல்,

முக்கால் பதம் வேகும்போதே எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு பொன் முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த பகோடா பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை கஷ்டமில்லாமலும், ருசித்தும் சாப்பிடுவர்.

Posted by புவனேஸ்வரி ராமநாதன்

Labels: ,

நன்றி : http://maragadham.blogspot.com/2010/08/blog-post_09.html

கிளியனூர் வரலாறு (KILIYANUR)

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : ஊர்

Tags: , , , , , , ,

0

நஞ்சை வளமிக்க தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியினை நிர்வாக வசதிக்காக காயிதேமில்லத் நாகை மாவட்டம் என்று பிரித்தனர்.

அச்சுக்கலையை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்திய டச்சுக்காரர்களின் துறைமுகப் பட்டிணமாகிய தரங்கம்பாடி தாலுக்காவில் காவிரியின் உபநதியாகிய வீரசோழன் ஆற்றின் வடகரையில் உள்ளடங்கி அமைந்த ஊர் தான் கிளியனூர்.

மயிலாடுதுறை தான் அருகிலுள்ள நகர் அரசுடையமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பல்வேறு பள்ளி, கல்லூரி, கல்விச் சாலைகள், நூற்றுக் கணக்கான வர்த்தக நிறுவனங்கள் சூழ்துள்ள அழகிய நகர் தான் மயிலாடுதுறை.

1967 முதல் பொறையாறு வீரப்பாபிள்ளையின் சத்திவிலாஸ் தொடங்கி இன்று அரசுடமையாக்கப்பட்ட போக்குவரத்து பேருந்துகள் வரை மட்டுமின்றி பல்வேறு சிற்றுந்துகள் (மினி பஸ்) வரை கிளியனூருக்கும் மயிலாடுதுறைக்கும் பாலமாக விளங்கி வருகின்றன.

30.10.1953 முதல் கிளியனூர் மின்சார வசதி பெற்ற ஊராக விளங்கி வருகிறது.

1955 ஆண்டு முதல் முற்றிலும் ஊர்ஜமாஅத்தார்களால் கட்டி முடிக்கப்பட்ட லோக்கல் பண்டு மருத்துவமனை இன்று அரசு மருத்துவமனையாக இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகிறது.

கிளியனூர் ஜமாஅத்துக்குச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் தான் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளியனூர் புதுத் தெருவிலும் பிறகு ஐ.எப்.எஸ். மெயின் ரோட்டிலும் இயங்கி வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் 1960க்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு அருகில் கட்டப்பட்டு முதல்வர் கர்மவீரர் காமராஜ் திறந்தார்.

அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் திறந்து வைத்த இடைநிலைப் பள்ளிக்கூடமும் கிளியனூர் ஆற்றங்கரை பாலமும் 1959ல் திறந்து வைக்கப்பட்டது. பிறகு வேளாண்துறை அமைச்சர் மண்ணை நாராயணசாமி அவர்களால் 1972-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியாக ஏற்றம் பெற்று வலிவும் பொலிவும் பெற்று அறிவொளி பரப்பி வருகிறது.